- Advertisement -
ஐ.பி.எல்

123 ரன்ஸ்.. மோசமான உலக சாதனை படைத்து.. சிஎஸ்கே தேர்வை அவமானப்படுத்திய பாண்டிச்சேரி கேப்டன்

இந்தியாவில் விஜய் ஹசாரே கோப்பை 2025 உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்ற வருகின்றது. அந்தத் தொடரில் டிசம்பர் 29ஆம் தேதி அகமதாபாத்தில் எலைட் குரூப் ஏ பிரிவில் இடம் வகிக்கும் ஜார்க்கண்ட் மற்றும் பாண்டிச்சேரி அணிகள் மோதின. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாண்டிச்சேரி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதைத் தொடர்ந்து களமிறங்கிய ஜார்க்கண்ட் அணி சுமாராக பந்து வீசிய பாண்டிச்சேரி பவுலர்களை பந்தாடி 50 ஓவரில் 368/7 ரன்களை குவித்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக ஓப்பனிங் வீரர் உட்கர்ஸ் சிங் 74 (70) ரன்கள் அடித்தார். மிடில் ஆடரில் அசத்திய கேப்டன் குமார் குசக்ரா சதமடித்து 105 (104) ரன்கள் குவித்து அசத்தினர்.

- Advertisement -

பாண்டிசேரி கேப்டன் மோசமான சாதனை:

அதை விட லோயர் ஆர்டரில் அதிரடியாக விளையாடிய அங்குள் ராய் 98* (53), கௌனாய்ன் குரைசி 43 (35) ரன்கள் எடுத்து அசத்தினார்கள். பாண்டிச்சேரி அணிக்கு அதிகபட்சமாக பர்த் வாகினி 3 விக்கெட்டுகளை சாய்த்தார். ஆனால் கேப்டன் அமன் கான் 10 ஓவரில் 1 விக்கெட்டுகள் எடுத்த போதிலும் 123 ரன்களை வாரி வழங்கினார்.

இதன் வாயிலாக லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் மிகவும் மோசமான பந்து வீச்சை பதிவு செய்த வீரர் என்ற உலக சாதனையை பாண்டிச்சேரி கேப்டன் அமன் கான் படைத்துள்ளார். இதற்கு முன் இதே விஜய் ஹசாரே கோப்பையில் கடந்த வாரம் பீகார் அணிக்கு எதிராக அருணாச்சலப் பிரதேசத்தின் மிபோம் மோசு 9 ஓவரில் 116 ரன்கள் வாரி வழங்கியதே முந்தைய மோசமான சாதனையாகும்.

- Advertisement -

சிஎஸ்கே ரசிகர்கள் அதிருப்தி:

அதைப் பார்க்கும் சிஎஸ்கே ரசிகர்கள் எங்கள் தேர்வை இப்படியா அவமானப்படுத்துவீர்கள்? என்று சமூகவலைதளங்களில் அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர். ஏனெனில் உள்ளூர் கிரிக்கெட்டில் ஓரளவு அசத்திய அவரை சிஎஸ்கே அணி கடந்த ஐபிஎல் ஏலத்தில் 40 லட்சத்திற்கு வாங்கியது. அந்த நிலையில் உள்ளூரிலேயே அவர் இப்படி ரன்களை வள்ளலாக வாரி வழங்கி மோசமான உலக சாதனையை படைத்துள்ளார்.

இதையும் படிங்க: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனுக்கான போட்டியில் இருக்கும் 2 பேர் அவங்கதான் – உத்தப்பா கருத்து

எனவே இவருக்கு தவறிப்போய் கூட பிளேயிங் லெவனில் வாய்ப்பு கொடுத்து விடாதீர்கள் என்று சிஎஸ்கே ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர். அடுத்து விளையாடிய பாண்டிச்சேரி 41.4 ஓவரில் 235 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி தோல்வியைச் சந்தித்தது. அதிகபட்சமாக ஜஸ்வந்த் ஸ்ரீராம் 60 ரன்கள் எடுத்தார். மறுபுறம் 133 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற ஜார்க்கண்ட் அணிக்கு அதிகபட்சமாக ரஜன்தீப் 3, சுஷாந்த் மிஸ்ரா 2, அங்குள் ராய் 2 விக்கெட்டுகளை சாய்த்தார்கள்.

- Advertisement -