சிறப்பாக ஆரபித்தும் சி.எஸ்.கே அணியிடம் நாங்க தோக்க இந்த வித்தியாசம் தான் காரணம் – பொல்லார்ட் வேதனை

Pollard-1
- Advertisement -

துபாய் சர்வதேச மைதானத்தில் நேற்று நடைபெற்ற சிஎஸ்கே மற்றும் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தி இந்த இரண்டாம் பாதி தொடரில் முதல் வெற்றியை ருசித்தது. அதுமட்டுமின்றி புள்ளி பட்டியலிலும் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி முதல் 3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.

Ruturaj

- Advertisement -

பின்னர் பவர் பிளே ஓவர்களின் முடிவில் 24 ரன்கள் மட்டுமே எடுத்து 4 விக்கெட்டுகளை இழந்திருந்தது. ஆனாலும் துவக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட்டின் நிலையான ஆட்டம் அவர்களுக்கு ஒரு நல்ல அடித்தளத்தை கொடுத்தது. அதுமட்டுமின்றி இறுதி நேரத்தில் ரவீந்திர ஜடேஜா மற்றும் பிராவோ ஆகியோர் ஓரளவு கைகொடுக்க சென்னை அணி 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 156 ரன்கள் என்கிற டீசண்டான இலக்கை எட்டியது.

அதன் பின்னர் 157 என்கிற இலக்கை துரத்திய மும்பை அணியானது திவாரியை தவிர மற்ற யாரும் சரிவர விளையாடாததால் 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 136 ரன்களை மட்டுமே குவித்தது. இதனால் 20 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி மோசமான தோல்வியை சந்தித்தது. இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய மும்பை அணியின் கேப்டன் பொல்லார்டு கூறுகையில் :

milne

இந்த போட்டியில் நாங்கள் நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்திருக்க வேண்டும். ஆனால் இந்த போட்டியில் நாங்கள் அதை செய்யத் தவறிவிட்டோம். இறுதியில் 20 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது இந்த போட்டியில் பெரிய வித்தியாசமாக அமைந்தது. ஏனெனில் பந்துவீசும் போது நாங்கள் இறுதியில் அதிகமாக ரன்களை விட்டுக்கொடுத்து விட்டோம். அந்த ரன்களே எங்களுக்கு பாதகமாக அமைந்தது. சென்னை அணி விக்கெட்டுகள் விழுந்தாலும் மொமென்டெத்தை அப்படியே கொண்டு செல்ல நினைத்தனர்.

ஆனால் நாங்கள் அதனை செய்ய தவறி விட்டோம். இந்த போட்டியில் பவர் பிளேயில் விக்கெட்டை விட்டால் என்ன ஆகும் என்பதை நாங்கள் கற்றுக் கொள்ள வேண்டும். இதுபோன்ற அளவிலான போட்டிகளில் நன்றாக செயல்படுவது அவசியம். இருப்பினும் எங்களுக்கு இன்னும் 6 போட்டிகள் உள்ளதால் நாங்கள் வலுவாக திரும்பி வருவோம் என பொல்லார்டு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement