பெங்களூரு அணியின் கேப்டனாக இருந்தும். சி.எஸ்.கே வீரர்களை பார்த்தவுடன் டூபிளெஸ்ஸிஸ் செய்த செயல் – ரசிகர்கள் பூரிப்பு

Faf
Advertisement

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு பதினைந்தாவது ஐபிஎல் தொடரானது சென்னை அணிக்கு மிக மோசமாக அமைந்து வருகிறது என்றே கூறலாம். ஏனெனில் இதுவரை நடைபெற்ற 4 போட்டிகளிலும் சி.எஸ்.கே அணி தோல்வியை தழுவியுள்ளது. அதோடு புள்ளிப் பட்டியலிலும் பின்தங்கியுள்ளது. அதுமட்டுமின்றி பிளே ஆப் சுற்றுக்கு செல்வதற்கான வாய்ப்பையும் படிப்படியாக இழந்து வருகிறது என்றே கூறலாம்.

CSK vs SRH 3

இந்நிலையில் இன்று நடைபெற இருக்கும் முக்கியமான 22-வது லீக் ஆட்டத்தில் சென்னை அணி பெங்களூரு அணியை எதிர்த்து விளையாடுகிறது. இதன் காரணமாக தற்போது இரு அணி வீரர்களும் ஒரே மைதானத்தில் பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். இந்த போட்டியில் வெற்றி பெற்று பெற்றால் மட்டுமே மனதளவில் சிஎஸ்கே அணி வீரர்கள் மீண்டும் மகிழ்ச்சி அடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

இந்நிலையில் நேற்று சென்னை மற்றும் மும்பை வீரர்கள் ஒரே மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்ட போது நிகழ்ந்த சில தருணங்கள் தற்போது வீடியோவாக இணையத்தை கலக்கி வருகின்றன. அந்த வகையில் கடந்த பல ஆண்டுகளாக சென்னை அணியின் முக்கிய வீரராக இருந்த டூபிளெஸ்ஸிஸ் இந்த ஆண்டு பெங்களூர் அணிக்காக கேப்டன்சி செய்து வருகிறார்.

இருப்பினும் சென்னை அணியில் இருந்த நினைவுகளை எல்லாம் மறக்காத அவர் நேற்று பயிற்சிக்கு வந்தபோது சென்னை வீரர்களை கண்டதும் மிகவும் உற்சாகம் அடைந்தார். குறிப்பாக தோனி, பிளமிங், பிராவோ, உத்தப்பா, ஜடேஜா மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோரை பார்த்ததும் ஓடி சென்று கட்டிப் பிடித்துக்கொண்டார்.

- Advertisement -

அதோடு அவர்களுடன் மிகவும் உற்சாகமாகவும் பேசி மகிழ்ந்தார். இது குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதேபோன்று மற்றொருபுறம் விராட் கோலியும் தோனி, ஜடேஜா ஆகியோரை கட்டி அணைத்தது மட்டுமின்றி சி.எஸ்.கே அணியில் உள்ள அனைத்து வீரர்களிடமும் மிகவும் ஜாலியாக நேரத்தைக் கழித்தார்.

இதையும் படிங்க : ப்ராட்மேனும் லாராவும் சேர்ந்த கலவையை பாத்துருக்கீங்களா – நட்சத்திர பாக் வீரரை புகழ்ந்து தள்ளும் முன்னாள் வீரர்

இரு அணிகளும் களத்தில் எப்படி அதிரடியாக போட்டி போட்டுக் கொண்டாலும் களத்திற்கு வெளியே இப்படி நட்பாக இருப்பது ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது. இன்றைய போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்பதை காணவும் அனைவரும் ஆவலாக காத்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement