இவர்மட்டும் இல்லனா போட்டி “டை” ஆகியிருக்காது. 5 ஓவர்ல என்னா அடி – விவரம் இதோ

Pollard
- Advertisement -

நேற்று துபாய் மைதானத்தில் நடைபெற்ற மும்பை மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையேயான போட்டி ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமைந்தது என்று சொல்லலாம். ஏனெனில் முதலில் விளையாடிய பெங்களூர் அணி படிக்கல், பின்ச், டிவில்லியர்ஸ் மற்றும் துபே என அதிரடியில் கலக்க 20 ஓவர்கள் முடிவில் 201 ரன்களை குவித்தது.

- Advertisement -

அடுத்து விளையாடிய மும்பை அணி ஒரு கட்டத்தில் 39 ரன்களுக்கு 3 விக்கெட்டை இழந்து தடுமாறினாலும் இஷான் கிஷன் மற்றும் பொல்லார்ட் ஜோடியினால் சரிவில் இருந்து மீண்டது. ஒருபக்கம் இளம் வீரரான இஷான் கிஷனும் மறுபக்கம் அனுபவ வீரரான பொல்லார்டும் மாறி மாறி வாணவேடிக்கைகள் நிகழ்த்தினர்.

இவர்கள் இருவரும் 119 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து சாத்தியமே இல்லை என்று நினைத்த இலக்கை நோக்கி தங்களது அதிரடியை வெளிப்படுத்தினர். அதிலும் குறிப்பாக கடைசி 5 ஓவர்களில் வெற்றிக்கு 90 ரன் தேவைப்பட்ட நிலையில் பிரமாதமாக போட்டியை இறுதிவரை எடுத்து சென்று “டை” ஆக்கினர். இருப்பினும் மும்பை அணி சூப்பர் ஓவரில் தோல்வி அடைந்தது. இருப்பினும் மும்பை அணியின் இந்த சிறப்பான ஆட்டம் பாராட்டுக்குரியது.

ஒரு கட்டத்தில் இந்த போட்டி “டை” ஆகும் என்று யாரும் நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டார்கள். ஏனெனில் ஒரு ஓவருக்கு 18 வீதம் அதாவது கிட்டத்தட்ட 30 பந்துகளில் 90 ரன்கள் அடிக்க வேண்டிய நிலை இருந்தது. ஆனாலும் இந்த போட்டி இறுதி வரை சென்றதற்கு முக்கிய காரணம் அந்த அணியின் அதிரடி வீரரான பொல்லார்ட் என்றே கூறலாம். ஏனெனில் 10 பந்துகள் வரை நிதானமாக ஆடிய அவர் அடுத்து விளையாடிய பந்துகளை சரமாரியாக சிக்சருக்கு விளாசினார்.

Pollard 1

24 பந்துகளில் மட்டுமே சந்தித்த அவர் 250 ஸ்ட்ரைக் ரேட் வைத்து 5 சிக்ஸர் மற்றும் 3 பவுண்டரி என 60 ரன்களை குவித்தார். அதிலும் 17,18 ஆகிய ஓவர்களில் தனது பவர் ஹிட்டிங்கை அவர் வெளிப்படுத்தினார். இஷான் கிஷன் பிரதாமாதமாகவே ஆடினார் அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனாலும் பொல்லார்டின் அரக்கத்தனமான அடியே போட்டியை சமநிலைக்கு கொண்டு சென்றது என்று கூறினால் அது மிகையல்ல.

Advertisement