3 ஆவது இந்திய பந்து வீச்சாளராக பிரசித் கிருஷ்ணா நிகழ்த்திய மாபெரும் சாதனை – விவரம் இதோ

Prasidh Krishna
- Advertisement -

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியானது ஜூன் 20-ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியிலும் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அந்த வகையில் நடைபெற்று முடிந்த இந்த ஆட்டத்தில் டாசில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

3 ஆவது இந்திய பவுலராக மாபெரும் சாதனை நிகழ்த்திய பிரசித் கிருஷ்ணா :

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய அந்த அணி இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் 44.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 218 ரன்களை குவித்தது. பின்னர் 219 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி 28.4 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 224 ரன்கள் குவித்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியின் போது இந்திய அணி சார்பாக பந்துவீசிய முன்னணி வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா 8.2 ஓவர்கள் பந்துவீசி 2 மெய்டன் உட்பட 23 ரன்கள் விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அவர் எடுத்த இந்த 5 விக்கெட்டுகளின் மூலம் மூன்றாவது இந்திய பந்துவீச்சாளராக ஒரு மாபெரும் சாதனை நிகழ்த்தியுள்ளார். அதுகுறித்த தகவல் வெளியாகி அனைவரது மத்தியிலும்ம் கவனத்தை ஈர்த்துள்ளது.

அந்த வகையில் அவர் நிகழ்த்திய சாதனை யாதெனில் : நேற்றைய போட்டியின் போது அவர் எடுத்த 5 விக்கெட்டுகளும் ஆப்கானிஸ்தான் பேட்டிங் ஆர்டரின் டாப் 5 வீரர்களுடையது. அப்படி தொடர்ச்சியாக டாப் 5 வீரர்களின் விக்கெட்டுகளையும் பிரசித் கிருஷ்ணா வீழ்த்தியிருந்தார்.

- Advertisement -

இதையும் படிங்க : ஒருநாள் போட்டிகளில் ராகுல் டிராவிடை பின்னுக்கு தள்ளி ரோஹித் சர்மா – நிகழ்த்திய சாதனை

இதற்கு முன்னதாக ஒருநாள் போட்டிகளில் இந்திய அணியின் பந்து வீச்சாளர்களான மனோஜ் பிரபாகர்(1994) மற்றும் முகமது ஷமி(2023) ஆகியோர் மட்டுமே எதிரணியின் முதல் 5 வீரர்களை தொடர்ச்சியாக ஆட்டமிழக்க வைத்திருந்தனர். அந்த வகையில் எதிரணியின் முதல் 5 வீரர்களை தொடர்ச்சியாக வீழ்த்திய மூன்றாவது பந்துவீச்சாளர் என்ற சாதனையை பிரசித் கிருஷ்ணா நிகழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

Advertisement