செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்ட தினேஷ் கார்த்திக். வார்னிங் கொடுத்து மன்னித்த – ஐ.பி.எல் நிர்வாகம்

Karthik
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் நடப்பு 14-வது ஐபிஎல் தொடருக்கான இரண்டாவது குவாலிபயர் போட்டி நேற்று ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் மோர்கன் முதலில் பந்து வீசுவதாக தீர்மானம் செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 135 ரன்கள் மட்டுமே குவித்தது. அதிகபட்சமாக தவான் 36 ரன்களும், ஷ்ரேயாஸ் ஐயர் 30 ரன்களும் குவித்தனர். மற்றபடி எந்த ஒரு இடத்திலும் டெல்லி அணி வீரர்களால் பெரிய அளவில் ரன்களை குவிக்க முடியாமல் போனது.

dcvskkr

- Advertisement -

கொல்கத்தா அணி சார்பாக வருண் சக்கரவர்த்தி 2 விக்கெட்டுகளையும், பெர்குசன் மற்றும் மாவி ஆகியோர் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். இந்நிலையில் 136 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய கொல்கத்தா அணியானது துவக்கம் முதலே அதிரடியாக விளையாடியது. முதல் விக்கெட்டுக்கு 12.2 ஓவர்களில் 96 ரன்கள் குவித்த கொல்கத்தா அணி 16-ஆவது ஓவரின் முடிவில் 123 ரன்களுக்கு இரண்டாவது விக்கெட்டை இழந்தது.

இந்நிலையில் மீதமுள்ள 13 ரன்களை விரைவாக அடித்து வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் போட்டி கடைசி ஓவர் வரை சென்றது. அதிலும் குறிப்பாக கடைசி 20ஆவது ஓவரில் வெற்றிக்கு 7 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் அஷ்வின் பந்து வீசினார். அந்த ஓவரின் முதல் பந்தில் த்ரிப்பாதி சிங்கிள் எடுக்க 2-வது பந்தை டாட் பால் ஆக்கிய ஷாகிப் மூன்றாவது பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

tripathi 1

4-வது பந்தில் சுனில் நரேனும் ஆட்டமிழக்க இரண்டு பந்துகளுக்கு ஆறு ரன்கள் தேவைப்பட்டது. அந்நிலையில் ஐந்தாவது பந்தில் த்ரிப்பாதி சிக்சர் அடித்து கொல்கத்தா அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இந்த போட்டியின் கடைசி ஓவரில் இரண்டு பந்துகளுக்கு 6 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற நிலை இருந்ததால் நிச்சயம் டெல்லி அணி ஜெயிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அதிர்ஷ்டவசமின்றி இறுதியில் அந்த அணி தோல்வியை தழுவியது அவர்களுக்கு மிகப்பெரிய வருத்தத்தை கொடுத்தது.

- Advertisement -

karthik 1

இந்நிலையில் நேற்றைய போட்டியில் விளையாடிய கொல்கத்தா அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான தினேஷ் கார்த்திக் ரன் எதுவும் எடுக்காமல் ரபாடாவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். கிளீன் போல்டான அவர் தான் ஆட்டமிழந்த விரக்தியில் ஒரு ஸ்டம்பை தள்ளி விட்டுச் சென்றார். அவரது இந்த செயல் ஐபிஎல் விதிமுறைகளை மீறியதாக இருப்பதாக நடுவர்கள் புகார் அளித்தனர். இதன் காரணமாக தினேஷ் கார்த்திக் மீது நடவடிக்கை எடுக்கவும் ஐபிஎல் நிர்வாகம் தயாரானது.

இதையும் படிங்க : வெங்கடேஷ் ஐயரை சரியாக தேர்வு செய்து ஒப்பனராக விளையாட வைத்தது இவர்தானாம் – வெளியான தகவல்

ஆனால் செய்த தனது தவறை தினேஷ் கார்த்திக் போட்டி நடுவரிடம் முறைப்படி ஒப்புக்கொண்டதால் அம்பயரே கார்த்திக் மீதான நடவடிக்கை குறித்து முடிவு செய்யட்டும் என ஐ.பி.எல் நிர்வாகம் அவரை வார்னிங் கொடுத்து எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement