ஓவர் தன்னம்பிக்கையால் தோற்றோமா? ஒரு மேட்ச் தோற்றதும் நீங்களே இப்படி பேசலாமா- ரவி சாஸ்திரிக்கு ரோஹித் பதிலடி

Shastri
- Advertisement -

உலகின் நம்பர் ஒன் கிரிக்கெட் அணியான ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரின் முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்ற இந்தியா நடப்பு சாம்பியனாக இருப்பதால் 2017, 2018/19, 2020/21, 2023* ஆகிய அடுத்தடுத்த 4 கோப்பைகளை வென்ற முதல் அணியாக சாதனை படைத்தது. அதனால் தங்களது சொந்த மண்ணில் வலுவான அணி என்பதை மீண்டும் நிரூபித்த இந்தியா சுழலாமல் நேராக வரும் பந்துகளை கூட சரியாக எதிர்கொள்ள தேவையான டெக்னிக் தெரியாமல் திண்டாடும் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களை தெறிக்க விட்டு எஞ்சிய 2 போட்டிகளிலும் வென்று 4 – 0 என்ற கணக்கில் ஒயிட்வாஷ் செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

AUS

- Advertisement -

சொல்லப்போனால் பட் கமின்ஸ், டேவிட் வார்னர் போன்ற சில முக்கிய வீரர்கள் வெளியேறியதால் சொந்த மண்ணில் வலுவான இந்திய அணி நிச்சயம் ஆஸ்திரேலியாவை ஒய்ட் வாஷ் செய்யும் என்று சௌரவ் கங்குலி, ஹர்பஜன் சிங் போன்ற முன்னாள் வீரர்கள் தைரியமாக நம்பி பேசினார்கள். ஆனால் அவர்களும் இந்திய ரசிகர்களும் தலைகுனியும் அளவுக்கு இந்தூரில் நடைபெற்ற 3வது போட்டியில் தாறுமாறாக சுழன்ற பிட்ச்சில் தாக்கு பிடிக்க முடியாத இந்தியா 9 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது.

ரோஹித் பதிலடி:
அதனால் கடைசி போட்டியில் வென்றால் தான் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெற முடியும் என்ற நிலைமைக்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது. முன்னதாக முதலிரண்டு போட்டிகளில் பெற்ற வெற்றியால் ஏற்பட்ட அதிகப்படியான தன்னம்பிக்கை மற்றும் அஜாக்கிரதையால் 3வது போட்டியில் இந்தியா தோல்வியை சந்தித்ததாக முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கடுமையாக விமர்சித்திருந்தார். ஆனால் எதிரணிக்கு ஒரு இன்ச் கூட இடம் கொடுக்காமல் வெற்றி பெற நினைக்கும் தங்களது எண்ணத்தை ரவி சாஸ்திரி ஓவர் கான்ஃபிடன்ட் என்று கூறுவது ஏமாற்றத்தை கொடுப்பதாக கேப்டன் ரோஹித் சர்மா பதிலடி கொடுத்துள்ளார்.

Ravi-Shastri

இது பற்றி 4வது போட்டிக்கு முன் நிகழ்ந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசியது பின்வருமாறு. “உண்மையைச் சொல்ல வேண்டுமெனில் நீங்கள் 2 போட்டிகளை தொடர்ந்து வெல்லும் போது வெளியில் இருப்பவர்கள் நாங்கள் அதிக தன்னம்பிக்கையுடன் இருப்பதாக சொல்வார்கள். ஆனால் அவர்கள் அவ்வாறு கூறுவது குப்பை போன்றதாகும். ஏனெனில் நீங்கள் 4 போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட விரும்புவீர்கள். குறிப்பாக 2 போட்டிகளை வென்றதும் நிறுத்த விரும்ப மாட்டீர்கள். எனவே சிலர் நாங்கள் ஓவர் கான்ஃபிடண்டாக இருப்பதாக எப்போதும் பேசுவார்கள். ஆனால் அவர்களுக்கு இந்திய அணியில் என்ன நடக்கிறது என்பது தெரியாது”

- Advertisement -

“நாங்கள் 4 போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட விரும்புகிறோம். அது வெளியில் இருப்பவர்களுக்கு அதிக தன்னம்பிக்கையுடன் செயல்படுவது போல் தோன்றினால் அதைப் பற்றி நாங்கள் கவலைப்பட போவதில்லை. ஆனால் இதற்கு முன் இந்திய அணியுடன் இருந்த ரவி சாஸ்திரி நாங்கள் என்ன மனநிலையுடன் எப்படி விளையாடுவோம் என்பதை தெரிந்தும் இவ்வாறு பேசியது எனக்கு ஏமாற்றத்தை கொடுக்கிறது. இவை அனைத்தும் ஓவர் தன்னம்பிக்கை பற்றி கிடையாது. மாறாக இரக்கமற்ற முறையில் நடந்து கொள்ளக் கூடியதாகும்”

Rohit-Sharma

“இரக்கமற்றது என்ற வார்த்தை வெளிநாட்டுக்கு செல்லும் ஒவ்வொரு கிரிக்கெட் வீரர்களின் மனதிலும் எதிரணிக்கு ஒரு இன்ச் கூட இடம் கொடுக்காமல் நமது நாட்டுக்கு வெற்றிகரமாக செயல்பட வேண்டும் என்று நினைக்கும் போது தோன்றும். நாங்களும் வெளிநாடுகளுக்கு சென்ற போது அதை அனுபவித்துள்ளோம். அதாவது சில வெளிநாட்டு தொடர்களில் எதிரணிகள் எங்களுக்கு கொஞ்சம் கூட வாய்ப்பு கொடுக்காமல் தோற்கடித்துள்ளார்கள். அதே போன்ற மன நிலைமையில் இத்தொடரில் நாங்கள் விளையாட விரும்புகிறோம்” என்று கூறினார்.

இதையும் படிங்க:IND vs AUS : பேசாம திருந்துங்க, இந்த மாதிரி செய்றது கடைசில உங்களுக்கே வினையாகுது – இந்தியாவை எச்சரிக்கும் பாண்டிங்

அதாவது அதீத தன்னம்பிக்கையால் அஜாக்கிரதையாக செயல்படவில்லை என்று தெரிவிக்கும் ரோஹித் சர்மா எதிரணிக்கு இடம் கொடுக்காமல் தொடர்ந்து வெற்றி நடை போடும் எண்ணத்துடனேயே இந்தியா செயல்பட்டு வருவதாக கூறியுள்ளார். ஆனால் அது வெளியில் இருப்பவர்களுக்கு ஓவர் கான்ஃபிடன்ட் என்பது போல் தெரிந்தால் நாங்கள் எதுவும் செய்ய முடியாது என்றும் அவர் பதிலடி கொடுத்துள்ளார்.

Advertisement