தற்போதைய டி20 கிரிக்கெட்டின் டாப் 5 பெஸ்ட் பிளேயர்ஸை தேர்ந்தெடுத்த ரிக்கி பாண்டிங் – ரேங்கிங் லிஸ்ட் இதோ

Ponting
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் டி20 கிரிக்கெட்டின் ஆதிக்கம் வந்த பிறகு பெருமளவு ரசிகர்கள் கொண்டாடும் ஒரு கிரிக்கெட் வடிவமாக டி20 கிரிக்கெட் பார்க்கப்பட்டு வருகிறது. ஏனெனில் கிட்டத்தட்ட 3:30 மணி நேரத்தில் நடைபெற்று முடியும் இந்த போட்டிகளில் ஏகப்பட்ட பொழுதுபோக்கு ரசிகர்களுக்கு கிடைப்பதனால் டி20 வடிவிலான கிரிக்கெட்டையே ரசிகர்கள் விரும்பி பார்த்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது டி20 கிரிக்கெட் அறிமுகமானதிலிருந்து ஏகப்பட்ட வீரர்கள் தங்களது சிறப்பான ஆட்டத்தினால் ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகின்றனர்.

Rashid Khan Ruturaj

- Advertisement -

அந்த வகையில் தனக்கு பிடித்த தற்போதைய கிரிக்கெட்டின் டாப் 5 டி20 பெஸ்ட் வீரர்கள் குறித்து ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டனான ரிக்கி பாண்டிங் சில தகவல்களை பகிர்ந்துள்ளார். அதன்படி அவர் தேர்வு செய்துள்ள அந்த ஐந்து டி20 பெஸ்ட் வீரர்களை பற்றி இந்த பதிவில் நாம் காணலாம். அந்த வகையில் முதலாவதாக பாண்டிங் தேர்வு செய்திருப்பது ஆப்கானிஸ்தான் அணியைச் சேர்ந்த ரஷீத் கான் தான். இது குறித்து அவர் கூறுகையில் :

ரஷீத் கானை நான் தற்போது டி20 கிரிக்கெட்டின் நம்பர் ஒன் வீரராக தேர்வு செய்கிறேன். ஏனென்றால் இப்போது உள்ள டி20 கிரிக்கெட்டில் உலகின் எந்த லீக் தொடராக இருந்தாலும் சரி ரஷீத் கானை எடுப்பதற்கு அனைத்து அணிகளும் அதிக அளவிலான பணத்தை கொடுத்து ஏலத்தில் எடுக்க ஆர்வம் காட்டுகின்றனர். ஏனெனில் அந்த அளவிற்கு அவர் டி20 கிரிக்கெட்டில் மதிப்புமிக்க வீரராக பார்க்கப்படுகிறார் என்று கூறியுள்ளார்.

babar azam

இரண்டாவது வீரராக பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாமை தேர்வு செய்துள்ளார். இது குறித்து அவருக்கு கூறுகையில் : பாபர் அசாம் இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடிக்கிறார். ஏனெனில் டி20 கிரிக்கெட்டில் நம்பர் ஒன் வீரராக இருக்கும் அவர் தற்போது மிகச் சிறப்பான ஃபார்மில் இருப்பதாலும், தொடர்ச்சியாக ரன்களை குவித்து வருவதாலும் அவரை தேர்வு செய்துள்ளதாக பாண்டிங் கூறியுள்ளார்.

- Advertisement -

மேலும் மூன்றாவது இடத்தில் ஹார்டிக் பாண்டியாவை தேர்வு செய்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : உலகின் தற்போதைய மிகச்சிறந்த ஆல்ரவுண்டராக நான் ஹார்டிக் பாண்டியாவை பார்க்கிறேன். பேட்டிங்கிலும் சரி, பந்துவீச்சில் சரி தற்போது மிகச்சிறப்பாக செயல்பட்டு வரும் இவருக்கு இந்த மூன்றாவது இடத்தை அளிப்பதாக ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார்.

Hardik Pandya

மேலும் நான்காவது இடத்தில் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜாஸ் பட்லரை தேர்வு செய்த அவர் கூறுகையில் : ஜாஸ் பட்லர் துவக்க வீரராக களம் இறங்கி மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அதோடு ஒரு டி20 தொடரில் மூன்று முதல் நான்கு சதங்களையும் அவரால் அடிக்க முடியும் தகுதி உள்ளதால் அவரை தேர்வு செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

இந்த பட்டியலில் ஐந்தாவது இடத்தில் இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரீத் பும்ராவை தேர்வு செய்துள்ள அவர் கூறுகையில் : தற்போதைய டி20 கிரிக்கெட்டில் உலகின் கம்ப்ளீட் பவுலர் என்றால் அது ஜஸ்ப்ரீத் பும்ரா தான்.

இதையும் படிங்க : ஆசிய கோப்பையில் ஜிம்பாப்வே இல்ல – கைமாறிய பார்ம், கேரியரில் முதல் முறையாக சரிவை சந்தித்த பாபர் அசாமை கலாய்க்கும் ரசிகர்கள்

டி20 கிரிக்கெட்டில் அவரால் புதுப்பந்திலும் சரி, டெத் ஓவரிலும் சரி, மிடில் ஓவர்களிலும் சரி எங்கு பந்து வீச வாய்ப்பினை வழங்கினாலும் மிகச் சிறப்பாக பந்துவீசி வருவதால் அவரை தேர்வு செய்ததாக ரிக்கி பாண்டிங் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement