கடந்த டி20 உ.கோ இந்திய அணிலும் இப்போதைய அணியிலும் வெளியேறிய – உள்ளே வந்த வீரர்களின் பட்டியல்

Kohli
- Advertisement -

வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் ஐசிசி டி20 உலக கோப்பையை வெல்வதற்கு ரோகித் சர்மா தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் துபாயில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் விராட் கோலி தலைமையில் நாக்-அவுட் சுற்றுக்கு கூட தகுதி பெறாத இந்தியாவுக்கு கடந்த ஒரு வருடமாக நடைபெற்ற தொடர்களில் ஏராளமான மாற்றங்களை நிகழ்த்திய ரோகித் சர்மா – ராகுல் டிராவிட் கூட்டணி அதில் வெற்றிபெற தங்களுக்கு தேவையான வீரர்களை தேர்வு செய்து தேவையற்ற வீரர்களை கழற்றி விட்டுள்ளது.

IND

- Advertisement -

அந்த வகையில் கடந்த உலகக்கோப்பையில் இடம் பிடித்திருந்தாலும் இம்முறை காணாமல் போனவர்களைப் பற்றி பார்ப்போம்:
1. இஷான் கிசான்: விக்கெட் கீப்பிங் செய்யக்கூடிய அதிரடியான இளம் தொடக்க வீரரான இவர் கடந்த வருடம் பேக்-அப் தொடக்க வீரராக துபாய்க்கு அழைத்து செல்லப்பட்டார்.

Ishan-Kishan

பாகிஸ்தானுக்கு எதிராக தோற்ற முதல் போட்டியில் வாய்ப்பு பெறாத இவருக்கு நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கும் வாய்ப்பு கொடுக்கப்பட்டு ரோஹித் சர்மா 3வது இடத்தில் களமிறங்கியது மீண்டும் தோல்வியை கொடுத்தது. அதன்பின் ஐபிஎல் 2022 தொடரில் அதிகப்படியான தொகையால் பார்மை இழந்து ரன்கள் குவிக்க தடுமாறிய இவர் இம்முறை முதன்மை அணியில் தேர்வாகும் வாய்ப்பையும் இழந்தார்.

2. ராகுல் சஹர்: கடந்த வருடம் சஹால் பார்மை இழந்ததால் கடைசி நேரத்தில் தேர்வு செய்யப்பட்ட இவருக்கு நமீபியாவுக்கு எதிரான போட்டியில் மட்டுமே விளையாடும் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அதில் விக்கெட் எடுக்காத இவர் அதன்பின் எந்த ஒரு டி20 போட்டியிலும் விளையாடாமல் ஐபிஎல் 2022 தொடரிலும் சுமாராக செயல்பட்டதால் இம்முறை காணாமல் போயுள்ளார்.

- Advertisement -

varun

3. வருண் சக்ரவர்த்தி: ஐபிஎல் 2021 தொடரில் அற்புதமாக செயல்பட்டதால் அனுபவமில்லாத போதிலும் ஆச்சரியப்படும் வகையில் உலகக்கோப்பையில் தேர்வான இவர் தினேஷ் கார்த்திக் எனும் சாவி இல்லாத பொம்மையாக சுமாராக செயல்பட்டார். முக்கிய போட்டிகளில் விளையாடி ஒரு விக்கெட்டை கூட எடுக்காத காரணத்தால் அத்தோடு கழற்றி விடப்பட்ட அவர் ஐபிஎல் 2022 தொடரில் மோசமாக செயல்பட்டு பெஞ்சில் வைக்கப்பட்டதால் இம்முறை உத்தேச அணியில் கூட இடம் பிடிக்கவில்லை.

4. ஷார்துல் தாகூர்: எதிரணிகள் போடும் பார்ட்னர்ஷிப்பை பிரிக்கும் திறமையும் அடுத்தடுத்த விக்கெட்டுகளையும் லோயர் ஆர்டரில் கணிசமான ரன்களையும் எடுக்கும் திறமை பெற்றுள்ள இவர் கடந்த உலக கோப்பையில் இடம் பிடித்தாலும் விளையாடவில்லை. அதன்பின் கிடைத்த வாய்ப்புகளில் பந்துவீச்சில் ரன்களை வாரி வழங்கியதாலும் ஹர்திக் பாண்டியா பார்முக்கு திரும்பி விட்டதாலும் இம்முறை இவர் கழற்றி விடப்பட்டுள்ளார்.

