கொல்கத்தா அணி இவரை இன்னும் முன்னாடி பேட்டிங் செய்ய அனுப்பினால் இவர் பட்டையை கிளப்புவார் – பிரக்யான் ஓஜா

- Advertisement -

ஐபிஎல் தொடரின் மூன்றாவது போட்டி நேற்று நடைபெற்றது. நேற்றைய போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதிக்கொண்டன. முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 187 ரன்கள் குவித்தது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் ஓபனிங் பேட்ஸ்மேன் ஆக களமிறங்கிய ராணா 56 பந்துகளில் 80 ரன்கள் அடித்து அதிரடி காட்டினார். 4 சிக்சர்கள் மற்றும் 9 பவுண்டரிகள் என நேற்று சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் பந்து வீச்சாளர்களை துவம்சம் செய்தார் .

rana

- Advertisement -

ராணாவை தொடர்ந்து டிரிப்பாதி 29 பந்துகளில் 53 அடித்து கொல்கத்தா அணியின் ஸ்கோரை உயர்த்தினார். ஆனால் ஒரு கட்டத்தில் கொல்கத்தா அணி கடைசி ஓவர்களில் ரஸ்ஸல் மற்றும் மோர்கனை பறிகொடுத்து தடுமாறியது. அப்போது களமிறங்கிய தினேஷ் கார்த்திக் 9 பந்துகளில் 22 ரன்கள் அடித்து கொல்கத்தா அணியின் ஸ்கோரை 180க்கு மேல் உயர்த்தினார். நேற்று தினேஷ் கார்த்திக்கின் ஆட்டம் குறித்து பேசிய ஓஜா :

35 வயதில் தினேஷ் கார்த்திக் இவ்வாறு ஆடுவது மிகவும் வியப்பாக உள்ளது. நிச்சயமாக அவர் கொல்கத்தா அணிக்காக முன்னரே வந்து ஆடவேண்டும். அவர் ஓபனிங் அல்லது ஒன் டவுன் வீரராக களமிறங்க வேண்டும் என்று கூறினார். அப்படி அவர் களம் இறங்கினால் நிறைய நேரம் எடுத்துக்கொண்டு ஆட்டத்தை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவார். அவரிடம் அந்த ஆற்றல் உள்ளது. அப்படி அவர் முன்னரே வந்து ஆடும் பட்சத்தில், அவர் இன்னும் கூடுதலாக பந்துகளை மேற்கொள்ளவார்.

karthik

அப்படி பந்துகளை மேற்கொள்ள மேற்கொள்ள இன்னும் நிறைய ரன்களை நிச்சயமாக ஸ்கோர் செய்வார். மேலும் சூரிய குமார் யாதவை போலவே அதிரடியாக அடித்து ஆடக்கூடிய வீரர் தினேஷ் கார்த்திக் ஆவார் என்றும், எனவே இனிவரும் போட்டியில் கொல்கத்தா அதை கணக்கில்கொண்டு தினேஷ் கார்த்திக்கை முன்கூட்டியே ஆட வைக்க வேண்டும் என்று இறுதியாக கூறி முடித்தார்.

kkr

இரண்டாவது பாதியில் ஆடிய ஹைதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுக்கு 177 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 10 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றது.

Advertisement