ஷ்ரேயாஸ் ஐயர் வந்ததால் எங்களோட அந்த பல ஆண்டு கனவு நிறைவேறும் – பஞ்சாப் வீரர் பிரப்சிம்ரன் சிங் நம்பிக்கை

Prabhsimran
- Advertisement -

இந்தியாவில் இந்த 2025-ஆம் ஆண்டிற்கான 18-வது ஐபிஎல் கிரிக்கெட் சீசனானது இன்னும் சில தினங்களில் கோலங்கலமாக துவங்க உள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரின் இறுதிப்போட்டி வரை சென்று கோப்பையை வெல்லப்போகும் அணி எது? என்பது குறித்து எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இதற்காக தற்போது அனைத்து அணிகளை சேர்ந்த வீரர்களும் தங்களது சொந்த மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஷ்ரேயாஸ் ஐயரால் எங்களது கனவு நிறைவேறும் : பிரப்சிம்ரன் சிங் கருத்து

ஏற்கனவே கடந்த ஆண்டு நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடருக்கு பின்னர் வீரர்களின் அணிமாற்றம் நடைபெற்றதால் இந்த ஐபிஎல் தொடர் மேலும் சுவாரஸ்யத்தை கூட்டியுள்ளது. அந்த வகையில் கடந்த ஆண்டு கொல்கத்தா அணிக்கு கேப்டனாக திகழ்ந்து அந்த அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்ற சாம்பியன் கேப்டனான ஷ்ரேயாஸ் ஐயர் அந்த அணியில் இருந்து கழட்டிவிடப்பட்டார்.

- Advertisement -

அதனை தொடர்ந்து மெகா ஏலத்தில் இரண்டாவது மிகப்பெரிய தொகை கொடுத்து அவரை பஞ்சாப் கிங்ஸ் அணி விலைக்கு வாங்கியிருந்தது. மேலும் இந்த தொடருக்கான பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாகவும் ஷ்ரேயாஸ் ஐயரை அந்த அணியின் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதன் காரணமாக இந்த முறையும் ஷ்ரேயாஸ் ஐயர் மிகச் சிறப்பாக செயல்பட்டு பஞ்சாப் அணிக்கு கோப்பையை பெற்று தருவார் என்ற நம்பிக்கை காணப்படுகிறது. இந்நிலையில் ஷ்ரேயாஸ் ஐயரின் வருகையால் நிச்சயம் எங்களது பல ஆண்டு கனவு பூர்த்தி அடையும் என்று அந்த அணியின் துவக்க வீரரான பிரப்சிம்ரன் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : ஷ்ரேயாஸ் ஐயர் ஒரு அற்புதமான கேப்டன். பஞ்சாப் அணி முதல் பட்டத்திற்காக காத்திருக்கும் வேளையில் எங்களது இத்தனை ஆண்டு கால கனவை ஷ்ரேயாஸ் ஐயர் பூர்த்தி செய்வார் என்று நம்புகிறேன். அவர் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு வந்துள்ளது ஒரு அதிர்ஷ்டம் தான். அந்த அதிர்ஷ்டத்தை வைத்தே அவர் எங்களுக்கு முதல் கோப்பையை பெற்று தருவார் என்று உறுதியாக நம்புவதாக பிரப்சிம்ரன் சிங் கூறியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : ரிஷப் பண்ட் டி20 அணியில் இடம்பிடிக்க வேண்டுமெனில் இதை செய்தே ஆகவேண்டும் – ஆகாஷ் சோப்ரா கருத்து

ஏற்கனவே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக கோப்பையை வென்ற ஷ்ரேயாஸ் ஐயர் அதற்கடுத்து கடந்த ஓராண்டில் விஜய் ஹசாரே மற்றும் ரஞ்சிக்கோப்பை ஆகியவற்றை கேப்டனாக மும்பை அணிக்கு பெற்றுக்கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement