தேசப்பற்று குறைந்து ஐபிஎல் பணம் கிடைத்தால் போதும்னு நினைக்கிறாங்க – இளம் வீரர்கள் பற்றி ஜாம்பவான் வேதனை

Young
Advertisement

இந்தியாவின் மிகப்பெரிய கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் 2022 தொடரில் மே 29இல் நடைபெற்ற மாபெரும் இறுதிப் போட்டியில் ராஜஸ்தானை தோற்கடித்த ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் தனது முதல் வருடத்திலேயே சொந்த மண்ணில் சொந்த ரசிகர்களுக்கு முன்னிலையில் கோப்பையை வென்று சரித்திரம் படைத்தது. பொதுவாக ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு வருடமும் பல தரமான இளம் வீரர்கள் அடையாளம் காணப்படுவார்கள். உள்ளூர் போட்டிகளில் கடினமாக உழைத்து ஐபிஎல் தொடரில் வாய்ப்பைப் பெறும் அவர்களுக்கு அணி நிர்வாகங்கள் வெறும் 2 மாதத்திற்கு விளையாட கோடிகளை சம்பளமாக கொடுக்கின்றன.

Top 5 Exciting Young Talented Players to Watch Out in IPL 2022

அதனால் மிகவும் குறுகிய காலத்திலேயே வாழ்க்கை தரத்தில் உயர்ந்து விடும் பல கிரிக்கெட் வீரர்களின் மனதில் ஐபிஎல் தொடரில் மட்டும் விளையாடினால் போதும் அதை வைத்தே பெரிய அளவில் உயர்ந்து விடலாம் என்ற எண்ணம் இயற்கையாகவே ஏற்படுகிறது. அப்படிப்பட்ட எண்ணம் தொடர்ச்சியாக சிறப்பாக செயல்பட்டு நாட்டுக்காக விளையாட வேண்டுமென்ற லட்சியத்தையும் தள்ளிப் போடுகிறது.

- Advertisement -

ஐபிஎல் பணம்:
பொதுவாக ஒரு பெரிய பணத்தை காணும்வரை கடினமாக உழைக்கும் மனிதன் அதைப் பார்த்ததும் அந்தப் பணத்தில் நன்றாக வாழவேண்டும் என நினைத்து வேலை செய்வதை குறைத்து சோம்பேறியாக மாறுவது இயற்கையான குணமாகும். அதே குணம்தான் இந்த ஐபிஎல் வாயிலாக நிறைய இளம் வீரர்களின் மனதை மாற்றுகிறது. சச்சின் விளையாடிய காலத்தில் பணம் என்பதைப் பற்றி சிந்திக்காமல் ரஞ்சி கோப்பை போன்ற கடினமான உள்ளூர் தொடரில் தொடர்ச்சியாக விளையாடினால் மட்டுமே இந்தியாவுக்காக விளையாட முடியும் என்ற நிலை இருந்தது.

Venkatesh-iyer-1

ஆனால் இப்போது ஐபிஎல் தொடரில் ஒரு வருடம் சிறப்பாக விளையாடினால் கோடிக்கணக்கில் பணமும் அதே வருடத்தில் இந்தியாவிற்காக விளையாடும் வாய்ப்பும் தாமாக வருகிறது. அதன் காரணமாக அந்தப் பணத்தையும் வாய்ப்பையும் ஆரம்பத்திலேயே பார்த்துவிடும் இளம் வீரர்கள் தொடர்ச்சியாக கடினமாக உழைக்கவேண்டும் என்ற எண்ணத்தைக் கைவிட்டு சுமாராக செயல்பட ஆரம்பிக்கின்றனர். எடுத்துக்காட்டாக கடந்த 2021 சீசனில் அட்டகாசமாக செயல்பட்ட வெங்கடேஷ் ஐயர், ருதுராஜ் கைக்வாட், வருண் சக்ரவர்த்தி போன்ற இளம் வீரர்கள் இந்த வருடம் சோடை போனதை கூறலாம்.

- Advertisement -

கவாஸ்கர் ஆதங்கம்:
இந்நிலையில் இன்றைய இளம் வீரர்கள் ஐபிஎல் தொடரில் ஒரு வருடம் சிறப்பாக விளையாடி பணம் சம்பாதித்தால் போதும் என்று நினைப்பதால் தொடர்ச்சியாக சிறப்பாக செயல்பட்டு நாட்டுக்காக விளையாட வேண்டும் என்ற என்னத்தை கடைபிடிப்பதில்லை என்று முன்னாள் இந்திய ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் வேதனை தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் பேசியது பின்வருமாறு. “தற்போது ஐபிஎல் வெற்றிகரமாக முடிந்துள்ள நிலைமையில் அது இந்திய கிரிக்கெட்டுக்கு என்ன செய்தது? வழக்கம் போல இந்த வருடமும் வருங்காலத்தில் சிறப்பாக செயல்படுவார்கள் என்று நம்பிக்கையை ஏற்படுத்திய ஒருசில நல்ல இளம் வீரர்களை அடையாளம் காட்டியது. ஆனால் முதல் சீசனில் ஜொலிக்கும் அவர்கள் அடுத்த வருடங்களில் மறைந்து போய் விடுகிறார்கள்”

sunil1

“அதுபோன்ற பெயர்களைக் கொண்ட நிறைய வீரர்கள் உள்ளனர். எனவே ஒரு தொடரில் லீக் மற்றும் நாக்-அவுட் சுற்று என அனைத்து தருணங்களிலும் அதிரடியான ரன்களைக் குவித்து மிரட்டலான விக்கெட்டுக்களை எடுக்கும் வீரர்கள் அடுத்த வருடமும் அதையே திரும்ப செய்கிறார்களா அல்லது சறுக்கிறார்களா என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும். ஒரு சீசனில் சிறப்பாக செயல்பட்டவர்களால் 2-வது சீசனில் சிறப்பாக செயல்பட முடியவில்லை. அதையும் தாண்டி சிறப்பாக செயல்படுபவர்களுக்கே நல்ல எதிர்காலம் உள்ளது. மேலும் நிறைய ஐபிஎல் ஸ்டார்கள் டி20 ஸ்பெஷலிஸ்ட் என்ற பெயருடன் உள்ளூர் போட்டிகளில் விளையாடுவதில்லை”

- Advertisement -

“அவர்களில் பலர் ஐபிஎல் தொடரில் விளையாடி பணத்தை பெறுவதால் உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டும் என்ற எண்ணத்தை குறைத்துக் கொண்டு அதை மகிழ்ச்சியாக செய்கின்றனர். மேலும் அவர்களின் லட்சியங்கள் மட்டுப்படுத்தப்படுவதில் அவர்கள் திருப்தி அடைகிறார்கள். எனவே இது போன்ற அம்சங்கள் உண்மையாகவே இந்திய கிரிக்கெட்டுக்கு அதிக லாபத்தை கொடுப்பதில்லை” என்று தெரிவித்தார்.

IPL 2022

ஐபிஎல் பின்னடைவு:
அதாவது ஐபிஎல் தொடரில் ஒரு சீசனில் சிறப்பாக விளையாடும் வீரர்கள் அடுத்த வருடம் சறுக்குவதால் வரும் காலங்களில் ஒரு வீரர் ஒரு வருடம் சிறப்பாக செயல்பட்டால் உடனடியாக இந்திய அணியில் வாய்ப்பளிக்காமல் 2 – 3 வருடங்கள் தொடர்ச்சியாக சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே வாய்ப்பளிக்க வேண்டும் என்று சுனில் கவாஸ்கர் கேட்டுக்கொண்டார்.

- Advertisement -

மேலும் ஐபிஎல் விளையாடினால் போதும் தேவையான பணம் கிடைத்துவிடும் என்பதால் உள்ளூர் கிரிக்கெட்டை நிறைய இளம் வீரர்கள் தவிர்ப்பது இந்திய கிரிக்கெட்டில் ஐபிஎல் ஏற்படுத்தியுள்ள மிகப்பெரிய பின்னடைவு என்றும் அவர் வேதனை தெரிவித்தார்.

இதையும் படிங்க : அவர் ஒன்னும் அவ்ளோ பெரிய ப்ளேயர் இல்ல – சர்ச்சைக்கு உள்ளான இளம் வீரரை விளாசும் முன்னாள் வீரர்

இந்த வருடம் மைதானங்கள் பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்ததால் வழக்கத்திற்கு மாறாக பேட்ஸ்மேன்களை விட உம்ரான் மாலிக், மோசின் கான், முகேஷ் சவுத்ரி, பிரசித் கிருஷ்ணா என அதிகமான இளம் வேகப்பந்து வீச்சாளர்கள் இந்தியாவிற்கு கிடைத்துள்ளதாகவும் அவர் பாராட்டினார்.

Advertisement