- Advertisement -

Ravindra-Jadeja

5. ரவீந்திர ஜடேஜா: முதன்மை சுழல் பந்துவீச்சு ஆல்-ரவுண்டரான இவர் ஆசிய கோப்பையில் நல்ல பார்மில் இருந்தும் அலைச்சறுக்கு செய்யும் போது தன்னைத்தானே காயப்படுத்திக் கொண்டு உலகக் கோப்பையிலிருந்து வெளியேறியுள்ளார்.

6. முகமத் ஷமி: கடந்த உலக கோப்பையில் முழுமையாக விளையாடிய இவருக்கு அதன்பின் 30 வயதை கடந்து விட்டதால் ஒரு போட்டியில் கூட வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. இருப்பினும் ஐபிஎல் 2022 தொடரில் குஜராத் சாம்பியன் பட்டம் வெல்ல முக்கிய பங்காற்றி நல்ல பார்மில் இருக்கும் இவர் வயது காரணமாக சேர்க்கப்படாதது நிறைய கேள்விகளை எழுப்பியுள்ளது. அதனால் இம்முறை ஸ்டாண்ட் பை லிஸ்டில் இருக்கும் இவர் கடைசி நேரத்தில் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது.

- Advertisement -

Deepak-Hooda

சரி கடந்த உலகக் கோப்பைக்கு பின் ரோகித் சர்மாவை கவரும் அளவுக்கு சிறப்பாக செயல்பட்டு இம்முறை உள்ளே நுழைந்துள்ள வீரர்களை பற்றி பார்ப்போம்:
1. தீபக் ஹூடா: கடந்த பிப்ரவரியில் அறிமுகமாகி குறுகிய காலத்திலேயே நம்பிக்கை நட்சத்திர சுழல் பந்து வீச்சாளராக உருவெடுத்துள்ள இவர் காயத்தால் வெளியேறிய ஜடேஜாவின் பேக்-அப் வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

2. அக்சர் படேல்: சுழல் பந்துவீச்சு ஆல்-ரவுண்டரான இவரும் சமீபத்திய ஐபிஎல் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் அசத்தியதால் காயமடைந்த ஜடேஜாவின் மாற்று வீரராக தேர்வாகியுள்ளார்.

IND vs RSA Chahal Axar Patel

3. யுஸ்வென்ற சஹால்: கடந்த முறை பார்மின்றி தவிர்த்ததால் அதிரடியாக நீக்கப்பட்ட இவர் இல்லாதது தோல்விக்கு ஒரு காரணமாக அமைந்தது. ஆனால் அதன்பின் கடினமாக உழைத்து ஐபிஎல் 2022 தொடரில் ஊதா தொப்பியை வென்று கம்பேக் கொடுத்துள்ள இவர் முதன்மை சுழல் பந்து வீச்சாளராக தேர்வாகியுள்ளார்.

4. தினேஷ் கார்த்திக்: ஒருகட்டத்தில் வர்ணனையாளராக அவதரித்ததால் கேரியர் முடிந்ததாக கருதப்பட்ட இவர் தம்மால் இந்த டி20 உலக கோப்பையில் விளையாடி கோப்பையை வெல்ல முடியும் என்ற லட்சியத்துடன் கடினமாக உழைத்து ஐபிஎல் 2022 தொடரில் அபாரமாக செயல்பட்டு தற்போதைய அணியின் பினிஷராக தேர்வாகியுள்ளது அவரின் உழைப்புக்கு கிடைத்த பரிசாகும்.

Dinesh-Karthik

5. ஹர்ஷல் படேல்: 2021 ஐபிஎல் தொடரில் ஊதா தொப்பியை வென்று அசத்திய இவர் டெத் ஓவர்களில் துல்லியமாக பந்துவீசி கடந்த உலகக் கோப்பைக்குப்பின் முதன்மை பந்துவீச்சாளராக உருவெடுத்துள்ளார். சமீபத்திய ஆசிய கோப்பையில் காயத்தால் வெளியேறினாலும் குணமடைந்ததும் தேர்வாகும் அளவுக்கு இவர் முக்கியமான வீரராக உருவாக்கியுள்ளார்.

6. அர்ஷிதீப் சிங்: சமீப காலங்களில் ஐபிஎல் தொடரில் துல்லியமாக பந்துவீசிய இடது கை வேகப்பந்து வீச்சாளரான இவர் கடந்த சில மாதங்களுக்கு முன் இந்தியாவுக்காக அறிமுகமாகி எந்த வாய்ப்பையும் வீணடிக்காமல் செயல்பட்டதால் தற்போது நேரடியாக உலக கோப்பைக்கு தேர்வாகி அசத்தியுள்ளார்.

Advertisement