19 வயது இலங்கை வீரருக்கு ஐ.பி.எல் தொடரில் அறிமுக வாய்ப்பை வழங்கிய தோனி – யார் இவர்?

Pathirana
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் பதினைந்தாவது ஐபிஎல் தொடரில் சென்னை அணி அதிகாரப்பூர்வமாக பிளே ஆப் சுற்றில் இருந்து வெளியேறி உள்ளதால் கடைசியாக நடைபெற இருக்கும் இந்த இரண்டு போட்டியிலாவது அணியில் மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் என்று குஜராத் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் போட்டியில் சென்னை அணியில் நான்கு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

CSK Ms DHoni

- Advertisement -

அதில் இரண்டு வீரர்களுக்கு ஐபிஎல் தொடரில் அறிமுகம் வாய்ப்பினையும் தோனி வழங்கியுள்ளார். அதன்படி கடந்த போட்டியில் விளையாடிய இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் தீக்ஷனாவிற்கு பதிலாக மதிஷா பதிரானா என்கிற இலங்கையை சேர்ந்த ஒரு 19 வயது வேகப்பந்து வீச்சாளருக்கு சென்னை அணிக்காக விளையாடும் வாய்ப்பினை தோனி வழங்கியுள்ளார்.

19 வயது மட்டுமே நிரம்பிய இந்த பதிரானா யார் என்பது குறித்த தெளிவான விளக்கத்தை நாங்கள் இங்கே உங்களுக்காக தொகுத்துள்ளோம். அதன்படி இலங்கையில் கண்டியில் பிறந்த இவர் இந்த ஆண்டு நடைபெற்று முடிந்த 19 வயதுக்குட்பட்டோர் உலக கோப்பையில் இலங்கை அணிக்காக 4 போட்டிகளில் விளையாடி 7 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

pathirana

அதிலும் குறிப்பாக இவரது பந்துவீசும் ஸ்டைல் அப்படியே மலிங்காவை போன்று இருப்பதனால் இவரை அனைவரும் குட்டி மலிங்கா என்றும் அழைப்பதுண்டு. இருப்பினும் லசித் மலிங்காவை விட பந்துவீச்சில் சற்று கூடுதலான வேகத்தில் வீசும் இவரின் மீது ஏகப்பட்ட எதிர்பார்ப்பு உள்ளது. 19 வயதுக்கு உட்பட்டோர் உலக கோப்பை தொடரின் போது 175 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசி அதிவேக பந்துவீச்சாளர் என்ற ஒரு சாதனையையும் படைத்தார்.

- Advertisement -

அதன் பின்பு டெக்னிக்கல் கோளாறு காரணமாகவே இந்த தவறு நடந்ததாகவும் ஐசிசி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இப்படி 19 வயதிலேயே உலகினை திரும்பிப் பார்க்க வைத்த இவர் ஒரு சில டி20 லீக் போட்டிகளிலும் விளையாடி உள்ளார். இந்நிலையில் அவரை கடந்த ஆண்டே சிஎஸ்கே அணி வநெட் பவுலராக தேர்வு செய்த சென்னை அணி அவரை இந்தியா வரவழைத்து பயிற்சியை மேற்கொள்ள வைத்தது.

இதையும் படிங்க : நெருப்பின்றி புகையாது ! என்னதான் ஆச்சு நம்ம சிஎஸ்கேவுக்கு – ரசிகர்கள் சந்தேகம், வெளியான பகீர் ரிப்போர்ட்

அதனை தொடர்ந்து அவரை அடிப்படையான தொகையான 20 லட்ச ரூபாய்க்கு வாங்கி அணியில் வைத்திருந்தது. தற்போது ஆடம் மில்னேவிற்கு பதிலாக மாற்று வீரராக இணைந்த அவர் வெகு விரைவாகவே சிஎஸ்கே அணிக்காக அறிமுகமாகியுள்ளது பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement