- Advertisement -
இந்திய கிரிக்கெட்

அஜித் அகார்கரின் சாதனையை சேப்பாக்கம் மைதானத்தில் முறியடித்த பிரசித் கிருஷ்ணா – விவரம் இதோ

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்திய இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை மூன்றுக்கு பூஜ்யம் (3-0) என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி 44.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 218 ரன்களை மட்டுமே குவித்தது.

அஜித் அகார்கரின் சாதனையை முறியடித்த பிரசித் கிருஷ்ணா :

அடுத்ததாக விளையாடிய இந்திய அணி 28.4 ஓவர்களில் ஒரு விக்கெட் மட்டும் இழந்து 224 ரன்கள் குவித்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியின் போது இந்திய அணி சார்பாக வேகப்பந்து வீச்சாளரான பிரசித் கிருஷ்ணா அசத்தலான பந்துவீச்சை வெளிப்படுத்தியிருந்தார். இந்த போட்டியில் 8.2 ஓவர்கள் பந்துவீசிய அவர் 23 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றி ஆட்டநாயகன் விருதினையும் வென்றிருந்தார்.

- Advertisement -

இவ்வேளையில் அவர் சேப்பாக்கம் மைதானத்தில் எடுத்த 5 விக்கெட்டுகளின் மூலம் முன்னாள் இந்திய வீரரான அஜித் அகார்கரின் மாபெரும் சாதனை ஒன்றினையும் தகர்த்துள்ளார். அந்த வகையில் அவர் நிகழ்த்திய சாதனை யாதெனில் : சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றுள்ள ஒருநாள் போட்டிகளில் இந்திய வீரராக அதிக விக்கெட்டை ஒரு போட்டியில் கைப்பற்றிய பவுலராக அஜித் அகார்கர் இருந்து வந்தார்.

அஜித் அகார்கர் கடந்த 2002 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியின் போது 34 ரன்களை விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார். அதுவே சேப்பாக்கம் மைதானத்தில் இந்திய பந்துவீச்சாளரின் சிறப்பான பந்துவீச்சாக இதுவரை இருந்தது.

- Advertisement -

இதையும் படிங்க : 3 ஆவது இந்திய பந்து வீச்சாளராக பிரசித் கிருஷ்ணா நிகழ்த்திய மாபெரும் சாதனை – விவரம் இதோ

இவ்வேளையில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 23 ரன்களை விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை எடுத்ததன் மூலம் சேப்பாக்கம் மைதானத்தில் ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுத்த வீரராக பிரசித் கிருஷ்ணா சாதனையை நிகழ்த்தியுள்ளார். அதோடு இந்த மைதானத்தில் வெளிநாட்டு வீரர்களாக ரவி ராம்பால் மற்றும் ஆகிப் ஜாவித் ஆகியோர் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -