- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ஜோ ரூட்டை பார்த்து இதைத்தான் சொன்னேன்.. அவரு கொஞ்சம் கோபமாகிட்டாரு – பிரசித் கிருஷ்ணா வெளிப்படை

இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் ஐந்தாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான பிரசித் கிருஷ்ணா இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனான ஜோ ரூட்டுடன் வார்த்தை முதலில் ஈடுபட்ட சம்பவம் கடந்த சில நாட்களாகவே சமூக வலைதளத்தில் அதிகளவு பேசப்பட்டு வரும் விடயமாக மாறியுள்ளது. ஏனெனில் அனுபவ வீரரான ஜோ ரூட்டை எதிர்த்து பிரசித் கிருஷ்ணா வார்த்தை பரிமாற்றம் செய்ததும் அதனை ஜோ ரூட் கோபமாக கையாண்டதும் என இந்த போட்டியில் ஒரு பரபரப்பான சம்பவம் அரங்கேறியது.

ஜோ ரூட்டிடம் நான் சொன்னது இதுதான் : பிரசித் கிருஷ்ணா

இந்த தொடர் முழுவதுமே பந்துவீச்சில் சற்று சுமாரான செயல்பாட்டையை வெளிப்படுத்தி வந்த பிரசித் கிருஷ்ணா இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் இந்த ஐந்தாவது போட்டியில் அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகிறார். அதோடு கடந்த சில போட்டிகளாகவே எந்தவொரு ஸ்லெட்ஜிங்கிலும் ஈடுபடாமல் இருந்த அவர் இம்முறை இங்கிலாந்து வீரர்களிடம் சென்று வார்த்தைகளை உதிர்த்தவாறு இருந்தார்.

- Advertisement -

அதிலும் குறிப்பாக இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனான ஜோ ரூட்டுடன் கடுமையான வார்த்தை மோதலில் ஈடுபட்டார். இந்நிலையில் அப்படி ஜோ ரூட்டிற்கு எதிராக அவர் பேசியது என்ன? என்ற கேள்வி அனைவரது மத்தியிலும் இருந்து வருகிறது. அதற்கான விளக்கத்தை தற்போது பிரசித் கிருஷ்ணா வெளிப்படுத்தியுள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது :

நான் ஜோ ரூட் விளையாடிய போது அவரிடம் சென்று “நீங்கள் நல்ல ஷேப்புடன் விளையாடுகிறீர்கள் என்று மட்டும் தான் சொன்னேன்” நான் அப்படி கூறியது அவருக்கு கோபத்தை ஏற்படுத்தி விட்டது என்று நினைக்கிறேன். உடனே அவர் கோபமடைந்து விட்டார். நான் எப்போதெல்லாம் பந்து வீசுகிறேனோ அப்போதெல்லாம் மகிழ்ச்சியாகவே பந்து வீசுகிறேன். அதுமட்டும் இன்றி இம்முறை பந்துவீசும் போது எதிரில் இருக்கும் பேட்ஸ்மேன்களை வார்த்தைகளால் விளையாட வேண்டும் என்று நினைத்தேன்.

- Advertisement -

அப்படி பேசும்போது பேட்ஸ்மன்களுக்கு கவனச்சிதறல் ஏற்படும் அதனை பயன்படுத்திக் கொள்வதுதான் என்னுடைய திட்டமாக இருந்தது. ஆனால் நான் கூடுதலாக இரண்டு வார்த்தைகளை உபயோகித்து விட்டதால் அவர் கோபித்துக் கொண்டார் என்று நினைக்கிறேன். இருந்தாலும் அவர் ஒரு மிகச் சிறப்பான மனிதர். டெஸ்ட் கிரிக்கெட்டை பொருத்தவரை ஜோ ரூட் ஒரு லெஜெண்ட். அவருடன் தனிப்பட்ட முறையில் எந்த மோதலும் கிடையாது என பிரசித் கிருஷ்ணா இந்த விடயத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

இதையும் படிங்க : வெறும் 6 ரன்ஸ்.. பஸ்பால் இங்கிலாந்துக்கு மண்டியிடாத இந்தியா.. சரித்திரம் காணாத மிராக்கிள் சாதனை வெற்றி

ஏற்கனவே இவர்கள் இருவரும் ஐபிஎல் போட்டிகளில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஒன்றாக இணைந்து விளையாடிய வேளையில் இப்படி இவர்கள் இருவருக்குள் ஏற்பட்டுள்ள இந்த நிகழ்வு விமர்சகர் மத்தியிலும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -