இந்தியாவில் கடந்த மார்ச் 22-ஆம் தேதி துவங்கிய 18-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் ஆரம்பகட்ட போட்டிகள் நடைபெற்று வரும் வேளையில் பலமாக ஆதிக்கத்தை செலுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்ட நட்சத்திர அணிகள் படுமோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதும், எதிர்பார்ப்பே இல்லாமல் அமைதியாக இந்த தொடருக்குள் வந்த ஒரு சில அணிகள் மிகச் சிறப்பான ஆட்டத்தையும் வெளிப்படுத்தி வருவதால் இந்த தொடரானது நாளுக்கு நாள் சுவாரசியத்தை ஏற்படுத்தி வருகிறது.
இப்போவும் ஆபத்தான வீரர் தோனி தான் : ரிக்கி பாண்டிங்
அந்த வகையில் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த தொடருக்கு மத்தியில் பல்வேறு முன்னாள் வீரர்களும் இந்த தொடரில் சிறப்பாக விளையாடும் வீரர்கள் குறித்த பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
அந்த வகையில் இன்றளவும் ஐபிஎல் கிரிக்கெட்டின் ஆபத்தான வீரர் மகேந்திர சிங் தோனி தான் என ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : தோனியின் விக்கெட் கீப்பிங் வேகம் இன்னும் குறையவில்லை. அவர் சிறப்பாக விளையாடுகிறார் என்பதற்கு அதுவே ஒரு சான்று.
அதேபோன்று பேட்டிங்கிலும் கடைசி கட்டத்தில் 10 முதல் 15 பந்துகளை சந்திக்கும் அவர் மிகக் குறைந்த அளவிலே பந்துகளை சந்தித்தாலும் தாக்கத்தை ஏற்படுத்தும் பேட்ஸ்மேனாக உள்ளார். அந்த வகையில் பார்க்கையில் தற்போதும் எதிரணிகளுக்கு ஆபத்தான வீரராக தோனி திகழ்ந்து வருகிறார். என்னை பொறுத்தவரை இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் அவருக்கு எவ்வாறு அமைகிறதோ அதை பொறுத்துதான் அவரது ஓய்வு முடியும் அமையும்.
தற்போது வரை கீப்பிங் மற்றும் பேட்டிங்கில் சிறப்பாக செயல்படும் அவர்தான் ஆபத்தான வீரர் என பாண்டிங் பாராட்டியுள்ளார். என்ன தான் தோனியை பாராட்டி பாண்டிங் இப்படி பேசியிருந்தாலும் இந்த தொடரில் தோனி பின்வரிசையில் களமிறங்குவது சென்னை அணியின் பின்னடைவுக்கு மிகப்பெரிய காரணமாக பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க : உலகின் பெஸ்ட் பவுலரான ஜஸ்ப்ரீத் பும்ராவின் ஓவரை அடித்து நொறுக்க என்ன காரணம்? – கருண் நாயர் பேட்டி
ஏனெனில் கடைசி வரிசையில் பேட்டிங் செய்ய வருவதும் அதன் பின்னர் கிட்டத்தட்ட சென்னை அணி தோல்விக்கு சென்ற பின்னரே தனது அதிரடி துவங்குவதும் அதேபோன்று தனக்கு முன்னதாக அனைத்து வீரர்களையும் களமிறங்க அனுமதிப்பதனாலும் தான் சென்னை அணி தோற்று வருகிறது என ரசிகர்கள் தங்களது ஆதங்கங்களை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.



