கொல்கத்தா அணிக்கெதிரான தோல்விக்கு நாங்கள் செய்த இந்த தவறே காரணம் – ரிக்கி பாண்டிங் ஓபன்டாக்

Ponting

ஷார்ஜா மைதானத்தில் நேற்று நடைபெற்ற இரண்டாவது குவாலிபயர் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. ஏற்கனவே இந்த தொடரில் நடைபெற்ற முதலாவது குவாலிபயர் போட்டியில் சென்னை அணி டெல்லி அணியை எதிர்த்து வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ள வேளையில் இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டியில் சென்னை அணியுடன் மோதும் என்பதால் இரு அணிகளுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது.

dcvskkr

இந்த போட்டியில் முதலில் விளையாடிய டெல்லி அணியானது கொல்கத்தா அணி வீரர்களின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 135 ரன்கள் மட்டுமே அடித்தது. அதன் பின்னர் 136 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய கொல்கத்தா அணியை சிறப்பாக துவக்கத்தை பெற்றது.

- Advertisement -

இருப்பினும் மிடில் ஆர்டரில் ஏற்பட்ட சரிவு காரணமாக இறுதியில் 20 ஓவரின் 5வது பந்தில் கொல்கத்தா அணி த்ரில்லிங்கான வெற்றியை ருசித்தது. இந்நிலையில் இந்த போட்டியில் அடைந்த தோல்வி குறித்து டெல்லி அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் கூறுகையில் : நாங்கள் முதலாவதாக பேட்டிங் செய்யும் போது அதனை சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை. பவர் பிளே முடிவில் இன்னும் கூடுதலாக 10 ரன்களை அடித்து இருக்க வேண்டும்.

அது மட்டுமின்றி ஆடுகளம் மந்தமாக இருந்த காரணத்தினால் எங்களால் சிறப்பான பேட்டிங் செய்ய முடியவில்லை. மிடில் ஆர்டரில் களமிறங்கிய வீரர்கள் மிகவும் கஷ்டப்பட்டார்கள். அதற்கு மைதானத்தில் தன்மையே முக்கிய காரணம். இருப்பினும் பேட்டிங்கில் நாங்கள் சிறப்பாக செயல்படவில்லை. முக்கிய நேரத்தில் விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்துவிட்டோம்.

- Advertisement -

இதையும் படிங்க : செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்ட தினேஷ் கார்த்திக். வார்னிங் கொடுத்து மன்னித்த – ஐ.பி.எல் நிர்வாகம்

ஹெட்மையர் மற்றும் ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோர் இல்லை என்றால் எங்களால் 130 ரன்களை கூட அடித்திருக்க முடியாது. இந்த மைதானத்தின் தன்மையும், பேட்ஸ்மேன்களின் மோசமான ஆட்டமுமே இந்த தோல்விக்கு முக்கிய காரணம் என்றும் இந்த தொடரில் இருந்து விலகியுள்ளது வேதனையையும் ஏமாற்றத்தையும் அளித்துள்ளது என ரிக்கி பாண்டிங் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement