காயத்தால் தவித்து வரும் தீபக் சாகர் நடப்பு ஐ.பி.எல் தொடரில் இருந்து வெளியேற்றம் – காரணம் இதுதானாம்

deepak
- Advertisement -

சிஎஸ்கே அணியால் இந்த ஆண்டு மெகா ஏலத்தின் போது அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரராக தீபக் சாகர் திகழ்ந்தார். நடைபெற்று முடிந்த மெகா ஏலத்தில் 14 கோடி ரூபாய்க்கு அவரை சிஎஸ்கே அணி ஏலத்தில் எடுத்து இருந்தது. ஆனால் பிப்ரவரி மாதம் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரின் போது ஏற்பட்ட காயம் காரணமாக பாதிக்கப்பட்ட அவர் இந்த ஐபிஎல் தொடரின் முதல் பாதியில் விளையாட மாட்டார் என்ற செய்தி வெளியானதும் அது சிஎஸ்கே அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்பட்டது.

chahar

- Advertisement -

அதனைத் தொடர்ந்து தற்போது நடைபெற்று வரும் லீக் சுற்றுப் போட்டிகளில் முதல் 4 ஆட்டங்களிலும் சிஎஸ்கே அணி தோல்வியை தழுவியதில் அவர் அணியில் இல்லாததும் பெரிய பின்னடைவை ஏற்படுத்தியதாக பலரும் கூறி வருகின்றனர். பந்துவீச்சில் தற்போது பலமிழந்து காணப்படும் சிஎஸ்கே அணியாது தீபக்கின் வருகைக்குப் பிறகு பலமாக மாறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அதோடு ஏப்ரல் மாதம் இறுதி வாரத்தில் அணியில் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் தற்போது அவர் இந்த ஐபிஎல் தொடரில் இருந்து முற்றிலுமாக வெளியேறியுள்ளதாக ஒரு அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது சிஎஸ்கே ரசிகர்கள் மத்தியில் பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

Chahar4

பவர்பிளே ஓவர்களில் சிறப்பாக பந்துவீசி விக்கெட்டுகளை வீழ்த்தும் திறன் உடைய அவர் பேட்டிங்கிலும் ஓரளவு கை கொடுப்பார் என்பதால் மிக முக்கிய ஆட்டக்காரராக அவர் பார்க்கப்பட்டார். இந்நிலையில் இன்று வெளியான அறிவிப்பின்படி அவர் இந்த ஐபிஎல் தொடரில் இருந்து முற்றிலுமாக வெளியேறி உள்ளதாக கூறப்படுகிறது. அதோடு இந்த அறிவிப்பிற்க்கான காரணம் குறித்து சில தகவல்கள் வெளியாகியுள்ளன.

- Advertisement -

அதன்படி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற டி20 தொடரில் காயமடைந்த அவர் அதன்பிறகு தொடர்ச்சியாக பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி மற்றும் சிகிச்சை ஆகியவற்றை பெற்று வந்தார். இந்நிலையில் அவருக்கு ஏற்பட்ட காயம் குணமடையும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் தற்போது மீண்டும் அவர் மற்றொரு காயத்தினால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.

இதையும் படிங்க : பெங்களூரு அணியின் கேப்டனாக இருந்தும். சி.எஸ்.கே வீரர்களை பார்த்தவுடன் டூபிளெஸ்ஸிஸ் செய்த செயல் – ரசிகர்கள் பூரிப்பு

அதனால் இந்த சிகிச்சை முடிவடைய இன்னும் நாட்கள் எடுத்துக்கொள்ளும் என்பதனால் தீபக் சாகர் முற்றிலுமாக இந்த 2022ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரை தவற விடுகிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 4 போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ள சிஎஸ்கே அணிக்கு தற்போது அவரது இந்த விலகல் மிகப்பெரிய அடியாக விழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement