கிரிக்கெட் போட்டிகளில் இருந்து திடீர் ஓய்வை அறிவித்த இந்திய வீரர். ரசிகர்கள் கவலை – விவரம் இதோ

Ojha 1
- Advertisement -

இந்திய அணியின் இடது கை சுழற்பந்து வீச்சாளரான பிரக்யான் ஓஜா அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார். 33 வயதாகும் போது ஓஜா கடைசியாக டெண்டுல்கர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடினார்.

ojha

- Advertisement -

அதன் பிறகு இந்திய அணியில் அவர் விளையாடவில்லை. 2009 ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிராக கான்பூர் டெஸ்டில் அறிமுகமான ஓஜா 5 ஆண்டுகள் இந்திய டெஸ்ட் அணிக்கு விளையாடி 24 போட்டிகளில் 113 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த 2008ஆம் ஆண்டு வங்கதேச அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகமான அவர் நான்கு ஆண்டுகள் வரை விளையாடி 18 போட்டிகளில் 21 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

அதுமட்டுமின்றி 6 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள ஓஜா 10 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். கடந்த 5 ஆண்டுகளாக இந்திய கிரிக்கெட் அணியில் இடம் கிடைக்காததால் தற்போது அவர் சர்வதேச மற்றும் முதல் தரப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ஓஜா குறிப்பிடுகையில் : சர்வதேச மற்றும் உள்ளூர் கிரிக்கெட்டில் இருந்து நான் உடனடியாக ஓய்வு பெறுவதாக பிசிசிஐ அமைப்புக்கு கடிதம் எழுதியுள்ளேன்.

நாட்டுக்காக இந்திய அணியில் விளையாட வேண்டும் என்ற நீண்ட நாள் கனவு இளம் வயதிலேயே அது நிறைவேறியது. என்னிடம் அதை விவரிக்க வார்த்தைகள் கிடையாது. நான் விளையாடிய காலத்தில் என் சக வீரர்களிடம் அதிகமான மரியாதையையும், அன்பையும் பெற்று உள்ளேன் என்று அவர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement