ஒருநாள் தொடரில் அதிக தொடர்நாயகன் விருது வென்ற வீரர்கள். அதில் 4 இந்திய வீரர்கள் இருக்காங்க – பட்டியல் இதோ

Dhoni

சர்வதேச கிரிக்கெட் அரங்கில் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் அறிமுகமாகி கிட்டத்தட்ட 40 வருடங்கள் ஆகிறது. தற்போது ஒரு நாள் கிரிக்கெட்டில் அதிக மோகம் வந்துள்ளது. இதற்கு காரணம் பேட்ஸ்மேன்கள் தான். ஒவ்வொரு தொடர் நடக்கும்போதும் பேட்ஸ்மென்கள் தொடர் நாயகன் விருது பெறுபவர்கள். இப்படி அதிக தொடர் நாயகன் விருது பெற்ற 10 வீரர்களின் பட்டியலை இங்கே பார்ப்போம்.

Ponting

ரிக்கி பாண்டிங் – 7 முறை :

ஆஸ்திரேலிய அணியை சேர்ந்த இவர். ஆஸ்திரேலிய அணியின் மிகச் சிறந்த கேப்டன்களில் ஒருவராக இருக்கிறார். பல முறை இவரது ஆக்ரோஷமான ஆட்டத்தால் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றுள்ளார். மிகச் சிறந்த கேப்டன் மட்டுமல்லாது இவர் மிகச் சிறந்த பேட்ஸ்மேநும் ஆவார். மொத்தம் 375 ஒருநாள் போட்டிகளில் ஆடி 7 முறை தொடர் நாயகன் விருது வென்றுள்ளார். 13,378 ரன்கள் விளாசியுள்ளார்.

சவுரவ் கங்குலி – 7 முறை :

இந்திய அணியின் ஆக்ரோஷமான கேப்டன் என்று அழைக்கப்படும், இவரது காலகட்டத்தில்தான் இந்தியா அடித்து ஆட தொடங்கியது. எதிரணிகளை சீண்டி விளையாட தொடங்கியது என்று கூறலாம். சச்சின் டெண்டுல்கரின் மிகச்சிறந்த இணை பேட்ஸ்மேன் இவர். இடது கை பேட்ஸ்மேனான இவர் கொஞ்சமும் தயங்காமல் பந்துகளை விளாசுவதில் வல்லவர். 311 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 11,363 ரன்கள் குவித்துள்ளார். மற்றும் 7 முறை தொடர் நாயகன் விருதை வென்றுள்ளார்.

- Advertisement -

Ganguly 1

யுவராஜ் சிங் – 7 முறை :

இந்திய அணி உருவாக்கிய மிகச் சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவர். மேலும், மிகப்பெரிய ஐசிசி தொடர்கள் வரும்போது சிறப்பாக பங்களிக்க கூடிய ஒரு வீரர். 2007 மற்றும் 2011ம் ஆண்டுகளில் நடந்த உலக கோப்பை தொடரில் இந்திய அணிக்கு மிகச் சிறந்த பேட்ஸ்மேனாகவும், பந்து வீச்சாளராகவும் இருந்தார். இவர் மொத்தம் 304 ஒருநாள் போட்டிகளில் ஆடி 7 முறை தொடர் நாயகன் விருது பெற்றுள்ளார்.

ஹாஷிம் அம்லா – 7 முறை :

தென் ஆப்பிரிக்க அணியின் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர் இவர். இவர் ஓய்வு பெற்றுவிட்டார். இக்கட்டான சூழ்நிலைகளில் தென்னாப்பிரிக்க அணியை பலமுறை மீட்டுள்ளார். 181 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 7 முறை தொடர் நாயகன் விருது வென்றுள்ளார். மேலும் 8113 ரன்களையும் விளாசியுள்ளார்.

விவியன் ரிச்சர்ட்ஸ் – 7 முறை :

80களில் மிகவும் அதிரடியாக ஆடி புகழ் பெற்றவர் விவியன் ரிச்சர்ட்ஸ். தற்போதைய கிரிக்கெட் வீரர்கள் அதிரடியாக ஆடுவதற்கு இவர்தான் காரணம். மொத்தம் 187 ஒருநாள் போட்டிகளில் விளையாடி ஏழு முறை தொடர் நாயகன் விருது வென்றுள்ளார். தனது அதிரடி ஆட்டத்தால் மொத்தம் 6,271 ரன்கள் குவித்துள்ளார்.

Gayle 1

கிறிஸ் கெய்ல் – 8 முறை :

ஆக்ரோஷமாகவும் அதிரடியாக ஆடக்கூடிய பேட்ஸ்மேன்களில் இவரும் ஒருவர். தற்போது 40 வயது ஆனாலும் உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் லீக் தொடர்களில் ஆடி தனது ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். 71 ஒருநாள் தொடர்களில் விளையாடியுள்ள கிறிஸ் 8 முறை தொடர் நாயகன் விருது வென்றுள்ளார். மேலும் 10,450 ரன்களும் குவித்துள்ளார்.

ஷான் பொல்லாக் – 9 முறை :

சர்வதேச கிரிக்கெட்டின் சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவர் இவர். தென்னாப்பிரிக்க அணியை சேர்ந்த இவர் பந்து வீச்சாளராக இருந்து பல தொடர் நாயகன் விருதுகளை வென்றுள்ளார். மொத்தம் 303 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று 9 முறை தொடர் நாயகன் விருது பெற்று இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளார்.

Kohli-2

விராட் கோலி – 9 முறை :

இந்திய அணியின் மிகச் சிறந்த கேப்டன்களில் ஒருவரான விராட் கோலி, தற்போதைய காலத்தில் மிகச் சிறந்த பேட்ஸ்மேனாக இருக்கிறார். தற்போது வரை வெறும் 245 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 9 முறை தொடர் நாயகன் விருது வென்றுள்ளார். மேலும் 11792 ரன்கள் குவித்துள்ளார். இன்னும் பல சாதனைகள் இவர் முறியடிக்க வாய்ப்புள்ளது.

சனத் ஜெயசூர்யா – 11 முறை :

இலங்கை அணியின் மிகச்சிறந்த இடதுகை அதிரடி ஆட்டக்காரர் இவர். அதிரடியாக ஆடுவதில் வல்லவர். இடது கை சேவாக் என்றும் கூறலாம். இவர் மொத்தம் 445 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 11 முறை தொடர் நாயகன் விருது வென்று 13,130 ரன்கள் குவித்துள்ளார்.

சச்சின் டெண்டுல்கர் – 15 முறை :

இவரை பற்றி சொல்லவே தேவையில்லை. அந்த அளவிற்கு பல சாதனைகளை அடுக்கி வைத்துள்ள கிரிக்கெட்டின் கடவுள் இவர். கிரிக்கெட்டில் பல ஆயிரம் சாதனைகளுக்குச் சொந்தக்காரர் இவர். 463 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று 18426 ரன்கள் குவித்துள்ளார் அதில் 15 முறை தொடர் நாயகன் விருது வென்றுள்ளார்.