இந்திய அணியின் கேப்டனாகும் அளவிற்கு அவர் தகுதியானவர். சாதாரண வீரர் கிடையாது – பாண்டிங் புகழாரம்

Ponting
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 15 ஆவது ஐபிஎல் தொடரானது தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த வருட பிளே ஆப் சுற்றுக்கான போட்டிகளில் விளையாடும் நான்கு அணிகளாக குஜராத், ராஜஸ்தான், லக்னோ மற்றும் பெங்களூரு ஆகிய அணிகள் தெரிவாகியுள்ளன. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற முக்கியமான லீக் போட்டியில் மும்பை அணியை வீழ்த்தினால் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறலாம் என்ற கட்டாயத்திற்கு மத்தியில் விளையாடிய டெல்லி அணியானது மும்பை அணியிடம் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்து புள்ளிப் பட்டியலில் 5-வது இடத்தை பிடித்து இந்த தொடரில் இருந்து வெளியேறியது.

- Advertisement -

இந்த தொடர் முழுவதுமே ஒரு போட்டியில் வெற்றி, ஒரு போட்டியில் தோல்வி என ஏற்ற இறக்கங்களை சந்தித்து வந்த டெல்லி அணியானது 14 போட்டிகளில் விளையாடி 7 வெற்றிகளையும், 7 தோல்விகளையும் பெற்று பிளே ஆப் சுற்றில் விளையாடும் வாய்ப்பினை இழந்துள்ளது. இருப்பினும் டெல்லி அணியின் பென்ச் ஸ்ட்ரென்த்தின் பலம் சற்று அதிகம் என்றே கூறலாம். வெற்றி பெற வேண்டிய சில போட்டிகளை வெற்றிக்கு அருகில் சென்று அவர்கள் தவற விட்டது இந்த ஆண்டு அவர்கள் பிளே ஆப் சுற்றுக்கு செல்ல முடியாமல் தடுத்துவிட்டது.

இந்நிலையில் நேற்றைய போட்டி முடிந்து இந்த தொடர் குறித்து பேசிய டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் கூறுகையில் : இந்த தொடர் முழுவதுமே நாங்கள் சிறப்பான பல போட்டிகளை விளையாடி உள்ளோம். பல போட்டிகளில் நாங்கள் டாப்பில் இருந்தாலும் தோல்வியை சந்தித்தோம். ஆனாலும் நாங்கள் ஒரு வலிமையான அணியாகவே இருப்பதாக கருதுகிறேன். இந்த ஆண்டு நடைபெற்ற தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொண்டு அடுத்த ஆண்டு நிச்சயம் பலம் வாய்ந்த அணியாக திரும்புவோம் என்று கூறியுள்ளார்.

Pant

இந்நிலையில் இந்த ஐபிஎல் தொடரில் ரிஷப் பண்ட் கேப்டன்சி குறித்து பலரும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வரும் வேளையில் டெல்லி அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : ரிஷப் பண்ட் தான் செய்த தவறால் தான் டெல்லி அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்லவில்லை என்று வருத்தம் அடைகிறார். ஆனாலும் நான் அவர் மீது எந்த குறையும் கூற விரும்பவில்லை.

- Advertisement -

அவர் அருமையாகவே கேப்டன்சி செய்தார். மேலும் இளம் வீரராக இருக்கும் அவர் கேப்டன்சி பற்றி நிறைய கற்றுக் கொண்டே வருகிறார். கடந்த சீசனில் நடைபெற்ற போட்டிகளில் அவர் அணியை எவ்வாறு வழி நடத்துகிறார் என்பதை நிரூபித்துவிட்டார். சில நேரங்களில் இது போன்ற சூழ்நிலைகள் நமக்கு வரத்தான் செய்யும். அதையெல்லாம் நான் கடந்து விட்டு விட்டேன் நீங்கள் உங்கள் வழியில் செல்லுங்கள் என்று பண்டை பாராட்டினார்.

இதையும் படிங்க : ஸ்டம்ப்பை தெறிக்கவிட்ட யார்கர் கிங் பும்ரா ! ஐபிஎல் வரலாற்றில் முதல் இந்தியராக புதிய சாதனை

மேலும் விக்கெட் கீப்பராக பின்னாலிருந்து அவர் போட்டியில் நடக்கும் அனைத்து விஷயங்களையும் உற்று நோக்குகிறார். சிறந்த கிரிக்கெட் அறிவு கொண்ட அவர் சாதாரண வீரர் மட்டும் கிடையாது நிச்சயம் இந்திய அணிக்கு கேப்டனாகும் அளவிற்கு ரிஷப் பண்டிடம் திறமை இருப்பதாக பாண்டிங் நம்பிக்கை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement