டெஸ்ட் போட்டியில் பாண்டியா இடம்பிடிக்காததுக்கு இதுவே காரணம். சப்பை கட்டுக்கட்டிய – எம்.எஸ்.கே பிரசாத்

Prasad

இந்திய அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான தொடரை வெற்றிகரமாக முடித்து அடுத்த தொடருக்காக ஆயத்தமாகி வருகிறது. இந்நிலையில் அடுத்ததாக தென் ஆப்பிரிக்கா அணி இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டி நாளை நடைபெறவுள்ளது.

Pandya-1

இந்நிலையில் தற்போது டி20 அணியில் இடம்பிடித்துள்ள ஹார்டிக் பண்டியா டெஸ்ட் போட்டிகளில் இடம்பெறாதது குறித்து இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவர் பிரசாத் விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டதாவது :ஹர்டிக் பண்டியா காயத்திலிருந்து முழுமையாக குணம் அடைந்து விட்டதால் 20 அணியில் தேர்வு செய்தோம்.

மேலும் அவரை டெஸ்ட் தொடரில் விளையாட தேர்வு செய்யாததன் காரணம் யாதெனில் பாண்டியா டெஸ்ட் போட்டியில் விளையாட தகுதியான நபர் தான் இருப்பினும் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடர் இந்தியாவில் நடைபெறுகிறது. எனவே இந்தியாவில் 3 வேகப்பந்து வீச்சாளர்கள் இருந்தால் போதும் என்று நாங்கள் தற்போது கருதுகிறோம்.

Pandya

அதன் காரணமாகவே அணியில் 3 வேகப்பந்து வீச்சாளர்களை மட்டும் தேர்வு செய்தோம். மேலும் தற்போதைய சூழலில் டெஸ்ட் போட்டியில் இந்த தொடருக்கு பாண்டியா தேவையில்லை அடுத்து வரும் போட்டிகளில் பாண்டியா டெஸ்ட் அணிக்கு தேர்வு செய்யப்படுவார். அணியின் நலன்கருதி அவ்வப்போது வீரர்களுக்கு சுழற்சி முறையில் வாய்ப்பு அளிக்கப்படுவதால் இந்த தொடரில் பாண்டியா மறுக்கப்பட்டு உள்ளார் என்று பிரசாத் கூறியது குறிப்பிடத்தக்கது.