இந்திய பவுலர்கள் யாரும் செய்யாத மிகப்பெரிய சாதனையை செய்த பிரசித் கிருஷ்ணா – இது தெரியுமா?

Prasidh-1
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது தற்போது அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதலாவது போட்டி கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி நடைபெற்று முடிந்த வேளையில் இந்திய அணி அந்த போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. அதனைத் தொடர்ந்து பிப்ரவரி 9-ஆம் தேதி நடைபெற்ற 2வது ஒருநாள் போட்டியின் போது இந்திய அணி முதலில் விளையாடி 237 ரன்களை குவித்தது.

INDvsWI

- Advertisement -

அதன்பின்னர் 238 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியால் 193 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதன் காரணமாக மீண்டும் 44 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரை 2 க்கு 0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. அதனைத் தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 3வது ஒருநாள் போட்டி பிப்ரவரி 11-ஆம் தேதி அகமதாபாத் மைதானத்தில் நடைபெற உள்ளது.

இந்நிலையில் கடந்த 2-வது போட்டியில் இந்திய அணி சார்பாக விளையாடிய வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா 9 ஓவர் வீசி 3 மெய்டன்கள் வீசி 12 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அவரது இந்த சிறப்பான பந்து வீச்சு காரணமாக அவருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட்டில் வேறு எந்த ஒரு பவுலரும் செய்யாத அற்புதமான சாதனையை நிகழ்த்தி பெரிய அளவில் கவனத்தை ஈர்த்துள்ளார்.

prasidh

அதன்படி இந்திய அணிக்காக அறிமுகமாகி முதல் 6 போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். இந்திய அணிக்காக கடந்த 2021ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக அறிமுகமாகிய பிரசித் கிருஷ்ணா இதுவரை 6 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடி 15 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதன்மூலம் இந்திய அணிக்காக அறிமுகமாகி முதல் 6 போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இவருக்கு முன்னதாக முதல் 6 போட்டிகளில் 14 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியின் முன்னாள் வீரர்காளான நரேந்திர ஹிர்வானி, அஜித் அகார்கர், பிரவீன் குமார், பும்ரா ஆகியோர் முதலிடத்தில் இருந்தனர். இந்நிலையில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் அவர்களைத் தாண்டி முதல் 6 போட்டிகளில் 15 விக்கெட்டுகள் வீழ்த்தி அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

இதையும் படிங்க : சர்வதேச கிரிக்கெட்டில் யாருமே செய்யாத சாதனையை செய்த சூரியகுமார் யாதவ் – இது தெரியுமா உங்களுக்கு?

ஏற்கனவே கடந்த 2020 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் முடிவடைந்த போது பெங்களூரு அணியின் கேப்டனாக இருந்த விராட் கோலி இந்திய அணியின் மிகச்சிறந்த வருங்கால பவுலராக பிரசித் கிருஷ்ணா மாறுவார் என்று கூறியிருந்த நிலையில் தற்போது அவர் இந்த சாதனையை படைத்துள்ளார். 25 வயதான பெங்களூருவைச் சேர்ந்த பிரசித் கிருஷ்ணா வளர்ந்து வரும் வீரர் என்பதால் நிச்சயம் அவருக்கு தொடர்ந்து இந்திய அணியில் வாய்ப்புகள் கிடைக்கும் என்றும் மென்மேலும் அவர் இதே போன்று சிறப்பாக செயல்படுவார் என்றும் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement