வெங்கடேஷ் ஐயரை சரியாக தேர்வு செய்து ஒப்பனராக விளையாட வைத்தது இவர்தானாம் – வெளியான தகவல்

Venkatesh-iyer

நடப்பு ஐபிஎல் தொடரின் முதலாவது பாதியில் 7 போட்டிகளில் விளையாடிய கொல்கத்தா அணியானது இரண்டு வெற்றிகளை மட்டுமே பெற்று பின் தங்கியிருந்தது. இந்நிலையில் அடுத்ததாக ஐக்கிய அரபு அமீரகத்தில் துவங்கிய இரண்டாவது பாதியில் வெங்கடேஷ் ஐயரை கொல்கத்தா அணி ஓப்பனாக களமிறக்கியது. தனக்கு கிடைத்த இந்த வாய்ப்பை கெட்டியாக பிடித்துக்கொண்ட வெங்கடேஷ் ஐயர் 9 போட்டிகளில் 40 ரன்கள் சராசரியுடன் 320 ரன்கள் குவித்துள்ளார். மேலும் இதில் அவர் மூன்று அறை சதங்களையும் அடித்து அசத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

venkatesh iyer 2

26 வயதான ஆல்ரவுண்டரான வெங்கடேஷ் ஐயரின் பேட்டிங் செயல்பாடு சிறப்பாக உள்ளது. அதுமட்டுமின்றி பந்து வீச்சிலும் அசத்த கூடியவராக இருக்கிறார். இதன் காரணம் நிச்சயம் இவர் இந்திய அணியிலும் ஹார்டிக் பாண்டியாவிற்கு பதிலாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் நேற்று டெல்லி அணிக்கு எதிராக ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்ற 2வது போட்டியில் டெல்லி அணி நிர்ணயித்த 136 ரன்களை எதிர்த்து விளையாடிய கொல்கத்தா அணி பேட்டிங் செய்ய கடினமாக இருக்கும் இந்த மைதானத்தில் சிறப்பான துவக்கத்தை பெற்றது.

- Advertisement -

இந்த போட்டியிலும் வெற்றிக்கு முக்கிய காரணமாக வெங்கடேஷ் ஐயர் திகழ்ந்தார். 41 பந்துகளை சந்தித்த வெங்கடேஷ் ஐயர் 3 சிக்சர்கள் மற்றும் 4 பவுண்டரி என 55 ரன்கள் குவித்து அசத்தினார். அவரது இந்த சிறப்பான ஆட்டம் காரணமாக அவருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் வெங்கடேஷ் ஐயரின் இந்த சிறப்பான ஆட்டம் குறித்து போட்டி முடிந்து பேசிய கொல்கத்தா அணியின் கேப்டன் இயான் மோர்கன் கூறுகையில் வெங்கடேஷ் ஐயர் பற்றி பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

Venkatesh-iyer-3
Venkatsh KKR

எங்கள் அணி எப்போதுமே அதிக எதிர்பார்ப்புகளை கொண்ட ஒரு அணியாகவே ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறது. இந்த ஐபிஎல் தொடரில் இரண்டாவது பாதியில் வெங்கடேஷ் ஐயரை அணியில் இணைத்தது எங்களுக்கு நல்ல பலத்தை அளித்தது. கொல்கத்தா அணியின் பயிற்சியாளரான பிரெண்டன் மெக்கல்லம் தான் வெங்கடேஷ் ஐயரை கூர்மையாக கவனித்து அவரை ஐபிஎல் தொடரில் ஆடும் பிளேயிங் லெவனில் விளையாட வைத்தார். வலைப்பயிற்சியின்போது வெங்கடேஷ் ஐயர் சிறப்பாக செயல்பட்டார் .

இதையும் படிங்க : இறுதி ஓவரின் 5 ஆவது பந்தில் சிக்ஸர் அடித்தது பற்றி முக்கியமான கருத்தை பகிர்ந்த – ராகுல் த்ரிப்பாதி

- Advertisement -

அதனை அடுத்து அவருக்கு தொடர் பயிற்சிகளை வழங்கி அவரை துவக்க வீரராகவும் களமிறங்கி விட்டார். அவர் எடுத்த இந்த முடிவு தற்போது கொல்கத்தா அணிக்கு சாதகமாக மாறி உள்ளது. பேட்டிங் செய்ய கடினமாக இருக்கும் மைதானத்தில் கூட இவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார். இவரால் எந்த ஒரு மைதானத்தில் மிச்சம் சிறப்பாக விளையாட முடியும் என்ற நம்பிக்கை என்னிடம் உள்ளது. இறுதிப்போட்டியில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என மோர்கன் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement