கடைசி 5 ஓவர்களில் நானும் பாண்டியாவும் அதிரடியாக விளையாட இதுவே காரணம் – பொல்லார்ட் மகிழ்ச்சி

Pollard

ஐபிஎல் தொடரின் 13 வது லீக் போட்டி நேற்று அபுதாபி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும். கே.எல் ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதின. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.

mivskxip

அதன்படி முதலில் விளையாடிய மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்கள் குவித்தது. அந்த அணியின் கேப்டன் ரோகித் சர்மா சிறப்பாக விளையாடி 45 பந்துகளில் 70 ரன்கள் குவித்தார். மேலும் இறுதி நேரத்தில் பாண்டியா மற்றும் பொல்லார்ட் ஆகியோர் அதிரடியாக விளையாட அந்த 191 ரன்கள் குவித்தது.

அதன் பின்னர் 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்களை மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக நிக்கலஸ் பூரன் 44 ரன்களும். மயங்க் அகர்வால் 25 ரன்கள் குவித்தனர் இதன் காரணமாக மும்பை அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

pattinson

இந்நிலையில் போட்டி முடிந்து பேட்டியளித்த ஆட்டநாயகன் பொல்லார்டு கூறுகையில் : இந்த போட்டி உண்மையிலேயே சிறப்பாக இருந்தது. கடைசியாக நடைபெற்ற போட்டியில் நாங்கள் தோல்வி பெற்றிருந்தோம் எனவே இன்றைய போட்டியில் சரியாக திரும்பி வெற்றி பெற வேண்டும் என்று நினைத்து விளையாடினோம். எங்கள் அணியின் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டார்கள். 15வது ஓவரில் இருந்து நாங்கள் அதிரடியாக ஆட விளையாட ஆரம்பித்தோம்.

- Advertisement -

pandya

ஹர்டிக் பாண்டியா பேட்டை சுழற்றி தனது பலத்தினை காண்பித்தார். கடைசி நான்கு ஓவர்களில் வானமே எல்லை அப்படி நினைத்தே நாங்கள் விளையாடினோம். ஷார்ஜா அளவில் சிறியது ஆனால் இந்த மைதானம் அளவு பெரியது. எனவே கரெக்டாக அடித்தால் மட்டுமே எங்களால் பவுண்டரி அடிக்க முடியும் அதனை இந்த போட்டியில் செய்தோம். இரண்டு நாட்கள் இடைவெளியில் மீண்டும் வெற்றிக்கு திரும்பியது மகிழ்ச்சி என்று பொல்லார்ட் கூறியது குறிப்பிடத்தக்கது.