டெக்கான் சார்ஜர்ஸ் இருந்திருந்தால் மும்பைக்கு 5 கப் கிடைத்திருக்காது. ரோஹித் கேப்டனான கதையை பகிர்ந்த வீரர்

Rohit Sharma Deccan Chargers
- Advertisement -

மும்பை நகரில் கோலாகலமாகத் தொடங்கிய ஐபிஎல் 2022 கிரிக்கெட் தொடர் வெற்றிகரமான முதல் வாரத்தை எட்டியுள்ளது. இந்த தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை அணி இதுவரை பங்கேற்ற 2 போட்டிகளிலும் அடுத்தடுத்த தோல்வி அடைந்து இந்த வருட ஐபிஎல் தொடரை தோல்வியுடன் துவக்கியது. குறிப்பாக அவர் கேப்டனாக பொறுப்பேற்ற 2013 முதல் இப்போது வரை அனைத்து ஐபிஎல் தொடர்களின் முதல் போட்டியிலும் அந்த அணி தொடர்ச்சியாக தோல்வியடைந்து வருவது மும்பை ரசிகர்களை ஏமாற்றம் அடையச் செய்கிறது.

MI V DC IPL 2022

- Advertisement -

வெற்றிகரமான ரோஹித் சர்மா:
இப்படி மோசமான தொடக்கத்தை பெற்றபோதிலும் அதே கால கட்டங்களில் அந்த தோல்வியில் இருந்து மீண்டெழுந்த ரோகித் சர்மா தலைமையிலான மும்பை 5 கோப்பைகளை வென்று வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான ஐபிஎல் அணியாக சரித்திர சாதனை படைத்துள்ளது. எனவே கடந்த வருடங்களைப் போலவே இந்த வருடமும் மோசமான தொடக்கத்தை பெற்றாலும் அதில் மீண்டெழுந்து 6-வது முறையாக தங்களது அணி கோப்பையை வெல்லும் என மும்பை ரசிகர்கள் நம்பிக்கையோடு காணப்படுகின்றனர்.

அந்த ஆணித்தரமான நம்பிக்கை மும்பை ரசிகர்களிடம் ஏற்படுவதற்கு மிக முக்கிய காரணம் அந்த அணியின் கேப்டன் ரோகித் சர்மா என்றால் மிகையாகாது. ஏனெனில் 2008 முதல் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் கேப்டன்ஷிப் செய்த போதிலும் ஒருமுறை கூட கோப்பையை வெல்ல முடியாமல் திண்டாடிய மும்பைக்கு கேப்டனாக பொறுப்பேற்ற பின் தனது அபார கேப்டன்ஷிப் திறமையால் 5 கோப்பைகளை வென்று கொடுத்த ரோகித் சர்மா ஐபிஎல் வரலாற்றில் மும்பை இந்தியன்ஸ் அணியை புகழின் உச்சிக்கே கொண்டு சென்றுள்ளார்.

Ganguly-ipl
IPL MI

டெக்கான் சார்ஜர்ஸ் இருந்திருந்தால்:
இப்படி ரோகித் இல்லை என்றால் மும்பை இல்லை என்ற நிலைமையில் ஐபிஎல் தொடங்கப்பட்ட 2008ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஐபிஎல் அணியான டெக்கான் சார்ஜர்ஸ் அணியில் தான் ரோகித் சர்மா முதல் முறையாக தனது ஐபிஎல் பயணத்தை தொடங்கினார். ஆஸ்திரேலிய ஜாம்பவான் ஆடம் கில்கிறிஸ்ட் தலைமையில் 2008 – 2010 வரை விளையாடி 2009-ஆம் ஆண்டு சாம்பியன் பட்டத்தையும் வென்ற அந்த அணியில் $750,000 என்ற நல்ல தொகைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு விளையாடிய ரோகித் சர்மா அந்த அணியின் வெற்றிகளில் முக்கிய பங்காற்றினார். குறிப்பாக அந்த சமயங்களில் மினி ஆல்-ரவுண்டராக வலம் வந்த அவர் இன்று கேப்டனாக இருக்கும் மும்பைக்கு எதிரான ஒரு போட்டியில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

- Advertisement -

இந்நிலையில் ஐபிஎல் வரலாற்றில் ஆரம்பத்தில் இருந்த டெக்கான் சார்ஜர்ஸ் அணி இப்போதும் இருந்திருந்தால் இன்று மும்பைக்கு இவ்வளவு வெற்றிகள் கிடைத்திருக்காது என முன்னாள் இந்திய வீரர் பிரக்யான் ஓஜா தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் பேசியது பின்வருமாறு. “அந்த சமயத்தில் ஒரு பேட்ஸ்மேனாக அவர் (ரோஹித்) அசத்தினார். அந்த நேரத்தில் அவரின் உள்ளூர் அணியான மும்பை கூட அவரை ஒரு கேப்டனாக கருதியதில்லை.

Rohit Sharma Deccan Chargers

இருப்பினும் ஆடம் கில்கிறிஸ்ட் அவரை அடுத்த கேப்டனாக நினைத்துக் கொண்டிருந்தார். ஏனெனில் அழுத்தம் நிறைந்த சூழ்நிலைகளில் சிறப்பாக பேட்டிங் செய்து அழுத்தத்திற்கு அஞ்சாமல் வெற்றிகரமாக செயல்பட்ட அவரிடம் கேப்டன்ஷிப் திறமைகள் இருப்பதாக கில்கிறிஸ்ட் நம்பினார். அந்த நிலையில் ஒரு அணியை வழிநடத்துவது பற்றி அவரிடம் இருந்து உள்ளீடுகள் வரும் போது அவரால் கேப்டனாக இருக்க முடியும் என கில்கிறிஸ்ட் நம்பினார்” என்று ஓஜா கூறினார்.

- Advertisement -

ஆடம் கில்கிறிஸ்ட் தலைமையில் ரோகித் சர்மா விளையாடிய போது அதே அணியில் அவருடன் பிரக்யான் ஓஜாவும் விளையாடினார். அந்த சமயத்தில் ரோகித் சர்மாவின் திறமைகளை உணர்ந்த கேப்டன் ஆடம் கில்கிறிஸ்ட் தமக்கு அடுத்து டெக்கான் சார்ஜர்ஸ் அணியின் கேப்டனாகும் தகுதி ரோஹித் சர்மாவிடம் உள்ளதாக கருதியாக கூறும் பிரக்யான் ஓஜா அதுபற்றி அந்த சமயத்தில் கில்கிறிஸ்ட் ஒருமுறை “ரோஹித் சர்மா கேப்டனாக இப்போது ரெடி” என வெளிப்படையாகவே கூறியிருந்ததையும் நினைவு கூர்ந்தார். ஆனால் துரதிஷ்டவசமாக 2011-ஆம் ஆண்டு டெக்கான் சார்ஜர்ஸ் கலைக்கப்பட்ட காரணத்தால் அதன் பின் நடந்த ஏலத்தைப் பயன்படுத்தி அவரை மும்பை வாங்கியதாக பிரக்யன் ஓஜா தெரிவித்துள்ளார்.

Ojha 1 Deccan Chargers

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “3-வது சீசனுக்கு பின்பு ஏலம் நடைபெறாமல் இருந்திருந்தால் கண்டிப்பாக மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கேப்டன்ஷிப் செய்வதற்கு முன்பாகவே டெக்கான் சார்ஜர்ஸ் அணியை ரோகித் சர்மா கேப்டனாக வழிநடத்தி இருப்பார்” என கூறினார்.

இதையும் படிங்க : 108 மீட்டர் பிரமாண்ட சிக்ஸரை அடித்து பிரமிக்கவிட இதுதான் காரணம் – லியாம் லிவிங்ஸ்டன் மகிழ்ச்சி

2008 – 2010 வரை ஆடம் கில்கிறிஸ்ட் தலைமையில் ரோகித் சர்மாவுடன் விளையாடிய பிரக்யான் ஓஜா அதன்பின் 2013 – 2015 வரை ரோகித் சர்மா தலைமையில் மும்பையிலும் விளையாடினார். அவர் கூறுவது போல டெக்கான் சார்ஜர்ஸ் அணி கலைக்கப்படாமல் இருந்திருந்தால் மும்பைக்கு வரமாக ரோகித் சர்மா கிடைத்திருக்க மாட்டார் இத்தனை கோப்பைகளும் கிடைத்திருக்காது என்றே கூறலாம்.

Advertisement