நெருப்பின்றி புகையாது ! என்னதான் ஆச்சு நம்ம சிஎஸ்கேவுக்கு – ரசிகர்கள் சந்தேகம், வெளியான பகீர் ரிப்போர்ட்

CSK-1
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடரில் 4 கோப்பைகளை வென்று 2-வது வெற்றிகரமான ஐபிஎல் அணி என்ற பெயருடன் நடப்பு சாம்பியன் அந்தஸ்துடன் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் 5-வது முறையாக கோப்பையை வென்று சாம்பியன் பட்டத்தை தக்க வைக்கும் என அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் ஆரம்ப முதலே அந்த அணிக்குள் நிகழ்ந்த பல குளறுபடியான நிகழ்வுகளால் தொடர் வெற்றிகளை சந்தித்த அந்த அணி புள்ளி பட்டியலில் 9-வது இடத்தை பிடித்து வரலாற்றில் 2-வது முறையாக 2020க்கு பின் ப்ளே ஆப் சுற்றுக்கு கூட செல்ல முடியாமல் மீண்டும் ஒரு அவமானத்தைச் சந்தித்தது. முதலில் அந்த அணி 14 கோடிக்கு நம்பி வாங்கிய தீபக் சாஹர் காயத்தால் விலகியது ஆரம்பத்திலேயே பின்னடைவை ஏற்படுத்தியது.

CSK MS Dhoni Ravindra Jadeja

- Advertisement -

அதைவிட தொடர் துவங்க ஒருசில நாட்கள் முன்பாக காலம் காலமாக வகித்து வந்த கேப்டன்ஷிப் பதவியை 40 வயதைக் கடந்து விட்டதால் வருங்காலத்தை கருத்தில்கொண்டு தேவையின்றி அனுபவமே இல்லாத ரவிந்திர ஜடேஜாவிடம் எம்எஸ் தோனி வழங்கியது பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது. ஏனெனில் ஜடேஜா தலைமையில் வரலாற்றில் முதல் முறையாக முதல் 4 போட்டிகளில் வரிசையாக தோற்ற சென்னையின் ப்ளே ஆப் வாய்ப்பு அப்போதே 90% பறிபோனது.

சொதப்பிய சென்னை:
அதைவிட ஆல்-ரவுண்டராக அசத்திய ரவீந்திர ஜடேஜா அனுபவமில்லாத கேப்டன்சிப் அழுத்தம் காரணமாக பேட்டிங் பவுலிங் என அனைத்திலும் சொதப்பியதால் அந்த பொறுப்பே வேண்டாமென்று மீண்டும் தோனியிடமே பாதி சீசனிலையே வழங்கினார். அந்த வகையில் களத்தில் பல தரமான முடிவுகளை எடுத்த தோனி கேப்டன்ஷிப் விஷயத்தில் தவறான முடிவு எடுத்தது அம்பலமானது. அதற்கிடையில் ஏற்கனவே ஆடம் மில்னே போன்ற பவுலர்கள் காயத்தால் விலகிய நிலையில் 16 கோடிக்கு தக்க வைக்கப்பட்ட ரவீந்திர ஜடேஜாவும் காயத்தால் விலகினார் என்ற அறிவிப்பு மேலும் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது.

அத்துடன் காலம் காலமாக அபாரமாக செயல்பட்டு கடந்த 2021இல் சிறப்பாக செயல்பட தவறினார் என்பதற்காக முதலில் காயத்தால் விலகினார் என அறிவிக்கப்பட்ட சுரேஷ் ரெய்னாவை அதன்பின் மொத்தமாக சென்னை அணி நிர்வாகம் கழற்றி விட்டது. அதேபோன்ற ஒரு நிலைமைதான் ஜடேஜாவுக்கு ஏற்பட்டுள்ளதாக நிறைய ரசிகர்கள் சந்தேகப்பட்டு அடுத்த வருடம் அவரை சென்னை அணியில் பார்க்க முடியாது என்று வெளிப்படையாகவே சமூக வலைதளங்களில் பேசினார்கள். குறிப்பாக ரெய்னாவை சமூகவலைதளத்தில் எப்படி பின் தொடர்வதை சென்னை நிறுத்தியதோ அதேபோல் ஜடேஜாவை பின்தொடர்வதை நிறுத்தியதையும் ரசிகர்கள் ஆதாரமாக காட்டினார்கள்.

- Advertisement -

ராயுடு ஓய்வு:
இருப்பினும் அது உண்மையில்லை என மறுத்த சென்னை ரசிகர்கள் உண்மையாகவே பெங்களூருவுக்கு எதிரான போட்டியின்போது ஜடேஜா காயமடைந்த புகைப்படங்களை பதிலுக்கு ஆதாரமாகக் காட்டினார்கள். மேலும் ஜடேஜாவுடன் தங்களுக்கு எந்த விதமான பிரச்சனையும் இல்லை என தெரிவித்த சென்னை நிர்வாக இயக்குனர் காசிவிஸ்வநாதன் வரும் வருடங்களில் நிச்சயம் அவர் விளையாடுவார் என்று உறுதிபட தெரிவித்தார். அந்த நிலையில் 2018 முதல் சென்னைக்காக விளையாடி வரும் மற்றொரு நம்பிக்கை நட்சத்திரம் அம்பத்தி ராயுடு ஐபிஎல் 2022 தொடருடன் ஓய்வு பெறுவதாக ட்விட்டரில் அறிவித்தாலும் அடுத்த அரை மணி நேரத்தில் அந்த அறிவிப்பை டெலீட் செய்தார்.

Rayudu

அதைவிட ஆச்சரியமாக அடுத்த அரை மணி நேரத்தில் மீண்டும் பதறியடித்துக்கொண்டு வந்த சென்னை அணி நிர்வாக இயக்குனர் காசி விஸ்வநாதன் ராயுடு ஓய்வு பெறவில்லை என்றும் இந்த வருடம் பேட்டிங்கில் சுமாராக செயல்பட்டதால் அப்படி பதிவிட்டிருக்கலாம் என்றும் கூறி அந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். குறிப்பாக பேட்டிங் பற்றி அந்த அணி நிர்வாகம் கேள்வி எழுப்பியதால் அதிருப்தியடைந்த ராயுடு அந்த கோபத்தில் தான் ஓய்வு அறிவிப்பை வெளியிட்டதாகவும் அதன்பின் அதை அணி நிர்வாகம் சமாதானம் செய்ததால் டெலிட் செய்து விட்டதாகவும் பலரும் பேசுகின்றனர்.

பகீர் ரிப்போர்ட்:
மொத்தத்தில் 2021இல் சுரேஷ் ரெய்னா கழற்றி விட்டது, 2022இல் ஜடேஜா காயத்தால் விலகல், ராயுடுவின் டெலீட் செய்யப்பட்ட ஓய்வு அறிவிப்பு என சமீப காலங்களாக சென்னை அணிக்குள் நெருப்பின்றி புகையாக என்பது போல் பல சலசலப்புகள் பனிப்போர் போல மறைமுகமாக நடைபெற்று வருகிறது. இதனால் ஒரு அணியை கட்டுக்கோப்பாக வெற்றி பாதையில் வழிநடத்தக்கூடிய எம்எஸ் தோனி தலைமையிலான சென்னைக்கு என்னதான் ஆச்சு என்று பல ரசிகர்களும் சந்தேகமாக சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்புகின்றனர்.

இந்நிலையில் சென்னைக்கு அணிக்குள் சலசலப்பு இருப்பது உண்மைதான் என்று பெயர் வெளியிட விரும்பாத ஒரு நிர்வாகி உறுதிபடுத்தும் வகையில் பகீர் ரிப்போர்ட் வெளியிட்டுள்ளார். இது பற்றி அவர் பேசியது வருமாறு. “பொதுவாக ஒரு பெரிய குடும்பத்தில் ஒரு சில பிரச்சனைகள் இருப்பது சகஜமானதே. அது போல் நாங்களும் சிறு சிறு பிரச்சனைகளை சந்தித்து வருகிறோம். இருப்பினும் அதிலிருந்து வெளியே வருவோம். அதை தீர்ப்பதற்கான வழிகளும் எங்ககளிடம் உள்ளன” என்று கூறினார்.

Advertisement