ப்ராட்மேனும் லாராவும் சேர்ந்த கலவையை பாத்துருக்கீங்களா – நட்சத்திர பாக் வீரரை புகழ்ந்து தள்ளும் முன்னாள் வீரர்

latif
- Advertisement -

சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடர்களில் சுமாராக செயல்பட்ட பாகிஸ்தான் சொந்த மண்ணில் மண்ணைக் கவ்வியது. 24 வருடங்கள் கழித்து பாகிஸ்தான் மண்ணில் முதல் முறையாக விளையாடிய ஆஸ்திரேலியா முதலில் நடந்த 3 போட்டிகள் கொண்ட உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை தொடரில் அதிரடியாக செயல்பட்டு 1 – 0 என்ற கணக்கில் கோப்பையை வென்று அசத்தியது. இருப்பினும் அதைத் தொடர்ந்து நடந்த 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் கொதித்தெழுந்த பாகிஸ்தான் 2 – 1 என்ற கணக்கில் கோப்பையை வென்று பதிலடி கொடுத்தது.

pak 1

- Advertisement -

அதை தொடர்ந்து நடந்த ஒரு போட்டி கொண்ட டி20 தொடரில் மீண்டும் பாகிஸ்தானை மண்ணை கவ்வி வைத்த ஆஸ்திரேலியா கோப்பையை வென்று தன்னை ஒரு டி20 உலக சாம்பியன் என நிரூபித்து நாடு திரும்பியது. அந்த அனைத்துப் போட்டிகளிலும் தனது அணியை வழிநடத்திய அதன் கேப்டன் பாபர் அசாம் ஒவ்வொரு போட்டியிலும் பேட்டிங்கில் தனி ஒருவனாக நின்று வெற்றிக்காக போராடினார்.

அசத்திய பாபர்:
முதலில் நடந்த டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்பட்ட அவர் அதன்பின் நடந்த ஒருநாள் தொடரில் அதைவிட அபாரமாக செயல்பட்டு அடுத்தடுத்த 2 சதங்களை அடித்து பாகிஸ்தானின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். அந்த தொடரில் 2 ஆட்டநாயகன் விருது உட்பட மொத்தம் 300 க்கும் மேற்பட்ட ரன்களை விளாசிய அவர் தொடர்நாயகன் விருதையும் வென்று பாகிஸ்தானில் மானத்தை காப்பாற்றினார் என்று கூறலாம்.

babar azam

கடந்த சில வருடங்களாகவே தனது அபார திறமையால் பாகிஸ்தான் பேட்டிங் துறையில் நிறைய ரன்களை குவித்து பல வெற்றிகளை தேடித் தந்து அந்த அணியின் முதுகெலும்பாக விளங்கி வருகிறார். அதிலும் சமீப காலங்களாக நிறைய ரன்களை குவித்து வரும் அவர் விராட் கோலி, சச்சின் டெண்டுல்கர் உட்பட நிறைய நட்சத்திரங்களின் சாதனைகளையும் உடைத்து தன்னை ஒரு உலகத்தரம் வாய்ந்த வீரராக நிரூபித்து வருகிறார்.

- Advertisement -

ப்ராட்மேன்+லாரா:
அதன் காரணமாக விராட் கோலி போன்ற வீரர்களை விட சிறந்தவர் என அந்நாட்டு ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் அவரை புகழ்ந்து வருகிறார்கள். தற்போது அந்த பட்டியலில் இணைந்துள்ள முன்னாள் பாகிஸ்தான் வீரர் ரசித் லதீப் ஒரு படி மேலே சென்று தங்கள் நாட்டின் ஸ்டார் வீரரை புகழ்ந்து தள்ளியுள்ளார்.

babar azam 1

இதுபற்றி தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “2019இல் நான் ஒரு ட்வீட் போட்டிருந்தேன். அந்த சமயத்தில் நாங்கள் இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் சென்றோம். அப்போது மியான்தத், வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ், இன்சமாம், யூசுப், யூனிஸ், சக்லைன் போன்ற நான் விளையாடிய சிறந்த வீரர்களின் பெயரை குறிப்பிட்டிருந்தேன். ஆனால் அவர் (பாபர்) அவர்கள் அனைவரையும் விட மேலே வந்து விட்டார். அப்படி நான் பேசி நீண்ட நாட்களான நிலையில் தற்போது அவர் அதைவிட மிகப் பெரிய வீரராக உருவெடுத்துள்ளார். இப்போது பாபர் அசாமை மட்டும் நான் ஒப்பிட்டு பேசவில்லை. விராட் கோலி, ரோகித் சர்மா, கேன் வில்லியம்சன் போன்றவர்களும் ஒருநாள் கிரிக்கெட்டில் சிறந்து விளங்குகின்றனர்”

- Advertisement -

“மேலும் சயீத் அன்வரை பற்றி பேசுவேன். அவரை விட ஒரு தனித்துவம் வாய்ந்த பேட்ஸ்மேன் இருக்க முடியாது. அவர் எந்தவித சந்தேகமுமின்றி பாகிஸ்தான் உருவாக்கிய நம்பர் ஒன் பேட்ஸ்மேன். அவரை மிக அருகில் இருந்த பார்த்த என்னை நம்புங்கள், அவர் பேட்டிங்கில் ஒரு அழகான வீரர். எனவே அதுபோன்ற வீரர்களுடன் ஒப்பிடுவது சரியாக இருக்காது. தற்போது வட்டத்துக்குள் 5 பீல்டர்கள் இருக்கின்றனர். ஆனால் அன்றைய காலகட்டங்களில் 4 பேர் மட்டுமே இருந்தனர். அதுபோன்ற சூழ்நிலை அப்போது இருந்திருந்தால் பந்துவீச்சாளர்களை இன்சமாம்-உல்-ஹக் அப்படியே தூக்கி தின்று இருப்பார். அந்த வகையில் இந்தத் தலைமுறையில் நிறைய தரமான வீரர்கள் உள்ளனர். இருப்பினும் அவர் (பாபர்) இந்தத் தலைமுறையின் பிராட்மேன் மற்றும் பிரைன் லாரா ஆவார். அதுதான் நிதர்சனம்” என கூறினார்.

lara

அதாவது பாகிஸ்தான் கண்ட மகத்தான கிரிக்கெட் வீரர்களான வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ், இன்சமாம், சயீத் அன்வர் போன்ற வீரர்களை காட்டிலும் பாபர் அசாம் தலைசிறந்த பாகிஸ்தான் வீரராக உருவெடுத்துள்ளதாக ரசித் லதீப் பாராட்டி உள்ளார். இருப்பினும் அவர்களது காலகட்டமும் இப்போதைய கால கட்டமும் ஒன்றில்லை என குறிப்பிட்டுள்ள அவர் விராட் கோலி, ரோகித் சர்மா போன்ற வீரர்களைப் போல அவரும் உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேன் என பாராட்டியுள்ளார்.

- Advertisement -

தற்போது எதிரணிகளை பந்தாடி வரும் அவர் அந்த காலத்தில் பட்டையை கிளப்பிய ஆஸ்திரேலியாவின் ஜாம்பவான் சர் டான் பிராட்மேன் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் பிரைன் லாரா ஆகியோரை போல் விளையாடி வருவதாக ரசித் லதீப் புகழ்ந்துள்ளார்.

இதையும் படிங்க : கவலை வேண்டாம் கப் நமதே! மும்பை ரசிகர்களுக்கு எனர்ஜி டானிக் கொடுத்த நீதா அம்பானி – பேசியது என்ன?

அதாவது இந்த நவீன கிரிக்கெட் தலைமுறையில் டான் பிராட்மேன் மற்றும் பிரைன் லாரா ஆகியோர் ஒன்றாக சேர்ந்து ஒரே கலவையாக ஒரே வீரராக பிறந்து விளையாடினால் எப்படி இருக்குமோ அவர் தான் பாபர் அசாம் என்று ரசித் லதீப் தாறுமாறாக புகழ்ந்து பாராட்டியுள்ளார்.

Advertisement