ஜான்டி ரோட்ஸ்யை தாண்டி ஆர். ஸ்ரீதரை மீண்டும் பீல்டிங் கோச்சாக தேர்வு செய்ய இதுதான் காரணம் – எம்.எஸ்.கே பிரசாத்

Rohdes
- Advertisement -

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரி சில தினங்களுக்கு முன்னர் நியமிக்கப்பட்டார். அதனை தொடர்ந்து இந்திய அணி பேட்டிங், பவுலிங் மற்றும் பில்டிங் பயிற்சியாளர்களை தேர்வுக்குழு தலைவர் எம் எஸ் கே பிரசாத் தலைமையிலான தேர்வுக்குழு தேர்வு செய்யும் என்று அறிவிக்கப்பட்டது.

Prasad

- Advertisement -

இந்நிலையில் கடந்த சில நாட்களாக இந்த தேர்வு குழு இதர பயிற்சியாளர்களுக்கான நேர்காணலை நடத்தியது. இதன் முடிவில் பந்துவீச்சு பயிற்சியாளராக பரத் அருணும், பீல்டிங் பயிற்சியாளராக ஸ்ரீதரும் தொடர்கிறார்கள். இதற்கு முன்பு பேட்டிங் பயிற்சியாளராக சஞ்சய் பாங்கர் இருந்தார். அவர் தற்போது மாற்றப்படுகிறார்.

இந்நிலையில் ஜான்டி ரோட்ஸ்யை தாண்டி ஸ்ரீதரை மீண்டும் இந்திய அணியின் பீல்டிங் பயிற்சியாளராக தேர்வு செய்ததன் காரணத்தை தேர்வுக்குழு தலைவர் எம் எஸ் கே பிரசாத் தெரிவித்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டதாவது : ஜான்டி ரோட்ஸ் சிறந்த பீல்டர் தான் இருப்பினும் இந்திய அணியின் பீல்டிங் கடந்த சில ஆண்டுகளாக சிறப்பாக உள்ளன. ஸ்ரீதர் பீல்டிங் பயிற்சி அளிக்கும் விதம் எங்களுக்கு திருப்தி அளிக்கிறது.

Sridhar

மேலும் அவரது பயிற்சியின் கீழ் வீரர்கள் மிகச் சிறப்பாக பீல்டிங் செய்து வருவதை நாம் பார்த்து வருகிறோம். எனவே மீண்டும் அவரை பயிற்சியாளராக மாற்றினால் இன்னும் அணியிலுள்ள புரிந்துணர்வு அதிகமாகி மேலும் அனைவரும் பீல்டிங் முன்னேற்றம் அடைவார்கள் என்பதை கருத்தில் கொண்டே மீண்டும் ஸ்ரீதரை பீல்டிங் பயிற்சியாளராக நியமித்தோம். என்று தேர்வுக்குழு தலைவர் பிரசாத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement