தோனியின் எதிர்கால திட்டம் இதுதான். அவர் அதில் உறுதியாக இருக்கிறார் – முன்னாள் தேர்வுக்குழு தலைவர் பேட்டி

- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் நட்சத்திர வீரருமான தோனி தற்போது வரை தனது ஓய்வு குறித்து ரசிகர்களிடமும் கிரிக்கெட் வாரியத்திடம் தெளிவாக தெரிவிக்காமல் இருக்கிறார். உலக கோப்பை தொடரில் செமி பைனல் போட்டிக்குப் பின்னர் எட்டு மாதங்களாக தற்போது வரை அவர் எந்த ஒரு கிரிக்கெட்டும் ஆடவில்லை.

dhoni

- Advertisement -

இதன் காரணமாக பிசிசிஐ அவரது பெயரை ஒப்பந்த பட்டியலில் இருந்து நீக்கியது. ஆனால் உலக கோப்பை தொடர் முடிந்தவுடன் அவர் தனது ஓய்வினை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. அதையெல்லாம் செய்யாமல் நேரடியாக கிரிக்கெட்டிற்கு விடுப்பு எடுத்து மைதானத்திற்கு வெளியே சில வேலைகளை செய்யச் சென்றுவிட்டார் தோனி.

ஒப்பந்தத்திலிருந்து பெயர் நீக்கப்பட்ட பின் அவரது இந்திய கிரிக்கெட் வாழ்க்கை அவ்வளவுதான் என ரசிகர்கள் நினைத்தனர். இந்நிலையில் 2020 ஆம் ஆண்டுக்கான டி20 உலக கோப்பை தொடர் இன்னும் சில மாதங்களில் நடக்க உள்ளது. ஐபிஎல் தொடரில் நன்றாக துவங்கி விட்டால் அவருக்கு மீண்டும் இடம் கிடைக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். ஏனெனில் ஏற்கனவே இருக்கும் இந்திய விக்கெட் கீப்பர்கள் சொதப்பி வருகின்றனர்.

Dhoni-1

இதன் காரணமாக ஐபிஎல் தொடரில் நன்றாக ஆடும் பட்சத்தில் தோனி இந்திய அணியில் மீண்டும் இடம் பிடிக்கலாம் என்று தெரிகிறது. இந்நிலையில் தோனி தனது எதிர்காலம் குறித்து தன்னிடம் தெளிவாக கூறியதாக முன்னாள் தேர்வு குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது :

- Advertisement -

தோனி தனது விஷயத்தில் தெளிவாக இருக்கிறார். அவரது கிரிக்கெட் எதிர்காலம் குறித்து என்னிடமும் அணி நிர்வாகத்திடமும் தெளிவாகக் கூறிவிட்டார். ஆனால் அதனை தற்போது வெளியே கூற முடியாது என்றும் மேலும் மிகவும் ரகசியமான ஒன்று என்றும் கூறியுள்ளார் எம்எஸ்கே பிரசாத்.

Prasad

இந்நிலையில் புதிய தேர்வுக்குழு தலைவராக மாறியுள்ள சுனில் ஜோஷி தோனியின் இடத்தை எவ்வாறு கையாளப்போகிறார் என்பதனை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Advertisement