IND vs AUS : பேசாம திருந்துங்க, இந்த மாதிரி செய்றது கடைசில உங்களுக்கே வினையாகுது – இந்தியாவை எச்சரிக்கும் பாண்டிங்

- Advertisement -

2023 பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்ற இந்தியாவை 3வது போட்டியில் தோற்கடித்த ஆஸ்திரேலியா ஒயிட் வாஷ் தோல்வியை தவிர்த்து தங்களது நம்பர் ஒன் இடத்தை தக்க வைத்து டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு அதிகாரப்பூர்வமாக தகுதி பெற்றுள்ளது. அதன் காரணமாக அகமதாபாத் நகரில் நடைபெறும் கடைசிப் போட்டியில் வென்றால் மட்டுமே டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெற முடியும் என்ற நிலைமைக்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது. இந்த தொடரில் ஆரம்ப முதலே சுழலுக்கு சாதகமான பிட்ச்கள் அமைக்கப்பட்டு வருவது நிறைய விமர்சனங்களை எழுப்பியுள்ளது.

IND vs AUS Indore Pitch

- Advertisement -

குறிப்பாக இந்தியா வெற்றி பெறுவதற்கு வேண்டுமென்றே சுழலுக்கு சாதகமான மைதானத்தை அமைத்து வருவதாக ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர்கள் கடுமையாக விமர்சித்தனர். இருப்பினும் அதற்கு தக்க பதிலடி கொடுத்த இந்திய ரசிகர்கள் இந்தூரில் முதல் நாளிலேயே 4.8 டிகிரி அளவுக்கு தாறுமாறாக பிட்ச் சுழன்று இந்தியா தோல்வியை சந்தித்ததால் அதிருப்தி அடைந்துள்ளனர். போதாக்குறைக்கு மோசம் என்று ரேட்டிங் வழங்கிய ஐசிசி 3 கருப்பு புள்ளிகளை தண்டனையாக கொடுத்ததால் என்ன தான் இந்தியாவில் சுழல் இருப்பது இயற்கை என்றாலும் அதற்காக முதல் நாளிலேயே சுழல்வது தரமான போட்டியை கொடுக்காது என்று இந்திய ரசிகர்களே தற்போது விமர்சித்து வருகிறார்கள்.

பாண்டிங் எச்சரிக்கை:
முன்னதாக இங்கிலாந்தில் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு தயாராகும் வகையில் அகமதாபாத் போட்டியில் வேகத்துக்கு சாதகமான பிட்ச் அமைக்குமாறு கேட்டுக் கொள்ள இருப்பதாக 3வது போட்டியின் துவக்கத்தில் தெரிவித்த கேப்டன் ரோஹித் சர்மா தாங்கள் தான் சுழலுக்கு சாதகமான மைதானங்களில் விளையாட விரும்புவதாக பிட்ச் பற்றிய விமர்சனங்களுக்கு 3வது போட்டியின் முடிவில் பதிலளித்தார். அத்துடன் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெற ட்ராவுக்கு பதில் போட்டிகளின் முடிவு தேவைப்படுவதால் தாங்கள் தான் இவ்வாறான பிட்ச்களை அமைக்க சொல்வதாக நேற்று பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டும் வெளிப்படையாக தெரிவித்திருந்தார்.

Motera

இந்நிலையில் 3வது போட்டியில் தோற்றதால் 4வது போட்டியில் ஏற்கனவே ரோகித் சர்மா தெரிவித்தது போல் இந்தியா வேகத்துக்கு சாதகமான பிட்ச் அமைக்காது என்று ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார். மேலும் வென்றாக வேண்டிய கட்டாயத்தால் மீண்டும் சுழலுக்கு சாதகமான பிட்ச் அகமதாபாத் மைதானத்தில் இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். ஆனால் இவ்வாறு சுழலுக்கு சாதகமான பிட்ச்கள் 2008 நாக்பூர், 2017 புனே, 2023 இந்தூர் போட்டிகளைப் போல பல தருணங்களில் இந்தியாவுக்கே வினையாக அமைவதாகவும் பாண்டிங் கூறியுள்ளார்.

- Advertisement -

எனவே டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெற வேண்டும் என்ற எண்ணத்துடன் இவ்வாறு செய்வது கடைசியில் அந்த கனவை உடைப்பதற்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கும் அவர் பேசாமல் தற்போதைய போட்டியில் எப்படி வெல்லலாம் என்பதை மட்டும் யோசிக்குமாறு இந்தியாவை எச்சரித்துள்ளார். இது பற்றி ஐசிசி இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “3வது டெஸ்ட் போட்டியில் தோற்றதால் தற்போது மொத்த தொடரும் முக்கிய புள்ளியில் வந்து நிற்கிறது. ஒருவேளை இந்தூரில் இந்தியா வென்றிருந்தால் 4வது போட்டியில் இங்கிலாந்து சூழ்நிலைக்கு சமமான பிட்ச் அமைத்திருப்பார்கள்”

Ponting

“ஆனால் அது நடைபெறாததால் தற்போது அவர்கள் வேகத்துக்கு சாதகமான பிட்ச் அமைக்க வாய்ப்பில்லை. மறுபுறம் இது போன்ற நிலைமையை தான் ஆஸ்திரேலியா முதல் போட்டியில் எதிர்பார்த்தது. அதாவது இந்திய வீரர்கள் மற்றும் மைதான பராமரிப்பாளர்கள் எந்த வகையான பிட்ச்சை அமைக்கலாம் என்பதில் ஒரு விதமான சந்தேகத்துடன் இருப்பதையே ஆஸ்திரேலியா விரும்புகிறது. இதற்கு முன் இந்தியாவில் இதை நான் பார்த்துள்ளேன். அதாவது இந்தியா வேண்டுமென்றே சுழலுக்கு சாதகமான மைதானங்களை அமைக்க முயற்சிக்கும் போது பலமுறை அது அவர்களுக்கே வினையை கொடுத்துள்ளது”

இதையும் படிங்க: நீங்க கூல் ட்ரிங்ஸ் தூக்குறத பாக்க முடியல, இனியாவது தடவாம அதிரடியா விளையாடுங்க – கேஎல் ராகுலுக்கு முன்னாள் வீரர் அட்வைஸ்

“ஸ்டீவன் ஓ’கீபி அனைத்து விக்கெட்டுகளையும் (2008இல்) எடுத்த போது அது நடந்தது. எனவே முக்கியமான கடைசி போட்டியில் அவர்கள் எந்த வகையான பிட்ச் அமைக்கப் போகிறார்கள் என்பதை பார்க்க ஆவலாக உள்ளது. ஆனால் நானாக இருந்தால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு இன்னும் நிறைய தூரம் இருப்பதால் அதைப் பற்றி கவலைப்படாமல் இப்போட்டியின் அடுத்த 5 நாட்களில் மட்டும் சிறந்து விளையாடுவதற்கு தேவையான கவனத்தை செலுத்துவேன்” என்று கூறினார்.

Advertisement