ரிசர்வ் வீரராக இங்கிலாந்து சென்றவருக்கு இந்திய அணியில் இடம் – யார் அந்த வீரர் தெரியுமா ?

Bumrah

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் மூன்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று இந்த தொடரில் சமநிலை வகிக்கின்றன. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி ஓவல் மைதானத்தில் நாளை செப்டம்பர் 2 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.

indvseng

இந்த தொடரில் இதுவரை நடைபெற்று முடிந்துள்ள மூன்று போட்டிகளிலும் அஸ்வின் சேர்க்கப்படாததால் நாளைய போட்டியில் நிச்சயம் அவர் விளையாடுவார் என்று தெரிகிறது. ஏனெனில் ஏற்கனவே முதல் மூன்று போட்டிகளில் அதில் சேர்க்கப்படாத போது பெரிய விமர்சனங்கள் கிளம்பிய நிலையில் நாளைய போட்டியில் நிச்சயம் அஷ்வின் விளையாடுவார் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

அதேபோன்று இந்திய அணியில் மேலும் ஒரு பவுலர் நான்காவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் இணைக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி வெளியாகியுள்ளது. அதன்படி ரிசர்வ் பவுலராக இங்கிலாந்து சென்ற இந்திய அணியின் இளம் வீரர் பிரசித் கிருஷ்ணா 4வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

prasidh-krishna

ஏற்கனவே அண்மையில் இந்தியாவில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கெதிரான தொடரில் அறிமுகமான அவர் சிறப்பாக பந்துவீசியதன் காரணமாக தற்போதைய இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இடம்பிடித்திருந்தார். இந்நிலையில் தற்போது அணியில் உள்ள எந்த ஒரு வேகப்பந்து வீச்சாளரையும் மாற்றாமல் அவரை அணியில் சேர்த்துள்ளது அனைவருக்கும் ஆச்சரியமாக அமைந்துள்ளது.

- Advertisement -

prasidh krishna 1

இருப்பினும் அவர் பிளேயிங் லெவனில் விளையாடுவாரா ? என்று கேட்டால் அது சந்தேகம்தான். ஏனெனில் பும்ரா, சிராஜ், முகமது ஷமி மற்றும் இஷாந்த் சர்மா (அ) ஷர்துல் தாகூர் ஆகிய நால்வரே வேகப்பந்து வீச்சாளராக விளையாடுவார்கள் என்பதனால் இவருக்கு வாய்ப்பு கிடைப்பது என்பது கடினம் என்றே தோன்றுகிறது.

Advertisement