IND vs AUS : என்ன பண்ணாலும் உங்களுக்கு வாய்ப்பு கிடையாது. என்னடா இவருக்கு வந்த சோதனை – விவரம் இதோ

KL-Rahul
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை நடைபெற்று முதல் மூன்று போட்டிகள் முடிவடைந்த வேளையில் இந்திய அணியானது இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இருப்பினும் எதிர்வரும் நான்காவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு செல்லும் என்பதால் இந்த போட்டி இந்திய அணிக்கு மிக முக்கியமான ஒரு போட்டியாக பார்க்கப்படுகிறது.

IND vs AUS

- Advertisement -

இந்நிலையில் இந்த தொடரின் நான்காவது டெஸ்ட் போட்டியானது நாளை மார்ச் 9-ஆம் தேதி அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்புடன் இந்திய அணியும், இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்யும் முனைப்புடன் ஆஸ்திரேலியா அணியும் களமிறங்குகிறது.

இதன்காரணமாக இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த நான்காவது மற்றும் கடைசி போட்டியானது ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பினை பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த நான்காவது டெஸ்ட் போட்டிக்கான அணியிலும் இந்திய அணியின் துவக்க வீரரான கே.எல் ராகுலுக்கு இடம் கிடைக்காது என்று தெரிகிறது.

KL-Rahul

ஏனெனில் இந்த தொடரின் முதல் இரண்டு போட்டியில் இடம்பெற்ற அவர் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் காரணமாக கே.எல் ராகுல் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக இளம் துவக்க வீரரான சுப்மன் கில்லை களமிறக்கிவிட்டனர்.

- Advertisement -

ஆனால் மூன்றாவது போட்டியில் அவர் சற்று எதிர்பார்த்த அளவு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்றாலும் தொடர்ச்சியான வாய்ப்புகளை அளிக்க வேண்டும் என்பதற்காக அவரே நாளைய போட்டியில் ரோஹித் சர்மாவுடன் துவக்க வீரராக களம் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக அகமதாபாத் நகரில் நடைபெற்ற பயிற்சியில் கே.எல் ராகுல் கலந்து கொண்டாலும் கட்டாயம் சுப்மன் கில்லுக்கு தான் வாய்ப்பு கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க : ஓவர் தன்னம்பிக்கையால் தோற்றோமா? ஒரு மேட்ச் தோற்றதும் நீங்களே இப்படி பேசலாமா- ரவி சாஸ்திரிக்கு ரோஹித் பதிலடி

எனவே கே.எல் ராகுலுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்காது என்றே தெரிகிறது. அதேபோன்று நாளைய போட்டியில் இந்திய அணியில் நிச்சயம் ஒரு மாற்றம் இருக்கும் என்றும் அந்த மாற்றம் வேகப்பந்து வீச்சாளர் சிராஜுக்கு ஓய்வளிக்கப்பட்டு அவருக்கு பதிலாக அனுபவ வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி இடம் பெறுவார் என்பது மட்டுமே என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement