தோனிக்கு இனிமேல் வாய்ப்பே கிடையாது. அதற்கு காரணம் இதுதான்- ஓப்பனாக பேசிய தேர்வுக்குழு தலைவர் பிரசாத்

Prasad
- Advertisement -

இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணி நேற்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த டி20 அணியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தோனிக்கு வாய்ப்பு மறுத்தது குறித்து பல சர்ச்சைகள் எழுந்தன.

dhoni

- Advertisement -

இந்நிலையில் அதற்கு செய்தியாளர்களிடம் பதிலளித்த இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் தோனி குறித்து பகிர்ந்து கொண்டதாவது : உலக கோப்பைக்கு பின்பு தோனி எந்த ஒரு தொடர்பிலும் இதுவரை விளையாடவில்லை. எனவே ரிஷப் பண்ட்டை இப்போது ஊக்கப்படுத்தி அவருக்கான வாய்ப்புகளை நாங்கள் வழங்கி வருகிறோம்.

மேலும் அவருக்கு அளிக்கப்பட்ட வாய்ப்புகளில் ஓரளவுக்கு அவர் சிறப்பாகவே செயல்பட்டு உள்ளார். எனினும் அவர் தான் எங்களது முதல் விக்கெட் கீப்பிங் சாய்ஸ் அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு அளிக்கப்படும். இது இந்திய அணியின் எதிர்காலத்திற்காக எடுக்கப்பட்ட முடிவு மேலும் தோனி இப்பொழுது உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறார். அது அவருடைய விருப்பம் அதேபோல அவர் எப்போது ஓய்வு பெறவேண்டும் என்று நினைக்கிறாறோ அப்போது ஓய்வு பெறட்டும் அது அவருடைய தனிப்பட்ட விருப்பம்.

Pant

எனவேதான் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்ற முறையில் பண்டிற்கு இந்திய அணியில் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்திய அணியின் எதிர்கால திட்டமிடல் படிதான் அவருக்கான வாய்ப்பு வழங்கப்படுகிறது. இனிமேல் தோனிக்கு டி20 அணியில் வாய்ப்புகள் சந்தேகம் என்பது போல பிரசாத் பேசியது குறிப்பிடத்தக்கது.

Advertisement