கும்ப்ளே – ஹர்பஜன் இருந்த மாதிரி இப்போ இந்திய அணியில் இவங்க இருக்காங்க – பிரக்யான் ஓஜா நெகிழ்ச்சி

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை நடைபெற்ற முதல் இரு போட்டிகள் முடிவடைந்த நிலையில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று தொடரில் சமநிலை வகிக்கின்றன. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான தொடரின் முடிவை தீர்மானிக்கும் கடைசி இரண்டு போட்டிகள் நடைபெற இருக்கின்றன. இந்த போட்டிகளுக்காக இரு அணிகளும் தீவிர பயிற்சியினை மேற்கொண்டு வருகின்றனர்.

Jadeja

இந்த தொடரின் முதல் பொடியோடு விராட்கோலி நாடு திரும்பிய நிலையில் முதல் போட்டியில் அடைந்த தோல்விக்கு பிறகு கடும் விமர்சனத்திற்கு உள்ளான இந்திய அணி எவ்வாறு பலமான ஆஸ்திரேலிய அணியை சமாளிக்க போகிறது என்ற கேள்வி அனைவரிடமும் இருந்தது. இருப்பினும் ரகானே தலைமையில் இந்திய அணி சிறப்பாக விளையாடி வெற்றி பெற்ற பிறகு பல்வேறு தரப்பில் இருந்தும் அவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

முன்னாள் வீரர்கள் என பலரும் தங்களது வாழ்த்துக்களை இந்திய அணிக்கு தெரிவித்து வருகின்றனர். இரண்டாவது போட்டியில் குறிப்பாக இந்திய அணியின் பந்துவீச்சு அட்டகாசமாக இருந்தது சொல்லப்போனால் ஒரு ஆஸ்திரேலிய வீரரை கூட அரைசதம் அடிக்க விடாமல் இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் அழுத்தம் கொடுத்தனர். இந்நிலையில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சு ஜோடியான அஸ்வின் மற்றும் ஜடேஜா குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரான பிரக்யான் ஓஜா பாராட்டிப் பேசியுள்ளார்.

jadeja

இதுகுறித்து அவர் கூறுகையில் : இந்திய அணியில் டெஸ்ட் அணியில் ஜடேஜா மற்றும் அஸ்வின் ஜோடியை மாற்றக் கூடாது. ஏனெனில்அடுத்த போட்டி நடைபெறும் சிட்னி ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு ஒத்துழைக்கும். அதனால் நாம் நிச்சயம் அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகிய ஜோடி உடனேயே அந்த போட்டியை விளையாட வேண்டும். அவர்கள் இருவரும் விக்கெட்டுகளை கைப்பற்றுவது மட்டுமின்றி பேட்டிங்கிலும் கை கொடுக்கும் திறமை படைத்தவர்கள்.

- Advertisement -

மேலும் ஒருவர் ரன் கொடுக்காமல் வீசினால் மற்றொருவர் விக்கெட் எடுப்பார், ஒருவர் பேட்டிங்கில் ஜொலித்தால் ஒருவர் பவுலிங்கில் ஜொலிப்பார். இப்படி அவர்களுக்கு சிறப்பான திறமை இருக்கிறது அதனால் அவர்கள் இருவரையும் பிரிக்காமல் அடுத்த போட்டியில் ஆட வைக்க வேண்டும். மேலும் முன்பு கும்ப்ளே மற்றும் ஹர்பஜன் இந்த ஜோடியை போல இப்போது நான் இவர்களை பார்க்கிறேன் இதற்கு மேல் சொல்ல என்னிடம் ஒன்றுமில்லை என ஓஜா கூறியது குறிப்பிடத்தக்கது.