பெங்களூரு அணியை ஜெயிக்கணுனா இதை நீங்கதான் செய்தாகனும் – பவுலர்களுக்கு கட்டளை போட்ட தல தோனி

Advertisement

கடந்த மார்ச் 26 ஆம் தேதி முதல் நடைபெற்று வரும் 15 ஆவது ஐபிஎல் தொடரானது தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதுவரை இந்த சீசனில் 21 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் இன்று முக்கியமான 22-வது லீக் ஆட்டத்தில் ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டூபிளெஸ்ஸிஸ் தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதுகின்றன. இந்த போட்டி ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

CSK-1

ஏற்கனவே இந்த தொடரின் முதல் நான்கு போட்டிகளிலும் தோல்வியை சந்தித்துள்ள சிஎஸ்கே அணி இந்த போட்டியில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்று காத்திருக்கிறது. அதேவேளையில் இந்தத் தொடரில் வழக்கத்தை பலமாக திகழ்ந்து வரும் பெங்களூர் அணி 4 போட்டிகளில் மூன்றில் வெற்றி பெற்று மிகப் பிரமாதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளது.

- Advertisement -

இதன் காரணமாக இன்றைய போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்கிற எதிர்பார்ப்பே அனைவரது மத்தியிலும் உள்ளது. அதே வேளையில் இந்த தொடரின் ஆரம்பத்தில் இருந்து சென்னை அணியின் பந்துவீச்சு மிகவும் மோசமாக இருந்து வருவதால் அடுத்தடுத்து தோல்விகளை சென்னை அணி சந்தித்து வருகிறது.

mukesh choudhary

இந்நிலையில் இந்த போட்டியில் எப்படியாவது பெங்களூர் அணியை வீழ்த்த வேண்டும் என்று பந்துவீச்சு துறையில் சிஎஸ்கே அணி நிறைய உழைப்பை அளித்து வருகிறது. அந்த வகையில் தோனி சென்னை அணியின் பந்து வீச்சாளர்களுக்கு இந்த பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் ஒரு முக்கிய டார்கெட் ஒன்றினை செட் செய்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

அதன்படி சிஎஸ்கே அணியின் பந்துவீச்சாளர்கள் பயிற்சியில் ஈடுபட்டபோது ஒவ்வொருவரையும் தனிப்பட்ட முறையில் சந்தித்து ஆலோசனை வழங்கிய தோனி சிஎஸ்கே அணியின் பவுலர்களுக்கு முக்கியமான ஒரு திட்டத்தை வகுத்துக் கொடுத்துள்ளார். அந்த வகையில் இன்றைய பவர் பிளே ஓவர்களில் குறைந்தது 3 விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும் என்று தோனி சென்னை அணியின் பந்து வீச்சாளர்களுக்கு டார்கெட் கொடுத்துள்ளாராம்.

இதையும் படிங்க : காயத்தால் தவித்து வரும் தீபக் சாகர் நடப்பு ஐ.பி.எல் தொடரில் இருந்து வெளியேற்றம் – காரணம் இதுதானாம்

அந்த வகையில் இன்றைய போட்டியில் சென்னை அணி பெங்களூரு அணியை வீழ்த்த வேண்டுமெனில் முதல் 6 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினால் நிச்சயம் சென்னை அணியின் வெற்றிக்கு கைகொடுக்கும் என தோனி கூறியுள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement