108 மீட்டர் பிரமாண்ட சிக்ஸரை அடித்து பிரமிக்கவிட இதுதான் காரணம் – லியாம் லிவிங்ஸ்டன் மகிழ்ச்சி

Livingstone
- Advertisement -

சென்னை மற்றும் பஞ்சாப் அணிக்கு எதிரான லீக் போட்டி ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு சற்றும் குறைவில்லாமல் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் நிச்சயம் தங்களது முதல் வெற்றியை பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட சென்னை அணியானது 54 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியிடம் சரணடைந்து மோசமான தோல்வியை சந்தித்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணி முதலில் பந்து வீசியது. எப்படியும் இந்த போட்டியில் பஞ்சாப் அணியை குறைந்த ரன்களில் சுருட்டி விடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதற்கேற்றார்போல் 14 ரன்களில் 2 விக்கெட்டுகளை இழந்து பஞ்சாப் அணி சிக்கலை சந்தித்தது.

Livingstone

- Advertisement -

இதனால் பெரிய ரன் குவிப்பிற்கு செல்ல முடியாது என்று அனைவரும் நினைத்தனர். ஆனால் அப்போதுதான் ஆட்டத்தை அப்படியே திருப்பும் விதமாக அந்த அணியின் 4-வது வீரராக களமிறங்கிய லிவிங்ஸ்டன் 32 பந்துகளில் 5 பவுண்டரி மற்றும் 5 சிக்சருடன் 60 ரன்கள் விளாசி ஆட்டத்தை தலைகீழாக திருப்பினார் என்றே கூறலாம். அவருடன் சேர்ந்த தவானும் சிறிது கை கொடுக்க பின்னர் பின்னால் வந்த வீரர்கள் தங்களால் முடிந்த பங்களிப்பை அளிக்க பஞ்சாப் பணியானது 20 ஓவர்களின் முடிவில் 180 ரன்களை குவித்தது.

பின்னர் 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சிஎஸ்கே அணியால் 126 ரன்களை மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால் 54 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி சிஎஸ்கே அணியை எளிதில் வீழ்த்தியது. இந்த போட்டியில் பேட்ஸ்மேனாக 32 பந்துகளில் 60 ரன்கள் அடித்த லிவிங்ஸ்டன் பந்துவீச்சிலும் 3 ஓவர்கள் வீசி 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதன் காரணமாக அவருக்கு ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது. இந்நிலையில் போட்டி முடிந்து தான் அதிரடியாக பேட்டிங் செய்த விதம் குறித்தும் இந்த ஆண்டு பஞ்சாப் அணிக்காக விளையாடி வருவது குறித்தும் பேசிய அவர் கூறுகையில் :

livingstone 1

முதல் இரண்டு போட்டியும் என் வழியில் செல்லவில்லை. ஆனால் நிச்சயம் நான் அணிக்காக சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற எண்ணத்துடன் இன்றைய போட்டியில் எனது பங்களிப்பை கொடுத்து வெற்றியை தேடித்தந்தது மிகவும் மகிழ்ச்சி. எங்களுடைய அணி வீரர்கள் அனைவருமே சிறப்பாக விளையாடி வருகின்றனர். ஆரம்பத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்ததால் நிச்சயம் ஒரு டீசன்டான இலக்கை நிர்ணயிக்க வேண்டும் அப்படி பெரிய டார்கெட் செட் செய்தால் மட்டுமே நம் அணியின் பந்துவீச்சாளர்கள் அதனை பயன்படுத்தி எதிரணியை கட்டுப்படுத்துவார்கள் என்பதை நினைத்து சிறப்பாக பேட்டிங் செய்தேன்.

- Advertisement -

எங்கள் அணியின் பந்து வீச்சாளர்களும் சிறப்பாக பந்து வீசியதால் இறுதியில் வெற்றி கிடைத்தது என்று கூறினார். மேலும் அவர் அடித்த 108 மீட்டர் சிக்ஸ் குறித்து அவர் பேசுகையில் : இன்றைய போட்டியில் நான் சில சிக்ஸர்களை அடித்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அதிலும் குறிப்பாக அந்த 108 மீட்டர் சிக்ஸ் அடித்த போது நான் செய்தது பேட்டை வேகமாக சுழற்றினேன் அதுமட்டும்தான். நான் பெரிய பெரிய சிக்ஸர்களை அடிக்கும் பயிற்சி செய்து வருகிறேன்.

இதையும் படிங்க : கண்ணீர் மல்க விடைபெற்றார் நியூசிலாந்து ஜாம்பவான்! சச்சின்,விராட் வாழ்த்து – சாதனை பட்டியல் இதோ

அவ்வாறு பயிற்சி செய்த வகையில் இன்றைய போட்டியில் பந்து பேட்டின் மிடிலில் பட்டதால் நான் சுழற்றிய வேகத்தில் பந்து நீண்ட தூரத்திற்கு சென்றது என்று ஜாலியாக தனது கருத்தை அவர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக என்னுடைய ஆட்டம் சரியாக அமையவில்லை ஆனால் இம்முறை பஞ்சாப் அணிக்காக சிறப்பாக விளையாடுவேன் என லியாம் லிவிங்ஸ்டன் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement