நீங்க கூல் ட்ரிங்ஸ் தூக்குறத பாக்க முடியல, இனியாவது தடவாம அதிரடியா விளையாடுங்க – கேஎல் ராகுலுக்கு முன்னாள் வீரர் அட்வைஸ்

Rahul
Advertisement

கர்நாடகாவை சேர்ந்த நட்சத்திர கிரிக்கெட் வீரர் கேஎல் ராகுல் தற்சமயத்தில் உச்சகட்ட விமர்சனங்களை சந்தித்து இந்திய அணியில் தன்னுடைய இடத்தையும் இழந்துள்ளார். கடந்த 2014ஆம் ஆண்டு அறிமுகமாகி ஆரம்ப காலங்களில் ரொம்பவே தடுமாறிய அவர் நாட்கள் செல்ல செல்ல நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தி 2019ஆம் ஆண்டு உச்சகட்ட ஃபார்மை எட்டினார். அதனால் நிலையான இடத்தைப் பிடிக்கத் துவங்கிய அவரை பிசிசிஐ வருங்கால கேப்டனாக உருவாக்க நினைத்தது. ஆனால் நாளடைவில் அந்த இடத்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக சுயநல எண்ணத்துடன் செயல்படத் துவங்கிய அவர் ஐபிஎல் தொடரில் 500, 600 போன்ற பெரிய ரன்களை குவித்தும் அதை குறைவான ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்ததால் தனது அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்தார்.

kl rahul

அதை புள்ளி விவரங்கள் மற்றும் ஆதாரங்களுடன் நிரூபித்த ரசிகர்கள் அவரை தடவல் நாயகன் என்று கிண்டலடிக்க துவங்கினர். போதாக்குறைக்கு 2022 ஐபிஎல் தொடருக்கு பின் சந்தித்த காயத்திலிருந்து குணமடைந்த பின் ஃபார்மை இழந்த கேஎல் ராகுல் அடித்து நொறுக்க வேண்டிய ஓப்பனிங் இடத்தில் மெதுவாக பேட்டிங் செய்தது 2022 ஆசிய மற்றும் டி20 உலகக் கோப்பை இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. அதனால் கடுமையான விமர்சனங்கள் எழுந்ததால் துணை கேப்டன்ஷிப் பதவியை பறித்த பிசிசிஐ அவருக்கு ஒருநாள் அணியில் விக்கெட் கீப்பராக மிடில் ஆர்டரில் விளையாடும் வாய்ப்பை மட்டும் கொடுத்துள்ளது.

- Advertisement -

பாக்க முடியல:
அதே போல் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் சுமாராக செயல்பட்டதால் துணை கேப்டன்ஷிப் பதவியை இழந்த ராகுல் விளையாடும் 11 பேர் அணியிலும் நிலையான இடத்தை இழந்துள்ளார். இதன் காரணமாக அடுத்து வரும் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு விரைவில் துவங்கும் 2023 ஐபிஎல் தொடரிலும் லக்னோ அணியின் கேப்டனாக அற்புதமாக செயல்பட்டால் மட்டுமே இழந்த இடங்களை மீண்டும் பிடிக்க முடியும் என்ற நிலைமைக்கு ராகுல் தள்ளப்பட்டுள்ளார். இந்நிலையில் ஐபிஎல் தொடரில் 4 – 5 சதங்களை அடித்தும் லக்னோ அணியின் கேப்டனாக இருந்தும் இந்திய அணியில் இடம் கிடைக்காமல் கேஎல் ராகுல் கூல் ட்ரிங்ஸ் தூக்குவதை பார்க்க முடியவில்லை என்று முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

Rahul

அத்துடன் வரலாற்றின் அனைத்து வீரர்களும் தங்களது வாழ்நாளில் இது போன்ற நிலைமையை சந்தித்துள்ளார்கள் என்று விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ள அவர் இனிமேலாவது 600 ரன்களை குவிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்படாமல் அணி வெற்றி பெறுவதற்கு தேவையான ரன்களை அதிரடியான வேகத்தில் எடுக்க முயற்சியுங்கள் என ராகுலுக்கு முக்கியமான ஆலோசனையும் கொடுத்துள்ளார். அதை செய்தால் மட்டுமே இழந்த இடத்தை மீண்டும் பிடிக்க முடியும் என்று தெரிவிக்கும் கௌதம் கம்பீர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“கிரிக்கெட்டில் விளையாடும் ஒவ்வொரு வீரர் மற்றும் வீராங்கனைகள் தங்களது கேரியரில் இது போன்ற நிலைமையை சந்திப்பார்கள். இந்த உலகில் தங்களது முதல் போட்டியிலிருந்து கேரியரின் கடைசி போட்டி வரை தொடர்ந்து ரன்கள் அடித்த ஒருவருடைய பெயரை சொல்லுங்கள் பார்ப்போம். எனவே சில நேரங்களில் இந்த வீழ்ச்சியும் நல்லதாகும். இது போன்ற தருணங்கள் உங்களுக்கு ஏமாற்றத்தையும் வலிகளையும் கொடுக்கும். அதுவும் நல்லதாகும்”

Gambhir

“நீங்கள் ஒரு ஐபிஎல் அணியின் கேப்டனாக ஐபிஎல் தொடரில் 4 – 5 சதங்களை அடித்துள்ளீர்கள். ஆனாலும் இந்திய அணியில் உங்களது இடத்தில் வேறு ஒருவர் விளையாடுவதை நீங்கள் கூல் ட்ரிங்ஸ் தூக்கிக்கொண்டு பார்க்கும் போது நிச்சயமாக வேதனை அடைவீர்கள். எனவே நீங்கள் ஐபிஎல் கிரிக்கெட்டை வெறும் ஒரு தொடராக விளையாட வேண்டும் அல்லது ஐபிஎல் தொடர் உங்களை மாற்றி அமைத்துக் கொள்ளும் ஒரு இடமாக பார்க்க வேண்டும்”

இதையும் படிங்க: IND vs AUS : 4 ஆவது டெஸ்ட் போட்டியில் விக்கெட் கீப்பர் கே.எஸ் பரத்தா? இஷான் கிஷானா? – டிராவிட் கூறிய தகவல் இதோ

“அத்துடன் உங்களது அணியும் உங்களது நாடும் எதிர்பார்க்கும் அளவுக்கு செயல்பட முடியுமா என்று உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள். அதை விட 600 ரன்கள் அடிப்பது முக்கியமல்ல. 400 – 500 ரன்களை அடித்தாலும் அது உங்களது அணியின் வெற்றியில் பங்காற்றக் கூடியதாக இருக்க வேண்டும்” என்று கூறினார்.

Advertisement