அடுத்த வருஷம் டி20 உலககோப்பைல கலக்கப்போவது இவங்க 2 பேர்தான் – ஹர்பஜன் கணிப்பு

Harbhajan

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று முடிந்த டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி சூப்பர் 12-சுற்றோடு வெளியேறியது. இந்த உலகக் கோப்பை தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னர் கோப்பையை கைப்பற்றும் அணிகளில் ஒன்றாக பார்க்கப்பட்ட இந்திய அணியானது சூப்பர் 12-சுற்றில் முதலிரண்டு போட்டிகளில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகளுக்கு எதிராக அடுத்தடுத்து தோல்வியை சந்தித்ததால் சூப்பர் 12-சுற்றுடன் வெளியேறியது. அதனைத்தொடர்ந்து நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கெதிரான தொடரை 3-0 என்ற கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்றது.

INDvsNZ

இந்நிலையில் இந்த தொடர் குறித்து பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வர இந்திய அணியின் முன்னாள் வீரரான ஹர்பஜன் சிங்கும் இந்த தொடர் குறித்த தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : இந்த புதிய இந்திய அணிக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்திய வீரர்கள் இந்த தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்த தொடரை 2 க்கு 1 என்ற கணக்கில் வெற்றி பெறுவார்கள் என்றே நினைத்தேன்.

- Advertisement -

நியூசிலாந்து அணி வில்லியம்சன் இல்லாமல் களம் இறங்கியதால் நமக்கு சற்று சாதகமாக இருந்தது. அதேபோன்று ரோகித் சர்மா இந்திய அணியின் முழுநேர கேப்டனாக செயல்பட்டதும் சிறப்பாக இருந்தது. புதிய வீரர்கள் வெவ்வேறு இடத்தில் விளையாடுவது நன்றாக இருந்தது. என்னை பொருத்தவரை இஷான் கிஷன் இந்திய அணியில் தொடர்ச்சியாக விளையாட வேண்டும். ஏனெனில் அவர் மிகவும் திறமையான வீரர். என்னை பொறுத்தவரை அடுத்த டி20 உலகக் கோப்பைக்கு முக்கிய வீரராக இந்திய அணியில் அவர் விளையாடுவார்.

நம்பர் 3-ஆம் இடத்தில் அவருக்கு வாய்ப்புகளை தொடர்ந்து வழங்கும் பட்சத்தில் அவர் அடுத்த ஆண்டு டி20 உலக கோப்பை தொடரில் கீ பிளேயராக மாறுவார். அதே போன்று மற்றொரு கீ பிளேயராக நான் சூர்யகுமார் யாதவை பார்க்கிறேன். சர்வதேச கிரிக்கெட்டில் அண்மையில் அறிமுகமான சூர்யகுமார் யாதவ் டி20 உலக கோப்பை தொடரில் ரன்கள் குவிக்க சற்று சிரமப்பட்டாலும் நிச்சயம் அடுத்த ஓர் ஆண்டுக்குள் அடுத்த டி20 உலகக் கோப்பைக்காக அவர் தயாராகி விடுவார்.

- Advertisement -

இதையும் படிங்க : டேவிட் வார்னர் அடுத்த ஆண்டு விளையாடப்போகும் ஐ.பி.எல் அணி இதுதான் – சேவாக் கணிப்பு

அதனால் அவரும் இந்திய அணிக்கு கீ பிளேயராக இருப்பார். சூர்யகுமார் யாதவ் எந்த ஒரு வடிவ கிரிக்கெட்டிலும் விளையாட பொருத்தமான ஒரு வீரர். ஏனெனில் அவரால் எந்த இடத்திலும் பேட்டிங் செய்ய முடியும். அது மட்டுமின்றி மைதானத்தின் அனைத்து பகுதிகளுக்கும் பந்தினை விரட்டும் திறமை உடைய அவரது ஆட்டத்தையும் பார்க்க நான் காத்திருக்கிறேன். இஷான் கிஷன் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் அடுத்த டி20 உலகக் கோப்பையில் இந்திய அணிக்கு கீ பிளேயராக இருப்பார்கள் என்று தான் நம்புவதாக ஹர்பஜன் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement