மேக்ஸ்வெல்லை ஒழித்துக்கட்டிய ரிஷப் பண்ட்..! ரிக்கி பாண்டிங் அதிர்ச்சி தகவல்.!

- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் 11 சீசன்கள் நிறைவடைந்து உள்ளது. இந்தாண்டு. நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 11 வது சீசனில் டெல்லி அணி லீக் சுற்றிலேயே வெளியேறியது. டெல்லி அணியில் அதிரடியாக விளையாடுவார் என்று எதிர்ப்பாகபட்ட ஆஸ்திரேலியா அணியின் அதிரடி பேட்ஸ்மேன் மேக்ஸ்வெல்லின் மோசமான ஆட்டம் குறித்து டெல்லி அணியின் தற்போதைய பயிற்சியாளரும் முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டனுமான ரிக்கி பாண்டிங் விளக்கமளித்துள்ளார்.

rishab

- Advertisement -

இதுவரை ஒரு முறை கூட ஐபிஎல் தொடரை கைப்பற்றதா டெல்லி அணி இந்த ஆண்டும் ஆரம்பம் முதலே சொதப்பியது.டெல்லி அணியின் தொடர் தோல்விக்கு பொறுப்பேற்று அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாகவதுடன் ஐ.பி .எல் போட்டிக்காக தனக்கு பேசப்பட்ட சம்பள உதியமான 2 .80 கோடி தொகையை கூட வாங்கப்போவது இல்லை என்று கம்பிர் அறிவித்தது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன் பின்னர் ஷ்ரேயாஸ் ஐயர் டெல்லி அணியின் கேப்டனாக பொறுப்பேற்றார்.

டெல்லி அணியில் சிறப்பாக விளையடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஆஸ்திரேலிய அதிரடி பேட்ஸ்மேன் மேக்ஸ்வெல் 12 போட்டிகளில் விளையாடி 169 ரன்களை மட்டுமே எடுத்திருந்தார். அவரின் அதிகபட்சமே 47 மட்டும் தான். சமீபத்தில் மேக்ஸ்வெல்லின் குறித்து பேசிய ரிக்கி பாண்டிங் ” கிளென் மேக்ஸ்வெல் சரியாக ஆடாமல் போனதற்கு ஒரு விதத்தில் ரிஷப் பண்ட்டும் காரணம். ஏனெனில் மேக்ஸ்வெல் களமிறங்கும் 4வது வரிசையில் தான் ரிஷப் பண்ட் களமிறங்கி சிறப்பாக பேட்டிங் செய்தார். இதனால் 5ம் வரிசையில் மேக்ஸ்வெலுக்கு அவ்வளவாக பழக்கமில்லாத ஆர்டர் என்பதால் அவர் சரியாக விளையாட முடியவில்லை. இருப்பினும் அவரை மேட்ச் வின்னராக பார்த்ததால் அவரை நங்கள் தொடர்ந்து அணியில் வைத்திருந்தோம்.’ என்று விளக்கமளித்துள்ளார்.

maxi

நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் பல இளம் இந்திய வீரர்கள் தங்களது திறமைகளை வெளிக்காட்டி வருகின்றனர். அதில் டெல்லி அணியில் உள்ள ரிஷப் பண்ட் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் டெல்லி அணியில் விளையாடிய ரிஷப் பண்ட் அதிரடியாக விளையாடி 684 ரன்களை எடுத்தார். மேலும், இவரது பேட்டிங் சராசரி 173.60 ஆக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement