தோல்வி குறித்து பேசிய தோனி. இவரை பத்தி மட்டும் ஏன் பேசல – பிரக்யான் ஓஜா ஓபன் டாக்

ojha
- Advertisement -

இந்த ஐபிஎல் தொடர் ஆரம்பத்திலிருந்தே சென்னை அணிக்கு மிக மோசமான தொடராக அமைந்து வருகிறது. வழக்கமாக அனைத்து தொடரிலும் புள்ளிப் பட்டியலின் முதல் இரு இடங்களை ஆக்கிரமித்திருக்கும் சிஎஸ்கே அணி இம்முறை புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

CSK-1

- Advertisement -

0 போட்டிகளில் விளையாடியுள்ள சிஎஸ்கே அணி 7 போட்டியில் தோல்வியடைந்து வெறும் 3 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று 6 புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ளது. இதனால் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த போட்டியில் சிஎஸ்கே பெற்ற தோல்விக்கு பிறகு பேசிய கேப்டன் தோனி இளம் வீரர்களிடம் ஸ்பார்க் இல்லை என்று கூறியிருந்தார்.

இவரின் இந்த கருத்திற்கு முன்னாள் வீரர்கள் பலரும் தங்களது எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான பிரயக்யான் ஓஜா தோனியை குறிப்பிட்டு ஒரு கேள்வி ஒன்றினை எழுப்பியுள்ளார். இளம் வீரர்களிடம் ஸ்பார்க் இல்லை என்று சொன்ன தோனி கேதர் ஜாதவ் குறித்து பேசாதது ஏன் ? என நேரடியாக கேள்வி ஒன்றை எழுப்பினார்.

Dhoni

அதுமட்டுமின்றி இளம் வீரர்கள் என்று தோனி யாரைக் குறிப்பிடுகிறார். ருதுராஜ் மற்றும் ஜெகதீசன் ஆகிய இருவரையும் குறிப்பிட்டு சொல்கிறாரா ? அவர்களுக்கான வாய்ப்பை போதுமான அளவு தோனி வழங்கவில்லை.

Jadhav 1

கேதர் ஜாதவ் குறித்து அவர் நிச்சயம் பேச வேண்டும் எனக்கு தெரிந்து நிச்சயம் தோனி ருதுராஜ் மற்றும் ஜெகதீசன் ஆகியோரை சொல்லி இருக்கமாட்டார் என எண்ணுகிறேன். ஒருவேளை அவர்கள் இருவரையும் குறிப்பிட்டுச் சொல்லி இருந்தால் தோனியின் அந்தக் கருத்திற்கு சார்பாக நான் நிற்கமாட்டேன் எனவும் தெரிவித்துள்ளார்.

Advertisement