ஐபிஎல் தொடரில் சென்னை அணி விளையாட ஆரம்பித்த காலத்திலிருந்தே தமிழக வீரர்கள் சிஎஸ்கே அணிகள் விளையாடுவது என்பது மிகச் சொற்பமான அளவிலேயே இருந்து வருகிறது. குறிப்பாக முரளி விஜய், அஸ்வின், பத்ரிநாத், பாலாஜி, அனிருதா ஸ்ரீகாந்த், ஜெகதீசன் ஒருசிலருக்கு மட்டுமே ஆடும் பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைத்தது. மேலும் கடந்த பல ஆண்டுகளாக உள்ளூர் தொடரில் அசத்தலாக விளையாடி வரும் ஹரி நிஷாந்த், சாய் கிஷோர் போன்ற வீரர்கள் சென்னை அணியால் தேர்வு செய்யப்பட்டாலும் அவர்களுக்கு வாய்ப்பு அளிக்காமல் வெளியிலேயே அமரவைக்கப்பட்டனர்.

இப்படி பல ஆண்டுகளாக தமிழக வீரர்களுக்கு இடம் கொடுக்காமல் இருந்து வரும் சிஎஸ்கே மீது எப்போதும் ஒரு விமர்சனம் இருந்து வருவது உண்மைதான். அந்த வகையில் இந்த ஆண்டும் ஒரு சில தமிழக வீரர்கள் சிஎஸ்கே அணியில் இருந்தாலும் அவர்களை தவிர்த்து தற்போது மும்பை மாநிலத்தைச் சேர்ந்த 22 வயது இளம் வீரர் ஒருவருக்கு இன்று குஜராத் அணிக்கு எதிராக சென்னை அணியில் வாய்ப்பு கிடைத்துள்ளது ரசிகர்களை கோபப்பட வைத்துள்ளது என்றே கூறலாம். இருப்பினும் அவர் குறித்த முழுவிவரத்தை நாங்கள் இங்கே உங்களுக்காக தொகுத்து வழங்கியுள்ளோம்.
அதன்படி 22 வயதான மும்பை வீரர் பிரசாந்த் சோலங்கி 2021ஆம் ஆண்டு விஜய் ஹசாரே டிராபி அறிமுகமாகி அறிமுக போட்டியிலேயே 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருந்தார். வலது கை லெக் ஸ்பின்னரான அவர் தொடர்ந்து சிறப்பாக பந்துவீசி வருவதன் காரணமாக சென்னை அணியின் பிளேயிங் லெவனில் இடம்பிடித்துள்ளார் என்று கூறப்படுகிறது.

மும்பை அணிக்காக டொமஸ்டிக் கிரிக்கெட் சிறப்பாக செயல்பட்டு வரும் அவர் சி.எஸ்.கே அணிக்கு நெட் பவுலராகவும் இருந்துள்ளார். இந்நிலையில் இம்முறை ஒரு கோடியே 40 லட்சம் ரூபாய்க்கு சென்னை அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ள அவர் பெரிய அளவு அனுபவம் இல்லை என்றாலும் உள்ளூர் கிரிக்கெட்டில் தனது லெக் ஸ்பின் மூலம் அசத்தி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி சிஎஸ்கே வின் பயிற்சி கேம்ப்பிலும் இவர் சிறப்பாக செயல்பட்டு வந்துள்ளார்.
எனவே இவருக்கு குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் ஆடும் பிளேயிங் லெவனில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதோடு பயிற்சியின்போது தோனியும் இவரிடம் நிறைய ஆலோசனைகளை கொடுப்பது, அவரின் பந்துகளை எதிர்கொள்வது என தனி கவனத்துடன் பயிற்சியை அளித்தால் நிச்சயம் அவரிடம் நல்ல திறமை உள்ளதாக தெரிகிறது.
இதையும் படிங்க : 19 வயது இலங்கை வீரருக்கு ஐ.பி.எல் தொடரில் அறிமுக வாய்ப்பை வழங்கிய தோனி – யார் இவர்?
ஒருபுறம் இளம் வீரருக்கு வாய்ப்பு கொடுப்பது மகிழ்ச்சிதான் என்றாலும் மற்றொருபுறம் தமிழக வீரர்களுக்கு மட்டும் வாய்ப்பு கொடுக்காமல் வெளிமாநிலத்தில் இருந்து வரும் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுப்பது சரிதானா என்பது போன்ற சில கேள்விகளும் எழத்தான் செய்கிறது.



