ஸ்டம்ப்பை தெறிக்கவிட்ட யார்கர் கிங் பும்ரா ! ஐபிஎல் வரலாற்றில் முதல் இந்தியராக புதிய சாதனை

Rovman Powell Jasprit Bumrah
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடரின் லீக் சுற்று இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் மே 21-ஆம் தேதி நடைபெற்ற முக்கியமான 69-வது போட்டியில் டெல்லியை தோற்கடித்த மும்பை 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி பெற்றது. வான்கடே மைதானத்தில் நடைபெற்ற அந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய டெல்லி 20 ஓவர்களில் 159/7 ரன்கள் எடுத்தது. அந்த அணிக்கு டேவிட் வார்னர் 5 (6) மிட்செல் மார்ஷ் 0 (1) என நட்சத்திரங்கள் சொற்ப ரன்களில் ஏமாற்றிய நிலையில் பிரிதிவி ஷா 24 (23) சர்ப்ராஸ் கான் 10 (7) என இளம் வீரர்கள் பெரிய ரன்களை எடுக்காமல் கைவிட்டனர்.

- Advertisement -

அதனால் 50/4 என தடுமாறிய அந்த அணிக்கு பொறுப்பை காட்டிய கேப்டன் ரிஷப் பண்ட் 39 (33) ரன்களும் ரோவ்மன் போவல் 43 (34) ரன்கள் எடுக்க இறுதியில் அக்ஷர் பட்டேல் அதிரடியாக 19* (10) ரன்களை விளாசினார். அதை தொடர்ந்து 160 என்ற இலக்கை துரத்திய மும்பைக்கு கேப்டன் ரோகித் சர்மா 2 (13) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றினாலும் மற்றொரு தொடக்க வீரர் இஷான் கிசான் 3 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 48 (35) ரன்களும் தேவாலட் ப்ரேவிஸ் 1 பவுண்டரி 3 சிக்சருடன் 37 (33) ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

டெல்லி தோல்வி:
அந்த நிலைமையில் கடைசி 5 ஓவர்களில் 59 ரன்கள் தேவைப்பட்ட போது 2 பவுண்டரி 4 சிக்சர்கள் பறக்க விட்ட டிம் டேவிட் 34 (11) ரன்கள் எடுத்து வெற்றியை உறுதிசெய்த ஆட்டமிழந்தார். அவருடன் திலக் வர்மா 21 (17) ரமன்தீப் சிங் 13* (6) என இளம் வீரர்கள் அதிரடியான ரன்கள் எடுக்க 19.1 ஓவரில் 160/5 ரன்கள் எடுத்த மும்பை ஆறுதல் வெற்றி பெற்றது. இருப்பினும் பங்கேற்ற 14 போட்டிகளில் 4 வெற்றிகளை பதிவு செய்தாலும் வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு சீசனில் 10 தோல்விகளை பதிவு செய்து புள்ளி பட்டியலில் முதல் முறையாக கடைசி இடத்தை பிடித்து அவமானத்துடன் வெளியேறியது.

MI Jaspirt Bumrah

இருப்பினும் இப்போட்டியில் டெல்லியை தோற்கடித்ததால் 5-வது இடத்தில் தத்தளித்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 5-வது இடத்திற்கு முன்னேறி குஜராத், ராஜஸ்தான், லக்னோ ஆகிய அணிகளுக்கு பின் 4-வது அணியாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது. அதன் காரணமாக விராட் கோலி, டு பிளசிஸ் உட்பட அனைத்து பெங்களூரு வீரர்களும் ரசிகர்களும் மும்பைக்கு நன்றி தெரிவித்து அந்த அணியின் வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.

- Advertisement -

தெறிக்கவிட்ட பும்ரா:
மறுபுறம் பேட்டிங்கில் பெரிய ரன்களை எடுக்க தவறிய டெல்லி பந்துவீச்சில் போராடிய போதிலும் வாழ்வா – சாவா என்ற இந்த போட்டியில் தோல்வி அடைந்ததால் லீக் சுற்றுடன் வெளியேறியதுடன் முதல் கோப்பையை வெல்ல வேண்டுமென்ற கனவையும் கலைத்துக் கொண்டது. முன்னதாக இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லிக்கு வார்னர் 5 ரன்களில் அவுட்டானதும் அடுத்து வந்த மிட்சேல் மார்ஷை மும்பையின் நட்சத்திரம் ஜஸ்பிரித் பும்ரா வீசிய முதல் பந்திலேயே கோல்டன் டக் அவுட் செய்தார். அதோடு நிற்காத அவர் தனது அடுத்த ஓவரில் 24 (23) ரன்கள் எடுத்து காப்பாற்ற முயன்ற பிரித்திவி ஷா’வையும் காலி செய்தார்.

Jasprith Bumrah

அதனால் 50/4 என தடுமாறிய டெல்லியை நிதானமாகவும் அதிரடியாகவும் காப்பாற்ற போராடிய ரோவ்மன் போவல் 43 (34) ரன்கள் எடுத்திருந்தபோது துளியளவு கூட அடிக்க முடியாத அற்புதமான யார்க்கர் பந்தை வீசிய பும்ரா கிளீன் போல்டாக்கி ஸ்டம்ப்பை பறக்க விட்டார். அதிலும் அவரின் காலை பதம் பார்க்கும் வகையில் குறிபார்த்து எரிந்ததால் தடுமாறிய ரோமன் போவல் நிலைதடுமாறி மண்டியிட்டு ஆட்டமிழந்தார். அந்த அளவுக்கு அட்டகாசமாக பந்துவீசி 4 ஓவர்களில் 25 ரன்கள் கொடுத்து 3 முக்கிய விக்கெட்டுகளை எடுத்த பும்ரா அப்போட்டியின் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

- Advertisement -

சூப்பர் சாதனை:
இந்த வருடம் மும்பை முதல் அணியாக வெளியேறுவதற்கு அந்த அணியின் சுமாரான பந்துவீச்சு முக்கிய காரணமாக அமைந்தது. ஆரம்பக்கட்ட போட்டிகளில் விளையாடிய அந்த அணியின் நிறைய பவுலர்கள் வள்ளலாக எதிரணிக்கு ரன்களை வாரி வழங்கிய நிலையில் அவர்களுக்கு மத்தியில் தனித்துவமாக செயல்பட்ட பும்ரா 14 போட்டிகளில் 15 விக்கெட்களை 7.18 என்ற சிறப்பான எடுத்து அசத்தியுள்ளார்.

மேலும் கடந்த 2016 முதல் 15, 20, 17, 19, 27, 21, 15 என கடந்த 7 வருடங்களாக தொடர்ந்து 15க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை எடுத்து வரும் அவர் “ஐபிஎல் வரலாற்றில் தொடர்ச்சியாக அதிக சீசன்களில் 15 அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகளை எடுத்த முதல் இந்திய பந்துவீச்சாளர்” என்ற புதிய வரலாற்றுச் சாதனை படைத்தார். அந்த பட்டியல் இதோ:
1. ஜஸ்பிரிட் பும்ரா : 7* (2016 – 2022)*
1. லசித் மலிங்கா : 7 (2007 – 2015)
2. ரசித் கான் : 6 (2017 – 2022)

இதையும் படிங்க : பந்து க்ராஸாகும் போது சத்தம் வந்தது. ஆனா. முக்கியமான அந்த எட்ஜ் பந்து குறித்து – டிம் டேவிட் சொன்னது என்ன?

மேலும் ஐபிஎல் தொடரில் அதிக முறை ஒரு போட்டியில் 3 அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகளை எடுத்த இந்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையும் படைத்தார். அந்தப் பட்டியல் இதோ:
1. ஜஸ்பிரித் பும்ரா : 19*
2. அமித் மிஸ்ரா : 17
3. உமேஷ் யாதவ் : 16

Advertisement