நான் பார்த்து வளந்த பையன். இன்னைக்கு இவ்ளோ பெரிய ஆளா மாறியிருக்கான் – பாண்டிங் மகிழ்ச்சி

Ponting
Advertisement

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று முடிந்த டி20 உலகக் கோப்பை தொடரை ஆரோன் பின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி முதல் முறையாக கைப்பற்றி அசத்தியுள்ளது. அதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய அணி வரும் டிசம்பர் 8-ஆம் தேதி துவங்க உள்ள 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடருக்காக தயாராகி வந்த நிலையில் தன் மீது எழுப்பப்பட்ட பாலியல் புகார் காரணமாக தனது டெஸ்ட் கேப்டன் பதவியை டிம் பெய்ன் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தானாக முன்வந்து ராஜினாமா செய்தார்.

Paine

மேலும் தான் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்ட அவர் இனியும் அணியின் நற்பெயருக்கு என்னால் எவ்வித இழுக்கும் வேண்டாம் என்று தனது கேப்டன் பதவியில் இருந்து விலகினார். அவரது இந்த பதவி விலகலை தொடர்ந்து ஆஸ்திரேலிய அணியின் கிரிக்கெட் நிர்வாகம் புதிய டெஸ்ட் கேப்டனை தேர்வு செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது.

- Advertisement -

அதன்படி ஆஸ்திரேலிய அணியின் அனுபவ வீரர்கள் ஸ்மித் (அ) வார்னர் ஆகிய இருவரில் ஒருவருக்கு கேப்டன் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் அவர்களுக்கு பதவியை அளிக்காமல் பலகட்ட ஆலோசனைகளுக்கு பிறகு ஒருமனதாக அவர்கள் ஒரு முடிவுக்கு தற்போது புதிய கேப்டனை ஆஸ்திரேலிய நிர்வாகம் அதிகார பூர்வமாக அறிவித்துள்ளது.

PatCummins

அதன்படி ஆஸ்திரேலிய அணியின் முன்னணி இளம் வேகப்பந்து வீச்சாளரான பேட் கம்மின்ஸ் புதிய டெஸ்ட் கேப்டனாக அறிவிப்பட்டுள்ளார். 28 வயதான கம்மின்ஸ் இதுவரை ஆஸ்திரேலிய அணிக்காக 34 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 164 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதையும் படிங்க : ஹாஸ்பிட்டல் டூ டெஸ்ட் : இந்திய அணியின் அறிமுகம். 5 ஆண்டுகள் காத்திருப்பு – ஷ்ரேயாஸ் ஐயரின் கதை

இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் புதிய கேப்டனாக கம்மின்ஸ் நியமிக்கப்பட்டதற்கு ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனான ரிக்கி பாண்டிங் தனது வாழ்த்துக்களையும் அவருடனான நினைவுகளையும் பகிர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : கம்மின்சுக்கு இந்த கேப்டன் பதவி வழங்கப் பட்டதில் மிக்க மகிழ்சி. அந்த பதவிக்கு அவர் நிச்சயம் தகுதியானவர்தான். கம்மின்ஸ் அறிமுகமாகும்போது நான் அவருக்கு அறிமுக தொப்பையை வழங்கினேன்.

தற்போது அவர் ஆஸ்திரேலிய அணியை வழிநடத்தும் அளவிற்கு வளர்ந்துள்ளார். அது எனக்கு மிகவும் மகிழ்ச்சி என்று கூறினார். மேலும் பேசிய அவர் : ஸ்மித் துணை கேப்டனாக இருப்பது மிகவும் நல்ல முடிவு. ஏனெனில் ஸ்மித் தனது அனுபவத்தை ஆலோசனைகளாக வழங்குவார் இதனால் நிச்சயம் கம்மின்ஸ் ஆஸ்திரேலிய அணியின் சிறந்த கேப்டனாக செயல்படுவார் என பாண்டிங் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement