நாங்க இப்படி படுமோசமான தோல்வியை சந்திக்க இந்த 2 விடயங்கள் தான் காரணம் – பொல்லார்டு வேதனை

Pollard
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் இறுதி டி20 போட்டியானது நேற்று கொல்கத்தா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்து வீச அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 184 ரன்களை குவித்தது. இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 65 ரன்களும், வெங்கடேஷ் ஐயர் 35 ரன்களும் குவித்தனர்.

venky

- Advertisement -

அதனைத் தொடர்ந்து 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியானது 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்களை மட்டுமே குவித்தது. இதன் காரணமாக 17 ரன்கள் வித்தியாசத்தில் மீண்டும் தோல்வி அடைந்து இந்த தொடரை முழுவதுமாக இந்திய அணியின் வசம் இழந்தது. இந்த தோல்வியின் மூலம் ஒருநாள் தொடரை தொடர்ந்து டி20 தொடரையும் இந்திய அணியிடம் அவர்கள் இழந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் பொல்லார்டு கூறுகையில் : இந்த போட்டியின் போதும் நாங்கள் 15 ஓவர் வரை ஆட்டத்தில் தான் இருந்தோம். ஆனால் இறுதியாக 5 ஓவர்களில் 86 ரன்கள் விட்டுக் கொடுத்தது தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

venky

அதேபோன்று பேட்டிங்கிலும் நாங்கள் சிறப்பான துவக்கத்தை பெற்றோம். முதல் 7-8 ஓவர்களில் 70 ரன்களை குவித்த பிறகு அதனை அப்படியே தொடர தவறவிட்டு விட்டோம். இந்த தொடர் முழுவதுமே நிக்கோலஸ் பூரான் தனது நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதேபோன்று ராவ்மன் பவுலும் தனது பலத்தை இந்த தொடரில் வெளிப்படுத்தினார். இந்தியா போன்ற அணிக்கு எதிராக இங்கு வந்து விளையாடுவது என்பது எவ்வளவு சவால் நிறைந்த ஒன்று என்பது இந்த தொடரின் மூலம் தெரிய வந்திருக்கும்.

- Advertisement -

ஒரு நாள் போட்டிகளிலும் நாங்கள் வெற்றி பெறும் வாய்ப்பு இருந்தும் தவறவிட்டோம். எங்கள் அணியின் பந்துவீச்சு மற்றும் பேட்டிங்கில் உள்ள குறைகளை சரி சரி செய்ய வேண்டிய கடமை உள்ளது. எதிர் வரும் தொடர்களில் இந்த குறைகளை எல்லாம் நீக்கி மீண்டும் வெற்றி பாதைக்கு திருப்ப வேண்டியது அவசியம்.

இதையும் படிங்க : நம்மிடம் இருந்து ஒரு தப்பான விஷயமும் இப்போ சரியாடுச்சி – தொடர் வெற்றிக்கு பிறகு கேப்டன் ரோஹித் ஹேப்பி

2021 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரிலும் நாங்கள் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினோம். எனவே இனிவரும் தொடர்களில் அதனை சரிசெய்து எங்களது பணியை சிறப்பாக முடிக்க முயற்சி செய்வோம் என வருத்தத்துடன் கைரன் பொல்லார்டு பேசியது குறிப்பிடத்தக்கது.

Advertisement