IND vs AUS : தார் ரோட்டுக்கு இது எவ்வளவோ பரவால்ல, ரொம்ப பிடிச்சுருக்கு – அஹமதாபாத் பிட்ச் பற்றி ஆஸ்திரேலியா புதிய கருத்து

Steve Smith Virat Kohli IND vs AUS
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் மோதும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. உலகின் டாப் 2 அணிகளான இவ்விரு அணிகள் பலப்பரீட்சை நடத்தி வரும் இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்று ஆரம்பத்திலேயே கோப்பையை கைப்பற்றிய இந்தியாவை 3வது போட்டியில் தோற்கடித்த ஆஸ்திரேலியா தங்களது நம்பர் ஒன் இடத்தை தக்க வைத்து ஒய்ட் வாஷ் தோல்வியை தவிர்த்து டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு முதல் அணியாக தகுதி பெற்று அசத்தியது. அதனால் 2 – 1* (4) என்ற கணக்கில் முன்னிலை வகித்தாலும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு தகுதி பெற அகமதாபாத் நகரில் நடைபெறும் கடைசி போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இந்தியா விளையாட உள்ளது.

முன்னதாக இத்தொடரில் இந்தியா வெல்வதற்கு வேண்டுமென்றே சுழலுக்கு சாதகமான மைதானங்களை அமைத்து வருவதாக ஒரு மாதம் முன்பாகவே ஸ்டீவ் ஸ்மித் விமர்சித்தார். ஆனால் முதலிரண்டு போட்டிகளில் சுமாராக பேட்டிங் செய்த அந்த அணியை அதே பிட்ச்சில் 400 ரன்கள் குவித்து தோற்கடித்த இந்தியா ஆஸ்திரேலியர்களின் பிட்ச் குற்றச்சாட்டுகளை பொய்யாக்கியது. இருப்பினும் 3வது போட்டியில் முதல் நாளிலேயே தாறுமாறாக சுழன்ற பிட்ச்சில் ஸ்டீவ் ஸ்மித் தலைமையில் சிறப்பாக செயல்பட்டு இந்தியாவை தோற்கடித்த ஆஸ்திரேலியா தங்களாலும் சாதிக்க முடியும் என்று நிரூபித்துள்ளது.

- Advertisement -

தார் ரோட்டுக்கு:
ஆனால் முதல் மணி நேரத்திலேயே 4.8 டிகிரி சுழன்றதால் மோசமாக இருந்ததாக ஐசிசி ரேட்டிங் வழங்கிய இந்தூர் பிட்ச் சுமாராக இருந்ததாக நிறைய இந்திய ரசிகர்களும் முன்னாள் வீரர்களுமே விமர்சித்து வருகிறார்கள். மொத்தத்தில் இந்த தொடரில் பயன்படுத்தப்படும் சுழலுக்கு சாதகமான மைதானங்கள் இரு நாட்டைச் சேர்ந்தவர்களையும் திருப்தி படுத்தவில்லை என்றே சொல்லலாம். இந்நிலையில் பாகிஸ்தான் போன்ற நாடுகளில் எதற்குமே கை கொடுக்காத தார் ரோட் போன்ற பிட்ச்களை விட இந்த சுழலுக்கு சாதகமான மைதானங்கள் தமக்கு மிகவும் பிடித்துள்ளதாக ஸ்டீவ் ஸ்மித் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்த தொடரின் ஆரம்பத்திலிருந்தே அனைத்து பிட்ச்களையும் முட்டி போட்டு தீவிரமாக ஆராய்ந்து வரும் அவர் அகமதாபாத் மைதானத்தை பார்த்த பின் பிட்ச் பிளாட்டாக இருப்பதால் 4வது போட்டியின் முதல் நாளில் பெரிய ரன்கள் குவிக்கலாம் என்று எதிர்பார்ப்பதாகவும் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இதுவரை இத்தொடரில் நான் பார்த்த 4 பிட்ச்களில் இது முதல் நாளில் பிளாட்டாக இருக்கும் என்று நினைக்கிறேன். தற்போது இங்கே 38 டிகிரி இருப்பதால் அதிக வெப்பம் காணப்படுகிறது. இந்த வெப்பத்தில் இந்த பிட்ச் இன்னும் காயும் என்று நினைக்கிறேன்”

- Advertisement -

“இந்த பிட்ச்சில் மீண்டும் லேசாக தண்ணீர் தெளிப்போம் என்று ஒரு மைதான பராமரிப்பாளர் என்னிடம் கூறினார். எனவே பிட்ச் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். இந்த தொடரில் இதுவரை பெரிய அளவில் ரன்கள் அடிக்கப்பட்டவில்லை. முதல் போட்டியில் மட்டும் இந்தியா 400 ரன்கள் அடித்த நிலையில் ரோகித் சர்மா 100 ரன்கள் அடித்து 400 இங்கே 400 ரன்கள் மிகவும் பெரியது என்பதை காட்டினார். அந்த வகையில் இந்த பிட்ச் முற்றிலும் வித்தியாசமாக தோன்றுகிறது”

“இது முதல் நாளிலேயே சுழலாமல் நாட்கள் செல்ல செல்ல சுழலும் என்று எதிர்பார்க்கிறேன். எனவே இந்த போட்டியில் பெரிய ஸ்கோர்கள் அடிப்பதற்கு அதிக வாய்ப்புள்ளது. இது போன்ற மைதானங்களில் நீங்கள் 200 ரன்கள் அடிப்பதே பெரிதாகும். எனவே எதற்காகவும் நாங்கள் பதற்றமடைந்து பிட்ச் பற்றி எந்த புகார் தெரிவிக்கவில்லை. சொல்லப்போனால் என்னை பொறுத்த வரை இது போன்ற பிட்ச்களில் மிகவும் மகிழ்ச்சியாக விளையாடுகிறேன். குறிப்பாக எதற்குமே கை கொடுக்காத தார் ரோட்களை விட இதில் விளையாடுவது மிகவும் வேடிக்கையானது”

இதையும் படிங்க:IND vs AUS : என்ன பண்ணாலும் உங்களுக்கு வாய்ப்பு கிடையாது. என்னடா இவருக்கு வந்த சோதனை – விவரம் இதோ

“இது போன்ற சூழ்நிலைகளில் நீங்கள் 70 – 80 ரன்கள் அடித்தாலே அந்த காலத்தைப் போல இப்போதும் வெற்றி பெறலாம். இருப்பினும் இந்த குறிப்பிட்ட பிட்ச்சில் 250 முதல் 400 – 450 ரன்கள் சராசரி ஸ்கோராக இருக்கலாம். இந்த மைதானங்களில் ஸ்ரேயாஸ் ஐயர் விளையாடியதை போல் அதிரடியாக எடுக்கும் 30 ரன்களும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது” என்று கூறினார்.

Advertisement