உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் மலைபோல் ரன்களை குவித்து அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்திருந்த கருண் நாயருக்கு மீண்டும் இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று பேசப்பட்டு வரும் வேளையில் ஐபிஎல் தொடரில் அவர் இடம் பிடித்திருந்தாலும் எந்த அணிக்காகவும் பிளேயிங் லெவனில் களமிறக்கப்படாமல் இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி சார்பாக மூன்றாவது இடத்தில் இம்பேக்ட் வீரராக கருண் நாயருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.
ஜஸ்ப்ரீத் பும்ராவை எதிர்கொண்டது இப்படித்தான் : கருண் நாயர்
அந்த வகையில் நேற்று நடைபெற்ற 29-ஆவது லீக் போட்டியில் முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியானது 205 ரன்களை குவிக்க 206 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி விளையாட துவங்கியது. அப்போது முதல் விக்கெட்டாக ஜேக் பிரேசர் மெக்கர்க் போட்டியின் முதல் பந்திலேயே ஆட்டமிழந்ததால் உடனடியாக இம்பேக்ட் வீரராக மூன்றாம் இடத்தில் கருண் நாயருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.
அதனை கெட்டியாக பிடித்துக் கொண்ட கருண் நாயர் துவக்கத்தில் இருந்தே பவுண்டரியும், சிக்ஸருமாக பறக்கவிட்டு 40 பந்துகளில் 12 பவுண்டரி மற்றும் 5 சிக்ஸர்கள் என 89 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அவரது சிறப்பான ஆட்டம் காரணமாக டெல்லி கேபிட்டல்ஸ் அணியானது வெற்றியினை நோக்கி வேகமாக முன்னேறியது. ஆனால் அவர் ஆட்டமிழந்ததும் அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழவே இறுதியில் டெல்லி அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் இந்த போட்டியில் தோல்வியை சந்தித்தது.
கடந்த ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு ஐபிஎல் தொடரில் தனக்கு கிடைத்த முதல் வாய்ப்பிலேயே அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் அடித்த கருண் நாயர் இந்த போட்டியின் போது உலகின் நம்பர் ஒன் பவுலரான பும்ராவின் பந்துவீச்சை மிகச் சிறப்பாக எதிர் கொண்டு விளையாடினார். அதிலும் குறிப்பாக பும்ராவின் ஓவரில் ஒரு சிக்சர் அடிக்கவே பேட்ஸ்மேன்கள் கடினப்பட்டு வரும் வேளையில் பும்ராவின் ஓவரில் 2 சிக்ஸர்களை பறக்கவிட்ட கருண் நாயர் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார்.
இந்நிலையில் தனது கம்பேக் போட்டியில் அதிரடியான ஆட்டத்திற்கு என்ன காரணம்? என்பது குறித்து போட்டி முடிந்து பல்வேறு கருத்துக்களை அவர் பகிர்ந்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : இந்த போட்டியின் போது இறுதியில் நாங்கள் தோல்வியை சந்தித்தது ஏமாற்றம் அளிக்கிறது. ஆனாலும் எனக்கு கிடைத்த வாய்ப்பை நான் சரியாக பயன்படுத்ததாக உணர்கிறேன். டூபிளெஸ்ஸிஸ் விளையாடவில்லை என்று தெரிந்ததும் வெளியில் அமர்ந்திருக்கும் எங்களில் யாராவது ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்தோம்.
இதையும் படிங்க : டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் கேப்டன் அக்சர் படேலுக்கு விதிக்கப்பட்ட 12 லட்சம் அபராதம் – என்ன நடந்தது?
அந்த வகையில் எனக்கு வாய்ப்பு கிடைத்ததும் நான் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளேன். ஐபிஎல் தொடரில் எப்போது வாய்ப்பு கிடைக்கும், எப்போது அசத்தலாம் என்று காத்துக் கொண்டிருந்த எனக்கு இந்த வாய்ப்பு அளிக்கப்பட்டது. தற்போதைக்கு பும்ரா தான் உலகின் மிகச்சிறந்த பந்துவீச்சாளர் அவர் எங்கு பந்து வீசப்போகிறார்? என்பதை கூர்மையாக கவனித்தேன். அதேவேளையில் என்னுடைய திறனை பயன்படுத்தி சரியான பந்தை சரியான திசையில் அடிக்க வேண்டும் என்று நினைத்தால் பும்ராவை மிகச் சிறப்பாக எதிர்கொண்டு அடிக்க முடிந்தது என கருண் நாயர் கூறியது குறிப்பிடத்தக்கது.



