தோனி தலைமையிலான சி.எஸ்.கே அணியில் விளையாடும் லெவனில் இவருக்கு வாய்ப்பு கிடைக்காது – பிரக்யான் ஓஜா

ojha

இந்தியாவில் கடந்த 2008ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் மிகப்பெரிய டி20 கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் தற்போது 13 சீசன் களை கடந்து 14வது சீசனுக்கு வந்துள்ளது. இந்த ஐபிஎல் தொடரானது ஏப்ரல் 9ஆம் தேதி முதல் மே 30ஆம் தேதி வரை இந்தியாவிலேயே நடைபெற உள்ளது. உலகில் உள்ள ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்த தொடர் இன்னும் சில தினங்களில் துவங்க உள்ளதால் ரசிகர்களிடையே இந்தத்தொடர் குறித்த எதிர்பார்த்து அதிகரித்துள்ளது.

ipl

இந்த தொடருக்காக தற்போது அனைத்து அணிகளின் வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றன. மேலும் இந்த தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டம் வெல்லும் ? எந்த வீரர் நன்றாக விளையாடுவார் ? எந்த பவுலர் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்துவார் என அனைவரும் தங்களது கருத்துக்களை வெளியிட்ட வண்ணம் உள்ளனர்.

அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான பிரக்யான் ஓஜா சென்னை அணியில் ஆடும் லெவனில் விளையாடும் வீரர்கள் குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : முதல் சில போட்டிகளில் சிஎஸ்கே அணியின் பிளேயிங் லெவனில் புஜாராவுக்கு வாய்ப்பு கிடைக்காது என்றே கருதுகிறேன். அவர் அணியில் தொடர்ந்து இருந்தாலும் அவர் ஆடும் லெவனில் இருப்பது சந்தேகம்தான்.

pujara 1

முதல் சில போட்டிகளில் ஏதாவது ஒருவர் சொதப்பும் பட்சத்தில் அவருக்கு பதிலாக புஜாராவுக்கு வாய்ப்பு கிடைக்கலாம். ஆனால் நிச்சயம் முதல் சில போட்டிகளில் புஜாராவுக்கு வாய்ப்பே கிடைக்காது. கிடைக்கும் வாய்ப்பை அவர் சரியாக பயன்படுத்த வேண்டும். அவர் சிறந்த பேட்ஸ்மேன் என்பது நாம் அறிந்ததே. அனைத்து மட்டங்களிலும் சிறப்பாக விளையாடும் அளவிற்கு அவர் திறமையுள்ள வீரர்தான். ஏழு வருடங்களுக்குப் பிறகு அவர் ஐபிஎல் தொடரில் விளையாட இருப்பது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.

- Advertisement -

Pujara

பல இளம் வீரர்களுக்கு முன்மாதிரியாகத் திகழும் புஜாரா இந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதே எனது விருப்பம் எனவும் ஓஜா தெரிவித்துள்ளார். ஏற்கனவே யாரும் ஏலம் எடுக்காத வேளையில் சிஎஸ்கே அணி அவருக்கு உத்வேகத்தை அளிக்கும் வகையில் ஏலம் எடுத்து மட்டுமின்றி அவருக்கு தீவிரமான பயிற்சியும் அளித்தது. பயிற்சியின்போது புஜாரா சிக்சர்களை அடித்து பிராக்டீஸ் செய்த வீடியோ இணையத்தில் வைரல் ஆனது குறிப்பிடத்தக்கது.