ஐபிஎல் 2022 : ப்ளே ஆஃப் சுற்று, பைனல் எங்கே நடைபெறுகிறது – வெளியான புதிய அறிவிப்பு இதோ

IPL 2022
- Advertisement -

ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள ஐபிஎல் 2022 கிரிக்கெட் தொடர் வெற்றிகரமான 2-வது வாரத்தைக் கடந்து ரசிகர்களை மகிழ்வித்து வருகிறது. இந்த 2 வாரங்களில் நடைபெற்ற பெரும்பாலான போட்டிகள் கடைசி வரை சென்று ரசிகர்களுக்கு பரபரப்பான திரில் தருணங்களை விருந்தாக படைத்தது. மேலும் இந்த வருட ஐபிஎல் தொடர் ரசிகர்களுக்கு ஒரு வித்தியாசமான அனுபவத்தை கொடுத்து வருகிறது என்றும் கூறலாம். ஏனெனில் இதற்கு முன் நிறைய கோப்பைகளை வென்று வெற்றிகரமான ஐபிஎல் அணிகள் என பெயரெடுத்து ரசிகர்களிடையே புகழ்பெற்ற மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகள் இதுவரை ஒரு வெற்றியை கூட பதிவு செய்ய முடியாமல் திண்டாடி வருகின்றன. அதிலும் நடப்புச் சாம்பியன் என்ற அந்தஸ்துடன் விளையாடி வரும் சென்னை இதுவரை பங்கேற்ற 4 போட்டிகளிலும் வரிசையாக மிகப் பெரிய தோல்விகளை சந்தித்து புள்ளி பட்டியலில் கடைசி இடமான 10-வது இடத்தில் திண்டாடுகிறது.

IPL

- Advertisement -

மும்பையில் ஐபிஎல் 2022:
அதேபோல் 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான ஐபிஎல் அணி என்ற சரித்திர சாதனை படைத்துள்ள ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் இதுவரை பங்கேற்ற 4 போட்டிகளிலும் மோசமான தோல்விகளை சந்தித்து புள்ளிப் பட்டியலில் 9-வது இடத்தில் திண்டாடுகிறது. இத்தனைக்கும் இந்த வருட ஐபிஎல் தொடரின் லீக் சுற்றுப் போட்டிகள் பெரும்பாலும் மும்பை நகரில் நடைபெறுவதால் சொந்த ரசிகர்களுக்கு முன்னிலையில் சொந்த மண்ணில் விளையாடும் இதர அணிகளுக்குக் கூட கிடைக்காத பொன்னான வாய்ப்பு மும்பைக்கு மட்டும் கிடைத்துள்ளது.

ஆனால் அதை பயன்படுத்த தவறிய அந்த அணி அடுத்தடுத்த சொதப்பல் ஆட்டங்களால் தோல்வி முகத்துடன் பரிதவித்து வருகிறது. மறுபுறம் பெங்களூரு, பஞ்சாப் போன்ற இதுவரை ஒரு கோப்பைகளை கூட வெல்லாத ஐபிஎல் அணிகள் அடுத்தடுத்த வெற்றிகளுடன் வெற்றி நடை போட்டு வருகின்றன. அத்துடன் நேற்று முளைத்த காளான்களான புதிய அணிகள் லக்னோ மற்றும் குஜராத் கூட மிகச் சிறப்பாக செயல்பட்டு அடுத்தடுத்த வெற்றியுடன் புள்ளி பட்டியலில் டாப் 4 இடத்திற்குள் ஜொலிக்கின்றன.

CskvsMi

பிளே ஆஃப்:
இப்படி முதல் 2 வாரங்களில் வித்தியாசம் நிறைந்த பரபரப்புடன் நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் 2022 தொடரில் தற்போது முதலாவதாக நடைபெறும் 70 போட்டிகள் கொண்ட லீக் சுற்றில் அபாரமாக செயல்பட்டு புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களைப் பிடித்து பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற அனைத்து அணிகளும் போராடி வருகின்றன. வரும் மே 22-ஆம் தேதி வரை நடைபெறும் இந்த லீக் சுற்று முடிவதற்குள் மும்பை, சென்னை போன்ற அணிகள் மீண்டெழுந்து வெற்றிப் பாதைக்கு திரும்பி பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறுமா என்ற எதிர்பார்ப்பு அந்த அணி ரசிகர்களிடம் காணப்படுகிறது.

- Advertisement -

முன்னதாக வழக்கமாக 7 – 8 நகரங்களில் நடைபெறும் ஐபிஎல் தொடர் இந்த வருடம் வீரர்களின் நலன் கருதி மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் நடைபெறுவதாக பிசிசிஐ அறிவித்தது. அதிலும் மார்ச் 26-ஆம் தேதி துவங்கிய இந்த தொடரில் மே 22-ஆம் தேதி வரை நடைபெறும் 95% போட்டிகளான 70 போட்டிகள் கொண்ட லீக் சுற்று முழுவதும் மும்பை, புனே ஆகிய நகரங்களில் உள்ள வான்கடே, டிஒய் பாட்டில், ப்ராபோர்ன், எம்சிஏ ஆகிய 4 மைதானங்களில் மட்டும் 25% ரசிகர்களுடன் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடருக்கான முக்கியமான பிளே – ஆப் சுற்று மற்றும் இறுதிப் போட்டி ஆகியவை எங்கு நடைபெறும் என்பது பற்றி பின்னர் அறிவிக்கப்படும் என பிசிசிஐ தெரிவித்திருந்தது.

IPL 2022 (2)

புதிய அறிவிப்பு:
இந்நிலையில் ஐபிஎல் 2022 தொடரின் பைனல் உட்பட முக்கியமான நாக்அவுட் சுற்று போட்டிகள் எங்கே நடைபெற உள்ளது என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி மாபெரும் இறுதிப்போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் இருக்கும் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமாக சாதனை படைத்துள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது. மேலும் இறுதிப் போட்டியில் விளையாடும் அணிகளை தீர்மானிக்கும் குவாலிபயர் போட்டிகள் உலகப் புகழ்பெற்ற கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மற்றும் லக்னோவில் உள்ள வாஜ்பாய் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

- Advertisement -

இது பற்றி பிசிசிஐ உயர் அதிகாரி ஒருவர் பேசியது பின்வருமாறு. “ஐபிஎல் பைனல் அகமதாபாத் நகரிலுள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது. அதேசமயம் லக்னோ மற்றும் கொல்கத்தா ஆகிய நகரங்களில் பிளே ஆஃப் சுற்றை பகிர்ந்து நடத்துவது பற்றி விவாதித்து வருகிறோம். இது பற்றி விரைவில் பிசிசிஐ முடிவு எடுக்க உள்ளது” என கூறினார்.

இதையும் படிங்க : பெங்களூரு அணியை ஜெயிக்கணுனா இதை நீங்கதான் செய்தாகனும் – பவுலர்களுக்கு கட்டளை போட்ட தல தோனி

அந்த வகையில் சாம்பியன் பட்டத்தை தீர்மானிக்கும் முக்கியமான பைனல் போட்டி வரும் மே 29-ஆம் தேதி நடைபெறும் நிலையில் பிளே ஆப் சுற்றுக்கான தேதிகளும் மைதானங்களும் அதில் எவ்வளவு சதவீத ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்ற அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாக உள்ளது.

Advertisement