ஹாஸ்பிட்டல் டூ டெஸ்ட் : இந்திய அணியின் அறிமுகம். 5 ஆண்டுகள் காத்திருப்பு – ஷ்ரேயாஸ் ஐயரின் கதை

Iyer-2
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நேற்று கான்பூர் மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் இந்திய அணியின் அறிமுக வீரராக ஷ்ரேயாஸ் ஐயர் களமிறங்கினார். தனது அறிமுகப் போட்டியில் சுனில் கவாஸ்கரிடம் அறிமுக தொப்பியை பெற்ற ஷ்ரேயாஸ் ஐயர் முதல் இன்னிங்சில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அறிமுக போட்டியிலேயே சதம் அடித்து அசத்தினார். நியூசிலாந்து அணிக்கெதிரான முதல் இன்னிங்சில் 105 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

iyer 1

- Advertisement -

ஷ்ரேயாஸ் அய்யர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 303-ஆவது வீரராக இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானது மட்டுமின்றி 16-வது இந்திய வீரராக அறிமுக போட்டியிலேயே சதம் அடித்து அசத்தினார். இந்நிலையில் அவரது டெஸ்ட் கிரிக்கெட்டின் பயணம் குறித்த கதையை நாங்கள் இங்கு உங்களுக்காக தொகுத்து வழங்க உள்ளோம். அதன்படி 2017 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் அறிமுகமான ஸ்ரேயாஸ் அய்யர் தொடர்ந்து தனது சிறப்பான ஆட்டத்தை நான்காம் இடத்தில் வெளிப்படுத்தி வந்தார்.

என்னதான் டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தாலும் டெஸ்ட் போட்டியில் அவர் இந்திய அணிக்காக விளையாடுவதே தனது லட்சியம் என்று அவரது தந்தை காத்துக்கொண்டிருந்தார். ஐந்து ஆண்டுகள் காத்திருப்புக்கு பிறகு தற்போது விராத் கோலி ஓய்வவினால் ஷ்ரேயாஸ் ஐயருக்கு இந்த ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. அதுவும் எளிதாக கிடைக்க வில்லை. இந்த வருட ஐபிஎல் தொடருக்கு முன்னர் மார்ச் மாதம் 23ஆம் தேதி நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் தோள்பட்டையில் காயம் அடைந்த அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது.

Iyer

இதன் காரணமாக சில மாதங்கள் கிரிக்கெட் விளையாடாமல் இருந்த அவர் ஐபிஎல் தொடரின் முதல் பாதியை தவறவிட்டார். முதல் பாதியில் ஐபிஎல் தொடரில் விளையாடாமல் இருந்த அவர் இரண்டாம் பாதியில் டெல்லி அணிக்காக விளையாடினார். அதன்பின்பு நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய அணிக்காக விளையாடிய அவர் தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகம் ஆகியுள்ளார்.

- Advertisement -

இதையும் படிங்க : அடுத்த வருஷம் டி20 உலககோப்பைல கலக்கப்போவது இவங்க 2 பேர்தான் – ஹர்பஜன் கணிப்பு

இவ்வளவு போராட்டங்களுக்கு இடையே தனது அறிமுகப்போட்டியில் விளையாடிய ஷ்ரேயாஸ் ஐயர் தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் முதல் போட்டியிலேயே சதம் அடித்து அசத்தியுள்ளார். எனவே இனிவரும் போட்டிகளில் நிச்சயம் அவர் இடம் பெறுவார் என்று தோன்றுகிறது. அனுபவ வீரர்களான ரஹானே மட்டும் புஜாரா ஆகியோர் வயது மூப்பு காரணமாக பார்ம் இன்றி தவிக்கும் பட்சத்தில் ஷ்ரேயாஸ் ஐயர் டெஸ்ட் அணியில் நிரந்தர இடம் பிடிக்க வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement